சபரிமலை ஐயப்பமாலை - துதி.

 

விருப்பமும் வெறுப்புமின்றி வினைப் பயன் எல்லா  முந்தன்
திருப்பதம் தன்னில் வைத்து திருப்தியும் திறனு முற்று  
ஒருப்பவர் மீதும் த்வேஷம் உற்றிடாது அன்பே பூண்டுன் 
திருப்பணி செய்து வாழத் திருவருள் செய்குவாயே 

வையமும் வானும் வாழ மறை முதல் தருமம் வாழ 
செய்யும் நற்செயல்கள் வாழத் திருவருள் விளக்கம் வாழ 
நையும் ஊழுடையார் தத்தம் நலிவகன்றினிது வாழ 
ஐயனாய் அப்பனானான அவர் பதம் வணக்கம் செய்வோம் 

மெய்யெல்லாம் திரு நீறாக வழியெலாம் அருள் நீராக   
பொய்யில்லா மனத்தராகி புலனெல்லாம் ஒருத்தராகி 
வெய்ய வேறற்றவுள்ள விளக்க முற்றான் பால் விம்மி 
ஐயனே ஐயப்பா என்பார் அவர் பாதம் வணக்கம் செய்வோம்.


Sabarimalai Ayyppa Maalai - Thuthi By. Sage - Guru Agasthiyar.
Viruppamum Veruppumindri Vinaip Payan Yellaa Mundhan 
Thiruppadham Thannil Vaiththu Thirupthiyum Thiranu Muttru
Oruppavar Meedhum Dhvaesham Uttridaadhu Anbae Poondun 
Thiruppani Seidhu Vaazhath Thiruvarul Seiguvaayae 

Vaiyamum Vaanum Vaazha Marai Mudhal Dharumam Vaazha 
Seiyum Narcheyalgal Vaazhath Thiruvarul Vilakkam Vaazha
Naiyum Oozhudaiyaar Thaththam Nalivagandrinidhu Vaazha 
Ayyanaai Appanaana Avar Padham Vanakkam Seivohm 

Meiyellaam Thiru Neeraaga Vazhiyelaam Arul Neeraaga
Poiyillaa Manaththaraagi Pulanellaam Oruththaraagi
Veiya Vaeraratravulla Vilaaka Muttraan Paal Vimmi 
Ayyanae Ayyappaa Yenbaar Avar Paadham Vanamkkam Seivohm.  


அகத்தியர் அருளிய ஐயப்ப பஞ்சரத்னமாலா

ஐயப்ப பக்தர்கள் ஒவ்வொரு நாளும், ஐயப்ப மந்திரங்கள், பக்தி பாடல்கள் படித்து வழிபாடு செய்வது நல்லது. அதிலும் அகத்தியர் அருளிய ஐயப்ப பஞ்சரத்னமாலா.

ஐயப்பன் பஞ்சரத்ன மாலை!
அத்வைத வஸ்துவாய் ஆதி பரமாத்மனாய்
அசலனாய் அகுண குணணாய்
அமரருக்கதிபனாய் அடியவர்க்கெளியனாய்
சுத்த ஸத்துவ பரப்ரஹ்ம சாட்சாத்கார
ஜோதியாய் தோன்றும் உந்தன் துரிய
லீலா வைபவங்கள் பல என்று மறை
சொல்லுகின்றதேதுமறியேன்
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா


பித்தனாய் நினது புகழ் பேசித் திரிந்து நின்
பெருமையை நினைத்து பாடிப் பிதற்றுகின்றேன்
பிழை பொறுத்தாள வருவாய்
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
தத்துவமனைத்தும் ஒரு முத்திரை உரைத்திட
தந்த சற்குருநாதனே
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா (1)

அந்தகாரத்திலே அருள் விளக்கேந்துவாய்
அடவியிலே வழி காட்டுவாய்
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
அரவு பலி மிருகங்கள் அலகை பேய் குறள்
கள்வர் அணுகாது காத்து வருவாய்
வந்தனை புரிந்து மனமலரிட்டு வாழ்த்துவோர்
மரபெல்லாம் ஓங்க வைப்பாய்
மாறாத நோய்க்கொரு மருந்தாகி மாற்றுவாய்
மரணபயமும் போக்குவாய்
இவ்விதம் நீ புரியும் எண்ணிலா விளையாடல்
எண்ணித் துதிக்க வசமோ ஏறாத மலையேறி
எய்தும் மெய்யடியவரை ஏற்பதுன் பாரமல்லவோ
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
சந்தண சுகந்த சுந்தர சுதந்திர சித்த சங்க சற்குருநாதனே
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா (2)

ஏந்து புகழ்சூழ்ந்த கனகாந்தகிரி ஓங்கி எழும்
ஏகாந்த ஜோதிமணியே
எண்ணுவோர் எண்ணியதெல்லாம்
பேரின்ப மழை பொழியும் முகிலே
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
நீந்தரிய பிறவிப் பெருங்கடல் கடத்தி
அருள்நிலை சேர்க்க வந்த துணையே
நெடும் பாலைவன வாழ்வில் நின்ற கற்பகமே
நிராலம்பமான மெய்ப்பொருளே
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா

மாந்தளிர் மடந்தையர் மருங்குற மகிழ்ந்தெம்மை
வாழ்விக்கும் கருணை வடிவே
வர நீல சேல சிங்கார சுகுமார
மதிவதனனே மணிகண்டனே
சாந்த சமரச சச்சிதானந்த சன்னதியில்
சரணமே சரணம் அருள்வாய்
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா (3)

நீயலாதென் குறைகள் கேட்பவருமில்லை ஒரு
நிழலில்லை என்று மனமோ நிலையில்லை
நினை அடையும் நியமங்களில்லை
நின் நினைப்பன்றி ஒன்றுமில்லை
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
ஆயிரம் பிழைகள் தனதடியவர் புரிந்தாலும்
ஆதரித்தருளும் அரசே அவதார மூர்த்தயே
அன்பான தெய்வமே ஆதி அய்யப்ப குருவே
தூயனே பம்பைத் துறைவனே சிவஞான ஜோதியே
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
ஈன்றவர் உன்னைத் தொட்டனைத்துய்ய நீ
யார் போன்றுளாயென சொல்லாது
தாயவள் மடித்தலம் இருந்து முத்திரை ஒன்று
தந்தை போல் வைத்த மகனே
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா (4)

அரியமறை புகழ்கின்ற அன்னதானம் செய்யும்
அருளாளர் வாழ்க வாழ்க
அனுதினமும் நின் கோவில் இலகு திசை
தொழுகின்ற அனைவரும் மகிழ்ந்து வாழ்க
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
விரத நியமங்களால் மெய் மறந்துனது பெயர்
விண்ணதிரவே முழங்கி வெற்பேறி வளர்படிகள்
மேலேறி வருகின்ற மெய்த் தொண்டர் வாழ்க
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா

தெரிய விளையாடி அற்புத சித்து காட்டும் உன்
திருநாம மகிமை வாழ்க
தேடும் இக்கவிமாலை பாடுவோர் இன்பச்
சிறப்பெல்லாம் ஓங்கி வாழ்க
சரியை கிரியா யோக ஞான சன்னதி
சரணம் சரணமே சரணம் ஐயா
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா (5)

அகத்தியரால் அருளப்பட்ட ஐயப்ப மாலை

 


தமிழ் முனியாம் அகத்தியரால் அருளப்பட்ட ஐயப்ப மாலை

சபரிமலை பிரதிஷ்டைக்கு வழிகாட்டியவரும், பந்தள வேந்தனுக்கு குருவாக இருந்து ஐயப்ப தத்துவத்தை உணர்த்தியவரும், விரதமுறைகளை வகுத்து கொடுத்தவரும், ஐயனை முதன்முதலில் பூஜித்தவரும் அகத்தியரே ஆவார். சாஸ்தாவின் மூலாதார க்ஷேத்ரமான சொரிமுத்தைய்யன் கோவிலில் தான் அகத்தியருக்கு சாஸ்தாவின் பூர்ண தரிசனம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. ஆர்யாங்க்காவு, அச்சன் கோவில் என ஆறு ஆதார சக்ரங்க்களுக்கான கோவில்களிலும் வழிபட்டவர் அகத்தியர். ஆக்ஞா சக்ரமான சபரிமலையில் ஐயனை போற்றி அவர் எழுதியதே இந்த தமிழ் துதி

அய்யன் ஐயப்பன் ஆனந்த சித்தனாக விளங்குவதால், சித்தர்களுக்கேல்லாம் தலைவரான அகத்தியர் ஐயனை இப்படி துதித்தார் போலும்.

இந்த ஐயப்ப மாலை ஸ்ரீ நொச்சூர் ஸ்வாமிகள் மூலமாக அகத்தியர் இவ்வுலகுக்கு அளித்த சொத்து. இது பக்தர்தம் துன்பங்களையும் துயரங்களையும் போக்கி நல்வாழ்வு அருளக்கூடியது.

"ஸ்ரீ ஐயப்ப மாலை"

வையமும் வானும் வாழ மறைமுதல் தருமம் வாழ
செய்யும் நற்செயல்கள் வாழத் திருவருள் விளக்கம் வாழ
நையும் ஊழுடையார் தத்தம் நலிவு அகன்று இனிது வாழ
ஐயனாய் அப்பனானான் அவர்பதம் வணக்கம் செய்வோம்.

மெய்யெல்லாம் திருநீறாக விழியெலாம் அருள் நீராகப்
பொய்யிலா மனத்தராகிப் புலன் எலாம் ஒருத்தராகி
வெய்ய வேறற்றவுன் விளக்கமுற்றன் பால் விம்மி
ஐயனே அப்பா என்பார் அவர் பதம் வணக்கம் செய்வோஒம்.

சக்தியெலாம் சபரிமலை தத்வமெலாம் சபரிமலை
சித்தியெலாம் சபரிமலை மோனமெலாம் சபரிமலை
முக்தியெல்லாம் சபரிமலை சித்பரமாம் சபரிமலை
புத்தியெல்லாம் சபரிமலை போற்றிடுவாய் நீ மனமே!

ஓங்காரமான மலை ஓதுமறை ஓங்குமலை
ஹ்ரீங்கார மந்த்ர மலை ரிஷிகணங்கள் ஏத்தும் மலை
ஆங்காரம் அழிக்கும் மலை ஆனந்தம் கொழிக்கும் மலை
பாங்கான சபரிமலை பல்வளம்சேர் மலை வளமே!

ஹரிஹர புத்ரா போற்றி அன்பான குருவே போற்றி
புஷ்களை ரமணா போற்றி என்னையாள் சத்குருவே போற்றி
கண்கண்ட நாதா போற்றி சபரிமலை வாசா போற்றி
கஞ்சமலர்ப் பாதா போற்றி ஐயனே போற்றி! போற்றி!

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!
ஸ்வாமியே சரணம் ஐயப்பா!
ஸ்வாமியே சரணம் ஐயப்பா! 


ஐயனே போற்றி போற்றி
முந்திய சிவனார் போற்றி
மூர்க்கனும் அசுரன் போற்றி
இந்திர வரவும் போற்றி
ஈசனார் வேசம் போற்றி
பந்தடி கமலம் வெற்றி
வந்ததோர் விரதம் போற்றி


விருத்தம்,

1. ஆனைமுகத்தோன் தம்பி அருள் குமரனுக் கிளையோன்
வானவர் போற்றும் வாணி வந் தெனக்கு அருள வேனும்
சேனையில் தலைவர் போற்றும் தென் குளத்தூரிலையன்
கானக விளையாட்டெல்லாம் கருத்துடன் போற்றாய் நெஞ்சே

2. அந்தணர் முனிவர் சூழ் அற்புத சபையைப் போற்றி
மந்திரம் கையிலேந்தும் வாழ்குளத்தூரான் மீதில்
சிந்தையில் உதித்த செல்வம் செப்புமென் கவி விளங்க
கந்தனும் குருவும் வாணி கஜமுகன் காப்பதாமே

3. சாஸ்தா நமக்குண்டு தாய் போல் வருவார் இந்தத் தனி வழிக்கே
பார்த்தால் நமக்கு பயமேது மில்லை பயந்து பயந்து
ஆற்றாமல் சொல்லி அபய மிட்டோடி வரும் சுரர்தமை
கார்த்தே வரும் கடிய குன்றேறிய காவலனே

4. வாழையும் தெங்கும் வரிகை பலாவுடனே மாங்கனியும்
சோலையும் அருள் வண்டுலாவும் குளத்தூர் பதியில் சென்றால்
கங்கா நதிக்கும் ஹிமசேது மட்டுக்கும் இந்த கலியுகத்தில்உன் காலில் அதிசயம் போல் கண்டதில்லை என்பவர்க்கு
சிங்கார வஞ்சிமலையேறி சனிவாரம் தொழுதவர்க்கு
மங்காத சர்வ பீஷ்டமும் கொடுப்பதாமே