அஃதாவது, சுத்த மாயா மண்டலத்துக்கு, அதீதமாய், சிற்பர வியோமமாகிய பரமண்டலத்தில் விளங்குகின்ற சிவ பரம்பொருளின் குணஞ் செயல்களை விரித்தோதிப் பரவுவதாம். பரவியோமம் பராகாசம் எனவும் ஞான நூல்களால் குறிக்கப்படுவது. இதனை ஞானாகாசம் எனவும், ஞான சபை எனவும் சான்றோர்கள் புகழ்ந்தோதுவதால் பராகாசப் பரசிவத்தைச் “சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம்” எனச் சிறப்பித்தோதுகின்றார்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3904.
அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைகள்எலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளும் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
உரை:
ஞான சபையில் விளங்குகின்ற தெய்வமாகிய சிவமே திருவருள் ஞானமாகிய சோதியை யுடையதும், என்னை அருள் நெறிக்கண் நிறுத்தி ஆண்டு கொண்டதும், தில்லையம்பலத்தே ஆடு முகத்தால் உயிர்கட்கு இன்பத்தைத் தருவதும், பொருள் நிறைந்த வேதங்கள் யாவும் போற்றுகின்றதும், ஞான யோக நெறியின் முடிவிலும் தத்துவங்களின் உச்சியில் உயர்ந்து விளங்கும் நாத தத்துவத்தின் முடிவில் விளங்குவதும், அஞ்ஞானமாகிய இருளால் வரும் துன்பத்தைப் போக்கி இன்ப ஒளியினைத் தந்தருளுவதும், நான் எண்ணியவற்றை எண்ணியவாறு எய்துவிப்பதும் என்னுடைய தெளிந்த பொருள் நிறைந்த பாடல்களை ஏற்று மகிழ்ந்து என்னைச் சிவமாக்குவதும் ஆகும். எ.று.
திருவருள் ஞானத்தையே தனக்குத் திருவுருவாகக் கொண்ட தெய்வம் என்பாராய், “அருட் சோதித் தெய்வம்” எனவும், உயிர்கட்குத் திருவருள் ஞானம் அருளி ஆளாகக் கொள்கின்ற தெய்வம் என விளக்குதற்கு, “அருட் சோதித் தெய்வம் என்னை ஆண்டு கொண்ட தெய்வம்” எனவும் தெரிவிக்கின்றார். அம்பலத்தில் நிகழ்த்துகின்ற திருக்கூத்து ஆன்மாக்கட்கு இன்பமாகிய உறுதிப் பொருளை நல்குவதென்பது பற்றி, “அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்” என ஓதுகின்றார்.மெய்யுணர்வுக்குரிய மெய்ப்பொருளனைத்தும் தன்னகத்தே கொண்ட வேதங்களால் துதிக்கப் படுவது பற்றி, “பொருட் சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்” என்றும், ஞான நூல்களை ஓதியும் உணர்ந்தும் ஞான நெறியினின்றும் பெறலாகும் ஞானப் பெரும் பொருளாதலின் சிவனை, “போதாந்தத் தெய்வம்” என்றும், தத்துவ நெறியில் ஆன்ம தத்துவம், வித்தியா தத்துவம், சிவ தத்துவம் ஆகிய மூன்றிற்கும் உச்சிக் கண்ணதாகிய நாத தத்துவத்தின் அந்தத்தில் பரசிவமாய் விளங்குதலால், “உயர் நாதாந்தத் தெய்வம்” என்றும் விளக்குகின்றார். ஆணவம், மாயை, கன்மம் என்று மூன்றாலும் ஆன்ம ஞானத்தை இருள் படுத்தித் துன்பமுறுவிக்கும் பாசத் தொடர்பை நீக்கி ஞான ஒளி தந்து உய்விக்கும் சிறப்புடைமை பற்றி, “இருட் பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம்” என்றும், இருள் நீங்கிய விடத்து எய்துதற்குரிய இன்ப வகையை நான் எண்ணியபடியே எனக்கு எய்துமாறு அருளுகிறது என்பாராய், “எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கருளும் தெய்வம்” என்றும் உரைக்கின்றார். சிவஞானத்தால் சிவத்தைத் தெளிந்து அது பொருளாகத் தாம் பாடும் பாட்டுக்களை, “தெருட் பாடல்” எனவும், அவற்றை மகிழ்ந்து ஏற்றுக் கொண்டு மன மொழி மெய் முதலிய கரணங்களைச் சிவ கரணமாக்குவது பற்றி, “தெருட் பாடல் உவந்து எனையும் சிவமாக்கும் தெய்வம்” எனவும், அது ஞான சபையில் விளங்குகின்ற தெய்வமாகும் என ஆன்மாக்கள் தெருண்டு உய்யும் பொருட்டு என்றற்கு, “சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்” எனவும் தெரிவிக்கின்றார்.
இதனால், சிவ பரம்பொருளின் பரந்து பட்ட அருட் பண்புகளை விரித்தோதியவாறாம். இக்கருத்தையே இனி வரும் பாட்டுக்களிலும் உரைத்துக் கொள்க.
அசுவமேத யாகம் என்பது ஒரு பெரிய வேள்வியாகும். ஒரு நாட்டின் அரசன் தனது அரச குதிரையை தனது வெற்றிக் கொடியை அதன் முதுகுப்பகுதியில் கட்டி
நாடு முழுவதும் திரிய விடுவான். அந்தக் குதிரையுடன் அவனோ அல்லது அவனது அரச பிரதிநிதியோ பெரும்படையுடன் உடன் செல்வார்கள். அதைப் பிடித்து மடக்கும் வேற்று அரசன் மேல் படையெடுப்பு நடத்தி அவனை வெற்றிகொண்ட பின் குதிரை மேலும் தொடர்ந்து செல்லும், மற்ற மன்னர்களெல்லாம் அவனது ஆட்சியை ஏற்றுக் கொண்ட பிறகு “சக்கரவர்த்தி” என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்வான் இதுவே அசுவமேத யாகத்தின் நொக்க்கம் ஆகும்
கடவுளுக்காக பலியிடுதல்' என தவறான அர்த்தம் கொள்ளப்படுகிறது. ஆனால், வேத யாகங்களில், யாகம் என்பது விலங்குகளை பலியிடுதல் என அர்த்தம் அல்ல. ஏனெனில்,
இது ஒரு குறியீட்டு செயல் அல்லது யாகத்தின் விலங்குகள் களிமண் உருவங்கள் அல்லது தானியங்களாக இருக்கலாம் அல்லது அவை குறிப்பிட்ட சொற்களாக இருக்கலாம். மனிதர்களை கொல்வது அல்லது யாகம் செய்பவர் என்று ஒருபோதும் அர்த்தப்படுத்த முடியாது.
"தயிர், தேன், நெய், நீர் மற்றும் தானியங்கள் ஆகியவை(ஐந்தும்) விலங்குகளின் வடிவங்கள்"- தைத்ரிய சம்ஹிதை
வசிஷ்ட சம்ஹிதை 11.12 இல் குதிரையைப் பற்றி பின்வருமாறு கூறுகிறது.
"பரலோகம் உங்கள் உயர்ந்த பிறப்பு, காற்று உங்கள் தொப்புள், பூமி உங்கள் வீடு."
இங்கே குதிரை பலியிடப்பட்ட நெருப்பு என குறிக்கப்படுகிறது.
'அஸ்வமேத என்பது சூரியன் என்று பொருள்
பலியிடப்பட்ட குதிரையின் தலை விடியல், கண் சூரியன், மூச்சு காற்று, காது சந்திரன், கால்கள் காலாண்டுகள், விலா எலும்புகள் இடைநிலை காலாண்டுகள், இரவும் பகலும் கண் சிமிட்டுதல், மூட்டுகள் அரை மாதங்கள் , மாதங்கள், கால்கள் பருவங்கள், தண்டு ஆண்டு, முடி கதிர்கள் (சூரியனின்), நக்ஸ்.சாத்ரா வடிவம், எலும்புகள் நட்சத்திரங்கள், சதை மூடுபனி, முடி செடிகள், வால் முடிகள், வாய் அக்னி, திறந்த (வாய்) வைஸ்வனாரா, தொப்பை கடல், ஆசனவாய் வளிமண்டலம், விந்தணுக்கள் வானத்தையும் பூமியையும், சவ்வு வீரல் அழுத்தும் கல், விதை சோமா தைத்ரிய சம்ஹிதா 7.5.25 சொல்லபடுகிறது ழுழு பிரபஞ்சமும் குதிரையாக சொல்லபடுகிறது
மனிதர்களின் உணர்வுகளை அமைதியற்றதாகவும், அவற்றின் இயல்பில் அசைந்து கொண்டிருப்பதாகவும் குறிக்கிறது. இந்த சூழலில், அஸ்வமேதா என்பது ஒரு மனிதன் தனது கீழ் உணர்வுகளை வென்று ஆன்மீக ஜீவனின் நிலைக்கு உயரக்கூடிய புலன்களின் மீது சரியான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.
அசுவமேத யாகம் என்பது என்ன யோகவழி விளக்கம் என்ன என்பதை பார்ப்பொம்
அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில்
பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே
இங்கு ‘அண்டம்’ என்பது உலகம், நவகோள்கள், பால்வீதி மண்டலம், பிற நட்சத்திர மண்டலங்களை உள்ளடக்கிய பிரபஞ்சம்.
‘பிண்டம்’ என்பது உடல்.
அண்டத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் பிண்டமாகிய உடலில் உள்ளதாக இந்தப் பாடல் நமக்குத் தெரிவிக்கின்றது.
அதாவது மண், நீர், தீ, காற்று, ஆகாயம் என்கிற பஞ்ச பூதங்கள் அண்டத்திலும் நிறைந்துள்ளன. பிண்டமாகிய உடலிலும் அணுக்கள்
நிறைந்துள்ளன. இந்த பஞ்ச பூதங்கள் தான் உடலில் எலும்பு, தசை, ரத்தம், மூளை போன்ற உடல் கட்டமைப்புகளை உருவாக்குகின்றன !
யோகி ஒருவர் ஏழு சக்கரங்களையும் காற்றின் மூலம் உயர்த்தச் செய்தான். காற்றினை அடக்கிதான் யோக நெருப்பை ஏழு சக்கரங்களின் வழியாக ஏற்ற வேண்டும். இதை பூரிக்கும் குதிரை என்பர் (அசுவமேத யாகம்). ஆகாச நடனம்,அயிரம் சுரியன்,ஜொதி என்று சொல்வர் அப்படி யோகம் புரிந்து ஒருவர் தெய்வ நிலை அடைவர் !
இதை உறுதி படுத்தும்படியாக ராமன் இறுதி காலம் ராமன் கடம்பவன சித்தரிடம் பாதம் பனிந்து ஆன்மிகத்தில் உயர் நிலை அடைந்தார் என்று எற்கனவே அகத்தியர் புலஸ்த்தியருக்கு சொல்லிய ரகசியம் ராமன் யார் வீடியோவை வெளியிட்டு உல்ளொம் மிண்டும் பார்க்கவும் !
புராணங்கள் உணர்த்தும் யோகத்தை மறைமுகமாக சொல்லவந்தவை என்பது தெளிவாகிறது. மெலும் பயணிப்போம் சித்தர் ராஜ்ஜியத்தில் தொடரும் !
வாயுபுத்திரன் எனப்படும் அனுமனைக் கண்டால், காற்றில் கலக்கும் தூசுகள்போல துர்சக்திகள் பறந்து ஓடும்.
ஸ்ரீ ராமா என சொன்னாலே வாழ்க்கை வளம் பெற்று செல்வ செழிப்பு உண்டாகும். இவ்வளவு ஏன், இராமாயணத்தை முழுமையாக படிக்காமல் போனாலும், ராம் என்ற இரண்டெழுத்து மந்திரத்தை உச்சரித்தாலே ஆணவம், காமம், பேராசை ஆகியவை எல்லாம் அழிந்து அன்பும், அறிவும் பெருகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி மனிதனிடம் இருக்கும் மனிதத்தை அழிக்கக் கூடிய விஷயங்களை எல்லாம் ‘ராமா’ என்ற ஒற்றை பெயர் செய்வதால், நாம் வாழ்வின் அனைத்து வித நன்மைகளையும் அருளையும் பெற முடியும்.
கலியுகத்தில் நாம தர்மமே தர்மங்களுக்கு ராஜா.
பகவான் நாமம் சொல்ல குரு கூட தேவை இல்லை, பகவான் நாமமே குரு.
ராம நாமம், பாதை “மீறிவர்க்கும்-தவறிவர்க்கும்” மருந்து, சரியான பாதையில் செல்பவருக்கு விருந்து. நாமம் சரியான நேரத்தில் ஞானத்தை அளித்துவிடும்.
நாமத்துக்கு விலக்கு இல்லை.
நாம் ஆராதனை செய்யும் பகவான் நாமம், நம்மை ஆதரிக்கும்
நாம நிதி பெருக, நம் நிதியும் பெருகும்.
நாமம் தாய்-தந்தை போன்றது.
நாமம் தாய் குலத்தையும் தந்தை குலத்தையும் கரை சேர்க்கும்.
பவரோக அருமருந்து நாமம்.
நாம தர்மம் பயத்தை போக்கி மோஷத்தை தரும்.
காமதேனு, சிந்தாமணி, கல்பக விருட்சம் எதையும் கொடுக்கும், ஆனால் நாம-தர்மம், நல்லதையே தரும்.
அரிமளம் கோடகநல்லூர் சுந்தர ஸ்வாமிகள் கோவிலில் வீற்றிருக்கும் சுந்தர ஸ்வாமிகளின் திருஅவதாரக் கதையை கேட்பதே புண்ணியமாகும்.
1831 ஆம் வருடம் டிசம்பர் 3 ஆம் தேதி சனிக்கிழமை அன்று அனுஷ நட்சத்திரம், ரிஷப லக்னத்தில் அமாவாசை நாளில் திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் அவதரித்தார். ஸ்ரீ சுந்தர சுவாமிகள். ஸ்ரீவத்ஸ கோத்ரத்தைச் சேர்ந்த யக்ஞேஸ்வர சாஸ்திரிகள் காமாட்சி அம்மாள் தம்பதியின் 2வது மகனாகப் பிறந்தார். மூத்தவன் குப்பாணி சிவம்.
அப்பய்ய தீட்சிதரின் பரம்பரையில் அவதரித்தவர் சுந்தர ஸ்வாமிகள். இவர் பிறந்த ஒண்ணரை ஆண்டிலேயே இவரின் பெற்றோர் இறந்தனர். எனவே தாய்மாமனான வேங்கடசுப்பய்யர்தான் சுந்தரத்தை வளர்த்து வந்தார். சிறுவர்களான குப்பாணி சிவம் மற்றும் சுந்தரம் இருவரும் கல்வி பயிலுவதற்காக கங்கை கொண்டானில் இருந்து பக்தமடைக்கு இடம் பெயர்ந்தனர். சுந்தரத்துக்கு 5 வயதில் அட்ச அப்பியாசமும் ஏழு வயதில் உபநயனமும் நடைபெற்றது. பத்தடையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ண கனபாடிகளிடம் வேத அத்யயனம் பயின்ற சுந்தரம். கல்விகேள்விகளில் சிறந்து விளங்கினான். இவனது திறனைக் கண்டு வியந்த ஊர்க்காரர்கள் தெய்வீகப் பிறவியப்பா சுந்தரம். இப்படியொரு புள்ள நம்ம ஊர்ல வளர்றதுக்கு நாமெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும் என்று பெருமிதம் கொண்டனர்.
சிவபூஜை செய்வதில் ஈடுபாடு கொண்ட சுந்தரம் தினமும் ஒரு லட்சம் முறை பஞ்சாட்ர மந்திரத்தை ஜபித்து வந்தான். மேலும் யாகம், தவம் ஆகியவற்றிலும் கரை கண்டிருந்தான் சுந்தரம். நெல்லை மாவட்டம் அடைச்சாணி எனும் கிராமத்தைச் சேர்ந்த ராமசுப்பய்யரின் மகள் ஜானிக்கும் சுந்தரத்துக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது சுந்தரத்துக்கு வயது பதினாறு. தன்னுடைய மாப்பிள்ளையின் சிவபக்தியைக் கண்டு வியந்த ராமசுப்பய்யர். சிவ பூஜைக்கான நியமங்கள் சிலவற்றை அவருக்கு போதித்தார். அத்துடன் நெடுநாளாக தான் பூஜித்து வந்த பாணலிங்கம், ஸ்ரீநடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் ஆகிய விக்கிரகங்களையும் வழங்கினார்.
இந்த நிலையில் அடைச்சாணியில் உள்ள விஸ்வேஸ்வர சாஸ்திரிகள் என்பவரிடம் மந்திர உபதேசம் பெற்ற சுந்தரம். இவரை தமது குருவாகவும் ஏற்றார். இதையடுத்து பத்தமடைக்கு திரும்பிய சுந்தரம் ஸ்வாமிகள் தன் வாழ்க்கை முறையை மாற்றலானார். கணவரின் எண்ணத்துக்கு தக்கபடி சுவாமிகளின் துணைவியார் ஜானகியும் தியாகங்கள் சிலவற்றைச் செய்தார். பின்னர் தனது குருவின் ஆணைப்படி துணைவியார் ஜானகிக்கு மந்திரங்கள் உபதேசித்து அவரை தனது முதல் சீடராக ஏற்றார். துணைவியாரின் விருப்பமும் இதுவே, இதையெடுத்து சில ஆண்டுகளில் சுவாமிகளை அறிந்த அன்பர்கள் பலர் இவருக்கு சீடர்களானார்கள்.
ஒருமுறை தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள கோயில்கள் தரிசிக்க யாத்திரை மேற்கொண்டார் சுவாமிகள். பயணத்தின்போது சூத சமஹிதை குறித்து உரை நிகழ்த்தினார். (சிவபக்தி, சிவபூஜை, ஆசனங்கள் அஷ்டமாஸித்தி அஷ்டமாயோகம் ஆகியவை குறித்து சூத புவராணிகர் அருளியதே சூத சம்ஹிதை) சிவபூஜை செய்தார்.
புனித பூமியாம் காசிக்குச் சென்று கங்கையில் நீராடி காசி விஸ்வநாதர் விசாலாட்சி மற்றும் அன்னபூரணியை தரிசிக்க விரும்பிய சுவாமிகள் யாத்திரை புறப்பட்டார். மதுரை, திருச்சி, திருவையாறு, மாயவரம், சீர்காழி, சிதம்பரம், வேதாரண்யம், விருத்தாசலம் முதலான தலங்களை தரிசித்து அங்கு உள்ள பக்தர்களுக்கு ஆசி வழங்கி பின்னர் காசியை அடைந்தார். கங்கையில் நீராடினார். கோயில்கள் பலவற்றையும் தரிசித்தார். காசியில் உள்ள யோகிகள் பலரிடமும் உரையாடினார். அப்போது இறை பலமும் எண்ணற்ற கலைகளும் கைவரப்பெற்ற மகா கணபதி சுவாமிகளை சந்திக்க நேர்ந்தது. அதுவும் எப்படி?
தொடர்ந்து ஆறு மாத காலம் நீருக்கு அடியிலேயே வசிக்கும் யோகப் பயிற்சியை அறிந்த மகா கணபதி சுவாமிகளை அவர் கங்கை நதிக்குள் தவம் இருப்பதை அறிந்து தானும் அங்கு சென்று சந்தித்தார் சுந்தர ஸ்வாமிகளை இருவரும் பல அரிய தகவல்களை பரிமாறிக் கொண்டனர். மணிகர்ணிகா கட்ட படித்துறையில் இந்த இரண்டு துறவிகளது கல் விக்கிரகங்களை இன்றைக்கும் தரிசிக்கலாம்.
காசியிலிருந்து நெல்லைச் சீமைக்கு திரும்பிய சுந்தர ஸ்வாமிகள் பத்தமடை, கோடகநல்லூர் சுத்தமல்லி, கடையம் முதலான தலங்களுக்குச் சென்றார். (தனது குரு திருச்சமாதி அடைந்த அடைச்சாணிக்கும் சென்று தரிசித்தார்) கடையத்தில் சேஷாசல தீட்சிதர் என்பவரை சந்தித்த பின் சன்னியாசத்தைப் பெற்றார். அப்போது சுவாமிகளுக்கு வயது 21.
சுவாமிகள் ஒருமுறை சுத்தமல்லியில் தங்கி இருந்தபடி தினமும் சொற்பொழிவாற்றி செய்து வந்தார். திரளென குவிந்திருந்த பக்தர்கள் இடையே வடமொழியில் ஸ்லோகங்கள் சொல்லி அதற்கு தமிழில் விளக்கமும் அளித்தார். கட்டுக்குடுமியும் பூணூலையும் சுவாமிகள் உபந்யாசித்து வந்தபோது ஒருவர் திடீரென எழுந்து உள்ளே சென்றார். சில நிமிடங்களில் மீண்டும் திரும்பி வந்தார்.
அவரைக் கண்டு பலரும் அதிசயித்தனர். காரணம் சுவாமிகளது தலையில் கட்டுக்குடுமி இல்லை. திருமேனியில் பூணூலும் இல்லை. சட்டென அனைத்தையும் துறந்துவிட்டு தன் உபந்யாசத்தை தொடர்ந்தார். இதன், பின்னர் சுவாமிகளின் துறவு வாழ்க்கை முழுமை அடைந்ததாகக் கருதினர் அவரது சீடர்கள்.
தனது 23 ஆம் வயதில் நெல்லை சங்கர மடத்தில் சில காலம் வசித்த சுவாமிகள் அங்கு எதிர்பார்த்த அமைதி நிலை கிடைக்கப் பெறாததால் நெல்லையை அடுத்த கோடக நல்லூரை அடைந்தார். இவர் தாமிரபரணிக் கரையோரத்தில் நெடுநெடுவென வளர்ந்திருக்கும் நாணல் மற்றும் மூங்கில் புதர்களுக்குள் சென்று எவரும் தன்னை அணுக முடியாத நிஷ்டையில் ஆழ்ந்திருப்பார். சில தருணங்களில் அப்படியே சமாதி நிலையை எய்தி விடுவார் சுவாமிகள். அப்போது சுவாமிகளுக்கு உணவு எடுத்து வரும் சீடர்கள் சுவாமிகளை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க இயலாமல் உணவுடன் திரும்பிச் செல்வார்கள். ஆனால் பக்தனின் பசியை பரமன் பொறுப்பாரா? அன்ன ஆகாரம் எதுவுமின்றி சுவாமிகள் நிஷ்டையில் இருக்கும்போது ஆதிசிவனே அந்தணர் வடிவில் அன்னப் பாத்திரத்துடன் தோன்றியதுடன் சுந்தர ஸ்வாமிகளுக்கு தரிசனமும் அருளியுள்ளாராம்.
கோடகநல்லூரில் உள்ள சங்கர மடத்தில் தங்கி சொற்பொழிவு ஆற்றி இருக்கிறார் யோகிகளுக்கே உரித்தான பரிபக்குவ நிலையை அடைவதற்கு கோடகநல்லூர் வாசம் உதவியதால் பின்னாளில் ஸ்ரீ கோடகநல்லூர் சுந்தர ஸ்வாமிகள் ஆனார்.
ஒரு தீபாவளி தினம். காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் உபந்யாசம் செய்தார் சுந்தர ஸ்வாமிகள். ராமச்சந்திர மேத்தா உள்ளிட்ட அடியார்கள் பலரும் திரளான பக்தர்களும் அங்கு இருந்தனர். இரவு, சாஸ்திரம் குறித்த விளக்கங்களை தெளிவுற அறிந்த சுவாமிகள் பரிசுத்தமான ஒவ்வொருவரது உள்ளங்கையிலும் அக்னி பகவான் ஆட்சி செலுத்துகிறார். எனவே நெருப்பின் தாக்கம் உள்ளங்கையில் எப்போதும் குடிகொண்டிருக்கும். ஆகவே உள்ளங்கையில் படாமல் உணவைச் சாப்பிடுவதே உத்தமம் என்றார். இதை ராமச்சந்திர மேத்தா கூர்ந்து கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் காமாட்சி அம்மன் கோயில் அர்ச்சகரான சுப்ரமண்ய பட்டர் தெய்வ அலங்காரம் மற்றும் நைவேத்திய தயாரிப்புக்காக புஷ்பங்கள், அரிசி மற்றும் ஒரு கொட்டாங்கச்சியில் நெருப்புத் துண்டுகள் ஆகியவற்றுடன் அங்கு வந்தார். திடீரென மழை பெய்யவே கொட்டாங்கச்சியில் இருந்த நெருப்புத் துண்டங்கள் மழையில் நனைந்து அணைந்தது. இது சுவாமிகளது திருவிளையாடல் என்பதை அப்போது எவரும் உணரவில்லை.
சுவாமிகளை வணங்கிய சுப்ரமண்ய பட்டர் பக்தர் எவரையேனும் அனுப்பி நெருப்புத் துண்டங்கள் கிடைக்க உதவும்படி வேண்டினார். உடனே சுவாமிகளும் அங்கு இருந்த ஆவுடையப்ப பிள்ளை என்பவரை அழைத்து அடுக்களைக்குச் சென்று நெருப்புத் துண்டங்களை எடுத்து வரும்படி உத்தரவிட்டார். அப்போது ராமச்சந்திர மேத்தாவுக்கு வந்தது ஒரு யோசனை. மெள்ள சுவாமிகளை நெருங்கி பூஜைக்கு தேவையான நெருப்பை தங்களது உள்ளங்கையில் இருந்து எடுத்துத் தர முடியாதா சுவாமி? என்று பவ்யமாகக் கேட்டார். அங்கு இருந்தவர்கள் அதிர்ந்தனர். சுவாமிகளையா சோதிப்பது? என்று முணுமுணுத்தனர்.
ராமச்சந்திர மேத்தாவைப் பார்த்துப் புன்னகைத்த சுவாமிகள் தாங்கள் மேலே அணிந்திருக்கும் வஸ்திரத்தைத் தாருங்கள் என்று வாங்கிக் கொண்டார். வஸ்திரத்தைத் தனது உள்ளங்கையில் பரபரவென தேய்த்தார். அவ்வளவுதான் தகித்து எழுந்தது நெருப்பு இதைக்கொண்டுபூஜைக்கு தேவையான அக்னி தயார் செய்யப்பட்டது. இதைக் கண்டு விதிர்த்துப் போன மேத்தா சுவாமிகளின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அவரை ஆசிர்வதித்த சுவாமிகள் இது இறைவனின் விளையாடலப்பா! கலங்க வேண்டாம் என்றார்.
சிருங்கேரி ஜகத்குரு மகாசன்னிதானம் ஒருமுறை திருநெல்வேலிக்கு விஜயம் செய்திருந்தார். சுந்தர ஸ்வாமிகளைப் பற்றி அறிந்திருந்ததால் அவரை தான் தங்கியிருந்த இடத்துக்கு அழைத்து அவருடன் பேசி மகிழ்ந்தார் சிருங்கேரி சன்னிதானம். அத்துடன் தன்னைச் சந்திக்கக்கூடி இருந்த மக்கள் இடையே சுந்தர சுவாமிகள் ஓர் அவதார புருஷர் என்று கூறி அவரது பெருமைகளை விவரித்தார்.
சுந்தர ஸ்வாமிகளது காலத்துக்குப் பிறகு வந்தவர்தான் எனினும் காஞ்சி மகா ஸ்வாமிகள் சுந்தர சுவாமிகள் குறித்து தன் பக்தர்களிடம் விவரித்துள்ளனார். அப்போது கோயில் திருப்பணிகளுக்கு அள்ளிக் கொடுத்து இறைப் பணியில் தங்களை பெரிதும் ஈடுபடுத்திக் கொண்டவர்கள் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள். இந்த கைங்கர்யத்தைத் தொன்று தொட்டு செய்து வந்தாலும் சமீப காலத்தில் இவர்களை அதிக அளவில் இறைப்பணியில் ஈடுபடச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் சுந்தர சுவாமிகள். இவரது காலத்தில் திருமேனியில் திருநீறும் கழுத்தில் ருத்ராட்சமும் அணியாத நாட்டுக் கோட்டை செட்டியாரைப் பார்ப்பதே அரிது. அந்த அளவுக்கு இவர்களுக்கு சிவபக்தியை புகட்டியவர் சுந்தர சுவாமிகள். இவரது உத்தரவை ஏற்று சிவன்கோயில்கள் பலவற்றுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளனார் என்று கூறி உள்ளார் காஞ்சி மகா சுவாமிகள். இந்தத் தகவல் சுந்தர சுவாமிகளது வரலாற்றுத் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.
செட்டி நாட்டுப் பகுதிகளுக்குச் சென்று உபந்யாசம் செய்யும்போது ஏகமூக ருத்ராட்சத்தின் மகிமையை எடுத்துரைப்பார் சுந்தர சுவாமிகள். இதைக்கேட்ட நாட்டுக்கோட்டை செட்டிமார்கள் பலரும் ஏகமுக ருத்ராட்சத்தை அணியத் துவங்கினர். சுவாமிகளை குருவாக ஏற்று வணங்கி வரும் எண்ணற்ற அன்பர்கள் ஏகமுக ருத்ராட்சத்தை அணிந்திருப்பதைக் காணலாம்.
திருவையாறு பகுதியில் உள்ள ஸப்த கோயில்களுக்கு (திருவையாறு, திருச்சோற்றுத்துறை திருநெய்த்தானம், திருவேதிக்குடி, திருக்கணிகை, திருப்பழனம், திருப்பூந்துருத்தி) 1872ல் கும்பாபிஷேகம் செய்துவைத்தார் சுவாமிகள்.
வைகாசி மாதத்தில் ஒரே நாளில் நேரத்தில் ஏழு கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆச்சரியம் என்னவெனில் எல்லா கோயில்களிலும் ஒரே நேரத்தில் அங்கு இருந்தார் சுவாமிகள். இதை அறிந்த அவரின் சீடர்களும் எண்ணற்ற பக்தர்களும் மெய்சிலிர்த்தனர்.
இந்தக் கும்பாபிஷேகத்தில் பங்கெடுத்த அந்தணர்கள் மதிய உணவுக்காக அமர்ந்திருந்தனர். அப்போது சயைலில் ஈடுபட்டிருந்த அன்பர் ஒருவர் ஓடிவந்து உணவில் சேர்ப்பதற்கும் அந்தணர்களுக்கு பரிமாறுவதற்கும் நெய் இன்னும் வந்தபாடில்லை என்ன செய்வது? என தவித்தபடி கேட்டார். உடனே சுவாமிகள் அவ்வளவுதானே கோயில் குளத்தில் நான்கு குடங்கள் தண்ணீர் எடுத்து வாருங்கள் என்றார்.
நெய் கேட்டதற்கு நீரை எடுத்து வரச் சொல்கிறாரே என்று அந்த அந்தணர் குழம்பியபடி அடி சீக்கிரமா எடுத்துட்டு வாங்க. அந்தணர்கள் பசியுடன் இருக்காங்க அவரை விரட்டினார் சுவாமிகள். உடனே அவர்கள் நான்கு குடங்களிலும் குளத்து நீரை எடுத்துவந்து சுவாமிகள் முன்னே வைத்தார்.
அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று அறியும் ஆவலுடன் அனைவரும் காத்திருந்தனர். கையில் கொஞ்சமாக திருநீரை எடுத்த சுவாமிகள் ஸ்ரீஐயாரப்பரை பிரார்த்தித்து திருநீறை நான்கு குடங்களிலும் மெள்ள தூவினார். மறுகணம் குடங்கள் அனைத்திலும் கமகமவென நெய் வாசனை அனைவரும் அதிசயித்துப் போனார்கள். இந்த நெய்தான் அன்னதானத்துக்குப் பயன்படுத்தப்பட்டது.
இதையடுத்து சில நிமிடங்களில் நெய் எடுத்து வந்து இறங்கினார் வியாபாரி. உடனே அன்பர் ஒருவரை அழைத்த சுவாமிகள் ஒரு குடநெய்யை மட்டும் கோயில் குளத்தில் விட்டுவிடுங்கள். இறைவன் கொடுத்ததை அவனுக்குத் திருப்பித் தருவதுதான் மரியாதை என்றார். அதன்படியே குட நெய் குளத்தில் விடப்பட்டது.
இந்த திருவையாறு கும்பாபிஷேகத்தில் இன்னொரு சம்பவமும் நடந்தது. சுந்தர ஸ்வாமிகளை எப்படியேனும் அவமானப்படுத்த வேண்டும் எனும் நோக்கத்துடன் அந்நிய மதத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கு வந்தார். சுவாமிகளுக்கு என் அன்பு காணிக்கை என்று சொல்லி பொட்டலம் ஒன்றை சுவாமிகளுக்கு முன்பு வைத்தார்.
மெள்ள புன்னகைத்த சுவாமிகள் தனது திருக்கரத்தால் அந்தப் பொட்டலத்தைத் தொட்டார். பிறகு அந்த ஆசாமியிடம் பொட்டலத்தைப் பிரிக்கும்படி கூறினார். சுவாமிகளுக்கு அவமானம் நேரப் போவதாக மகிழ்ந்த அந்த ஆசாமி பொட்டலத்தைத் திறந்தார். அதில் சுவையான பழங்கள் இருந்தது கண்டு அதிர்ந்தார். ஏனெனில் பொட்டலத்தில் வைத்திருந்தது மாமிசமாயிற்றே. தை அமாவாசையின் போது 1884 ஆம் ஆண்டு நெல்லை காந்திமதி அம்மன் கோயிலில் லட்சதீபம் ஏற்றுதல், பொதிகை மலை தரிசனம், குறுக்குத்துறை முருகப் பெருமானின் கோயில் விஜயம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டார் சுவாமிகள். இதையடுத்து புதுக்கோட்டை ஓட்டுத் திண்ணை பரதேசி சுவாமிகளது விருப்பத்துக்கு இணங்க புதுகைக்குச் சென்றார் சுவாமிகள்.
அப்போதுதான் அந்தணர் அல்லாதோருக்கும் பெண்களுக்கும் முறைப்படி தீட்சை வழங்கினார். இங்கு தங்கியிருந்த வேளையில் அரிமளம் சிவராமன் செட்டியார் மற்றும் புதுவயல் அழகப்பா செட்டியார் ஆகிய பக்தர்கள் இருவரும் சுவாமிகளைப் பெரிதும் கவர்ந்தனர்.
இதையடுத்து பல தலங்களுக்கும் சென்றவர் மீண்டும் புதுக்கோட்டைக்கு வந்தார். அங்கிருந்து ராமேஸ்வரத்துக்கு சென்றபோது அரிமளம் சிவராமன் செட்டியார் உட்பட பக்தர்கள் பலரும் உடன் சென்றனர். ரெட்டை மாட்டு வண்டிகளில் பயணம் செய்தவர்கள் திருமயத்தை அடைந்தபோது அந்த அற்புதம் நிகழ்ந்தது.
எதிரே சாலையில் நின்றபடி வண்டியை புதுக்கோட்டைக்குத் திருப்பு என்று சொல்லி மறைந்தார் சுந்தர ஸ்வாமிகள். வண்டிக்காரனுக்கோ குழப்பம், என்னடா இது? வண்டியில் அசந்து தூங்கிக்கிட்டிருந்த சாமீ திடீர்னு கீழே இறங்கி புதுக்கோட்டைக்குத் திருப்பச் சொல்றாரு என்று. பிறகு வண்டியைத் திருப்பி மீண்டும் புதுக்கோட்டை நோக்கிச் செலுத்தினான். சிறிது நேரத்தில் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட சுவாமிகள் இப்ப நாம எங்கேப்பா இருக்கோம் என்று கேட்க, புதுக்கோட்டையை நெருங்கிவிட்டு இருக்கோம். சாமீ என்று பதில் சொன்னான் வண்டிக்காரன். சுவாமிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. என்னது புதுக்கோட்டைக்கா? ராமேஸ்வரம் போகலையா? என்று கேட்டார். உடனே வண்டிக்காரன் என்ன சாமீ. நீங்கதானே வண்டிக்கு எதிரில் நின்னு புதுக்கோட்டைக்கே போடானு சொன்னீங்க? என்றான். ஆச்சரியப்பட்ட சுவாமிகள் வண்டியிலேருந்து நான் இறங்கவே இல்லியேப்பா என்று உறுதிபட தெரிவித்தார்.
பின்னர் திருமயத்தில் வண்டி எந்த இடத்தில் புதுகைக்குத் திரும்பியதோ அந்த இடத்துக்கு வெகு அருகில் பெரும் புயல் வீசியது. மரங்கள் விழுந்து வீடுகள் சரிந்து சாலையில் சென்ற வண்டிகள் அனைத்தும் நிலை தடுமாறி கவிழ்ந்துவிட்டன. ஆடுமாடுகள் கூட நாசமாகி விட்டன. மறுநாள் விடிந்ததும் இந்த தகவல் தெரிந்தது. அப்போதுதான் சுவாமிகளது உருவத்தில் வந்து இறைவனே தங்களை காப்பாற்றி உள்ளான் எனும் உண்மையை அறிந்து அனைவரும் சிலிர்த்தனர். பின்னர் சுவாமிகளை அரிமளத்துக்கு அழைத்துச் சென்ற சிவராமன் செட்டியார் சிவன்கோயிலுக்கு கும்பாபிஷேகம் மற்றும் அன்னதான சத்திரம் முதலான பணிகளை செய்து முடித்தார். மதுரையில் உள்ள விபூதி மடத்தில் பக்தர்கள் மற்றும் சிஷ்யர்களுடன் சில நாட்கள் தங்கினார் சுவாமிகள். இவரின் சீடரான நாராயணசிவம் என்பவர் தண்ணீரில் அமர்நது யோக நிஷ்டை இருப்பதில் தேர்ந்தவர். எனவே மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ள பொற்றாமரைக் குளத்துக்கு வந்து நீரின் மேல் யோகநிஷ்டையில் இருந்தார். நாராயணசிவம். இதைக்கண்ட அன்பர்கள் பலரும் அவரது யோக முறையை வியந்து அதிசயித்தனர். அதுவரை குளத்து நீரில் அமர்ந்தபடி யோகத்தில் இருந்த நாராயணசிவம் திடீரென மெள்ள மெள்ள நீருக்குள் மூழ்கினார். கரையில் நின்றவர்களுக்கு இவரது உடல் தெரியவே இல்லை. அங்கு இருந்த சுவாமிகளின் பக்தரான சுப்ரமண்ய குருக்கள் என்பவர் உடனே காவல்நிலையத்துக்கு ஓடோடிச் சென்று பொற்றாமரைக் குளத்துக்குள் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். காவல்துறையினர். இரண்டு நாளாகியும் உடல் கிடைக்கவே இல்லை.
மூன்றாம் நாள், அங்கு வந்தார் சுந்தர சுவாமிகள். நாராயண சிவத்தின் உடலை எப்படியேனும் தென்கரையிலுள்ள விபூதி விநாயகர் சிலைக்கு அருகே கொண்டு வந்து வைத்துவிடுங்கள் என்று காவல்துறையினரிடம் தெரிவித்தார் சுவாமிகள்.
இறந்த நாராயண சிவத்தை உயிர்ப்பிக்கும் எண்ணத்தில் இருக்கிறார் சுவாமிகள் என்பதை அறிந்து கொண்ட போலீசாரும் கோயில் ஊழியர்களும் சுவாமிகளை கேலி செய்தனர். தண்ணீரில் இறந்து மூணு நாளாச்சு. உடலையே இன்னும் கண்டுபிடிக்க முடியலை. இவர் உயிர்ப்பிக்க போறாராமா! என்று கிண்டல் செய்தனர். இருப்பினும் நடப்பதைத்தான் பார்ப்போம் என்று குளத்தில் இறங்கி தேட எத்தனித்தர். அப்போது திடீரென நீரில் உடல் மிதந்தது. அனைவரும் அதிர்ந்து போனார்கள். பின்னர் நாராயண சிவத்தின் உடலை விபூதி விநாயகர் சன்னிதிக்கு அருகே கொண்டு வந்து கிடந்தனர்.
சுவாமிகளை இறைவனை பிரார்த்தித்து நாராயண சிவத்தின் உடல் முழுவதும் திருநீறை அள்ளி பூசினார். சடலத்தின் வலது காதில் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதினார். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மெள்ள தடவி கொடுத்தார். அவ்வளவுதான், மூன்று நாட்கள் சடலமாகக் கிடந்த நாராயண சிவம் உயரித்தெழுந்தார். பின்னர் சுவாமிகளின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். சுவாமிகளின் அற்புதத்தை அறிந்து அங்கு இருந்தவர்கள் அவரை வணங்கினார்கள்.
இதையடுத்து மதுரையில் இருந்து திருச்சி, திருவையாறு, தஞ்சை, சென்னை முதலிய தலங்களுக்குச் சென்று இறைவனை தரிசித்த சுவாமிகள் பின்னர் கங்கைகொண்டான் ஆனந்தவல்லி சமேத கயிலாசநாதர் கோயிலின் கும்பாபிஷேகத்தை 1873 ஆம் ஆண்டு நடத்திக் கொடுத்தார்.
தம் வாழ்நாளில் 22 கும்பாபிஷேகங்களை நடத்தி வைத்திருக்கிறார் சுவாமிகள். அவர் நடத்திய முதல் கும்பாபிஷேகம் தான் ஸித்தி அடைந்த அரிமளத்தில் உள்ள கோயில். இறுதியில் நடத்திய கும்பாபிஷேகம் இவர் அவதரித்த கங்கைகொண்டானில் உள்ள கோயில்.
தான் சமாதி அடையும் நாள் நெருங்கி விட்டதை தமது சீடர்களிடம் தெரிவித்தார். சுந்தர ஸ்வாமிகள் அதன்படி 1878 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (ஐப்பசி 6) கிருஷ்ண பட்ச தசமி அன்று ஸித்தி அடைந்தார். அரிமளம் சிவராமன் செட்டியாரும் மற்ற சீடர்களும் சுவாமிகளது இறுதி காரியங்களை செய்து முடித்து சுவாமிகளது சமாதியின் மேல் அவர் பூஜித்து வழிபட்ட பாணலிங்கத்தை பிரதிஷ்டை செய்தனர்.
*அரிமளத்தில் உள்ள ஸ்ரீ சுந்தர சுவாமிகளின் அதிஷ்டானம்
இந்து சமய அறநிலையை ஆட்சித் துறைக்கு உட்பட்ட பொன்னமராவதி கொன்னையூர் முத்துமாரி அம்மன் கோயில் நிர்வாகத்தின் கீழ் வருகிறது. இந்த அதிஷ்டானம்.
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து தேனிப்பட்டி மற்றும் ஏம்பல் செல்லும் பேருந்துகள் அரிமளம் வழியாகச் செல்லும். தவிர அரிமளத்துக்கு நகரப் பேருந்து வசதியும் உள்ளது. அரிமளம் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சற்றுத் தொலைவு நடந்தால் சுவாமிகளின் அதிஷ்டானத்தை அடையலாம். முகப்பில் ஒரு இரும்பு கேட். உள்ளே நுழைந்தால் நந்தவனம். கருவறை, உள்பிராகாரம், அர்த்தமண்டபம், வெளிப்பிரகாரம் என முழுவதும் கருங்கல் திருப்பணியாய் அமைந்து விஸ்தாராமாகவும் உள்ளது. கருவறையில் சுவாமிகளின் அதிஷ்டானம். சிலா வடிவில் உள்ள ஆவுடையாரின் மேல் சுவாமிகள் வழிபட்ட பாணலிங்கத்தை தரிசிக்கிறோம். இங்கு விபூதி அபிஷேகம் அடிக்கடி நடைபெறும். அதிஷ்டானத்தில் விநாயகர், பின்பக்க கோஷ்டத்தில் லிங்கோத்பவர், வெளியே நாகர் ஆகிய சன்னிதிகளும் உண்டு.
தினமும் காலையில் சுமார் எட்டரை மணியளவில் அபிஷேகம் நடைபெறும். தவிர பவுர்ணமி அன்று மாலை 4 மணிக்கும் ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு மற்றும் தேய்பிறை தசமி ஆகிய நாட்களில் பகல் 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். ஐப்பசி மாதம் தேய்பிறை தசமி அன்று (பூச நட்சத்திரம்) குருபூஜை சிறப்பாக நடைபெறுகிறது. அன்று மாலை சுவாமிகளின் உற்ஸவர் விக்கிரகம் வீதியுலா வரும். சுந்தர ஸ்வாமிகள் இங்கு இருந்தபடி உலகமெங்கும் உள்ள பக்தர்களை இன்றைக்கும் காத்து வருகிறார் என்பது நாட்டுக்கோட்டை செட்டியார் இனத்தவர் மட்டுமின்றி ஏனைய பக்தர்களது நம்பிக்கை.
எங்கே இருக்கிறது?: புதுக்கோட்டையில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது அரிமளம். அறந்தாங்கி மற்றும் திருமயத்தில் இருந்தும் சுமார் 22 கி.மீ. தொலைவு.
எப்படிப் போவது?: புதுக்கோட்டையில் இருந்து 22, 27, 27ஏ மற்றும் ஜான்ஸி ஆகிய பேருந்துகளும் அறந்தாங்கியிலிருந்து 6, லதா, எஸ்.எம்.ஆர். ரங்கநாதன், பி.எல்.ஏ ஆகிய பேருந்துகளும் திருமயத்தில் இருந்து 9டி மற்றும் ராஜா ஆகிய பேருந்துகளும் அரிமளம் செல்கின்றன.
நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7.30 12.00 மாலை 4.00-7.30
இதுவரை நமது புண்ணியம் தேடி பகுதியில் பல கோவில்களை பற்றிதான் பார்த்திருக்கிறோம். எப்பவாவது ஒருசில சமயத்துல, கோவிலுக்கு பக்கத்திலிருக்கும் சித்தர்கள், சாமியார்கள் ஆசிரமம் பற்றி தனிப்பதிவா பார்த்திருக்கோம். ஆனா, இதுவரை இல்லாமல் நம் தொடரில் தொடர்ந்து சித்தர்களின் சமாதிகளை பற்றி பகிரப்படுகிறது ஏனென்றால், மானிடராய் பிறந்தவர்களின் துர்க்குணங்களையும், துன்பத்தையும் மாற்றி, தூய்மையானவர்களாக்குவதற்காக அவதரித்தவர்கள் சித்தர்கள். இவர்கள் தனிமையை நாடுபவர்கள். பசித்திருப்பதையும் விழித்திருப்பதையும் பெரிதும் விரும்புபவர்கள். எப்பொழுதும் சிவபரம்பொருளையே தியானித்துக்கொண்டு இருப்பவர்கள். சித்தர்கள் பெரும்பாலும் சங்கேத மொழியில் பேசுபவர்கள். இவர்கள் பேசுவதை நாம் புரிந்துகொண்டால், நாம் பல ஆபத்துகளிலிருந்து தப்பிக்கலாம். மக்களுக்கு நன்மை புரியும் சித்தர்களை மக்கள் புரிந்துகொள்வது சற்று சிரமம்தான். இவர்களின் சக்தியோ அளப்பரியது. இதற்கு உதாரணமாக எத்தனையோ சித்தர்கள் இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள். அதிலும், நாங்கள் சந்தித்த கடைக்காரர் சொன்ன மாதிரி புதுச்சேரி மாநிலத்தில் மட்டுமே சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட சித்தர்களின் ஜீவசமாதிகள் இருக்கின்றது. அவற்றைதான் நமது பதிவுகளில் தொடர்ந்து பார்த்து, படித்து, தரிசித்து வருகிறோம்.
சரி கடந்தவாரம் நாம ஓம் ஸ்ரீமத் குரு சித்தானந்த ஸ்வாமிகளின் ஜீவசமாதியை தரிசித்தோம். இந்த வாரம் நாம தரிசிக்கப்போவது அகண்ட பரிபூரண ஞானதேசிக ஸ்ரீலஸ்ரீ கம்பளி சுவாமிகள் ஜீவசமாதியை. வேதாந்த சுவாமிகளின் ஜீவசமாதியை தரிசித்து வெளியே வரும்போது,மதியம் ஆகிவிட்டது. பெரும்பான்மையான திருக்கோவில்களில் மதியம் 12:௦௦ மணிக்குமேல் நடையடைத்து விடுவது வழக்கம். சரி இனி சாப்பிட்டு போகலாம்ன்னு பக்கத்திலிருந்த ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டு, பக்கத்துல இங்க பக்கத்தில் எதாவது பார்க்குறமாதிரி இருக்கான்னு ஹோட்டல்காரங்கக்கிட்டயே விசாரித்தோம். ம்ம் இருக்கு. இங்கன பக்கத்திலயே கம்பளி சித்தரின் ஜீவசமாதி இருக்கு போய் பார்ருங்க. ரொம்ப விஷேசமானதுன்னு சொல்லி கூடுதல் தகவலாய் பாண்டிச்சேரி முழுக்க 51 சித்தர்களின் ஜீவசமாதிகள் இருக்கு நீங்க ஒவ்வொண்ணா பாருங்க எனக்கூறி கம்பளி சித்தர் ஜீவ சமாதிக்கு போகும் வழியை சொன்னார்.
நாங்க அங்க போனதும், சித்தர் சமாதிக்குதான் வந்துட்டோமா?! இல்ல எதாவது கார்ப்பரேட் சாமியார்கள் ஆஸ்ரமத்திற்கு வந்துட்டோமான்னு ஜெர்க் ஆனோம். ஏன்னா, அங்கு, வெளிநாட்டுக்காரங்க அதிகம் இருந்தனர். இதிலிருந்து ஒரு உண்மை புரிகிறது. வெளிநாட்டவர்கள் நம்முடைய சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்பட்டு இந்தியா வந்து இந்துமத்தை பின்பற்றி அமைதியான வாழ்வு வாழ்ந்து அமைதியை தேடுகின்றனர் போலும். ஆனா, அதேநேரத்தில் சில தவறுதலான வழிகாட்டுதல்மூலம் சிலருக்கு சில பிரச்சனைகள் வந்துவிடுகின்றன. வீட்டைவிட்டு வெளியில் வந்தால் நாலும் நடக்கலாம். அந்த நாலும் தெரிஞ்சு நடந்துக்கிட்டால் நல்லா இருக்கலாம்ன்ற பாடல்வரிகள் நினைவுக்கு வந்தது. சரி சரி, நமக்கெதுக்கு ஊர்வம்பு?! நாம வந்தவேலையை பார்ப்போன்னு ஜீவசமாதியை நோக்கி சென்றோம்.
இந்த சித்தரை பற்றி யாருக்கும் சரியான விவரம் தெரியாதாம். ஆனா, இவர் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு வந்ததாக மட்டும் செவிவழி செய்தி. இவருடைய உண்மை பெயர், பெற்றோர் விவரங்கள் யாருக்கும் தெரியலை. இவர் கம்பளி போர்வையை எப்பயுமே போர்த்திக்கிட்டு இருக்குறதால, மக்கள் இவரை கம்பளி சாமியார்ன்னு கூப்பிடப்போய் அதுவே பின்னாளில் கம்பளி சித்தர்ன்னு ஆகிட்டது. புதுச்சேரியில் உள்ள பாக்குமுடையான் பட்டு, முத்தியால்பேட்டை, கவுண்டன்பாளையம் போன்ற இடங்களில் அடிக்கடி நடமாடுவாராம். அதிலும் கவுண்டன்பாளயத்திலுள்ள சாஹையார்ன்னு பேர்க்கொண்ட குடும்பத்தினரிடம் மட்டும்தான் பேசுவாராம். ஒரு இஸ்லாமிய பெரியவர், இவருக்கு குருவாக இருந்தார் சொல்றாங்க. வேலாயுதம் என்ற வைத்தியரும் இவரிடம் நெருக்கமாகவும், இருவரும் நல்ல நட்பு கொண்டவராக இருந்தனர் என்றும் சொல்லப்படுது.
இந்த கம்பளி சித்தர் நிறைய கல்வி அறிவு பெற்றவர். சுத்த பிரம்மச்சாரி. மாயையை வென்றவர் என்றும் தன் ஆன்மீகச் சக்தியால் ஊர் மக்களுக்கு நிறைய நன்மைகளை இந்த சுவாமிகள் செய்துள்ளார். பக்தர்களுக்கு கொடிய நோய் வந்துவிட்டால் அவர்களுக்கு பச்சிலையும் விபூதியும் தந்து குணமாக்குவாராம். மேலும், இவரைப்பற்றி செவிவழியாக சொல்லப்படுவது என்ன்னா, இவர் நினைத்த இடத்தில் மறைந்து, நினைத்த இடத்தில் தோன்றும் சக்தி படைத்தவராக இருந்துள்ளார். சூட்சுமத்தில் மறைந்திருக்கும் ஒன்றை ஸ்தூலத்திற்கு அழைத்து வரும் ஆற்றல் படைத்தவர் என்றும் இதை அந்தக்காலக்கட்டத்தில் வாழ்ந்தவங்க பார்த்திருக்காங்கன்னும் பார்த்தவங்க வழிவழியா வந்தவங்க சொல்லி கேட்டவங்க சொல்றாங்க.
வீதியில் நடமாடும்போது இவரது தோற்றத்தை கண்டு வியாபாரம் செய்யும் கடைக்காரர்கள் இவரை விரட்டினால் அன்று முழுவதும் வியாபாரமே நடக்காதாம். கடைக்காரர், கம்பளிச் சித்தரிடம் மன்னிப்பு கேட்டப்பிறகே வியாபாரம் மீண்டும் சிறப்பாக நடைபெறுமாம். இதுவும் செவிவழியா பரவி இங்கு சொல்லப்படுது. சிலசமயம் சாலையில் நின்று .வாயில் ஒரு சுருட்டை வைத்துக்கொண்டு போவோர், வருவோரிடம் நெருப்பு கேட்பாராம். அவர்கள் கண்டும் காணாமல் சென்றால் தன் ஆட்காட்டி விரலை சுருட்டுக்கு முன்னால் பத்த வைப்பதுபோல் நீட்டுவாராம் . சுருட்டு குப்பென்று பற்றிக் கொள்ளுமாம். அதேபோல் சுவாமிகள் ஒருமுறை கள்ளுக்கடைக்கு சென்றார். கையை நீட்டினார். கடைக்காரர், இன்னும் போணியாகலை போ” ன்னு கள்ளுக்கடைக்காரன் விரட்டினானாம். உடனே, சுவாமிகள் நெடுந்தூரம் சென்று ஒரு ஆலமரத்தடியில் உட்கார்ந்து விட்டார். அன்று பூராவும் வியாபாரம் ஆகவே இல்லை. கள்ளுக்கடைக்காரர், சுவாமிகளை தேடி ஓடினார். வெகு சிரமத்திற்குபின் சுவாமிகளை கண்டுப்பிடித்து கடைக்கு கூப்பிட்டார். சுவாமிகள்,”நான் வருகிறேன் நீ முன்னால் போ” என்று சொல்லி அவரை அனுப்பினார். கடைக்காரர், ஒரு குதிரை வண்டியில் வேகமாக கடைக்கு வந்து சேர்ந்தார். சுவாமிகள், அதற்கு முன்னரே வந்து அங்கு உட்கார்ந்திருந்தார். அதுவும் இவரது சித்துவிளையாட்டுகளில் ஒன்று என சொல்லப்படுகிறது.
மற்றுமொரு நாள் ஒரு சாராயக்கடைகாரனிடம் கையை நீட்டினார் சுவாமிகள். அவனும் இன்னும் போணியாகவில்லை என்று சுவாமிகளுக்கு சாராயம் கொடுக்கவில்லை. சுவாமிகளும் அங்கிருந்து போய் விட்டார். அன்று முழுதும் அந்த கடையில் எவ்வளவு முயன்றும் சாராய புட்டியின் மூடிகளை திறக்க முடியவில்லை. அதேபோல் பாக்குமுடையான்பட்டில் ஒரு வீட்டில், சுவாமிகள் ஊறுகாய் கேட்டார். வீட்டுக்காரர்,” இல்லை போ” என்று துரத்தினார். சிறிது நேரங்கழித்து வீட்டுக்காரர் ஊறுகாயை திறந்து பார்க்கும்பொழுது ஊறுகாயில் புழு பூழ்த்திருந்தது. உடனே அவர் சுவாமிகளை தேடிச் சென்று மன்னிப்புகேட்டார். பின், மறுபடி புழுக்கள் ஊறுகாயானது. ஒரு சமயம், சுவாமிகளும் மற்றும் சிலரும் அடர்ந்த கள்ளிக்காடு வழியே சென்று கொண்டிருந்தார்கள்.ஒரு விரியன் பாம்பு சுவாமிகளை கடித்து விட்டது. உடன் வந்தவர்கள் சுவாமிகள் இறந்திருப்பார், என்று நினைக்க,காட்டில் அந்த பாம்பு இறந்து கிடந்தது. இவருக்கு பாதரசத்தை தங்கமாக மாற்றும் ரசவாத வித்தையும் தெரியும். ஆனால் இவர் பொருளாசை, பொன்னாசை என்றுமே கொண்டதில்லையாம்
சுவாமிகள், தன் ஆத்ம சாதனைகளை பெரும்பாலும் தண்ணீரில்தான் செய்து வந்தாராம். ஜலஸ்தம்பனம் செய்வது இவரது பழக்கம். நீரின் மேலேயே படுத்துக் கிடப்பார். சுவாமிகள் ஏதோ ஒரு காரணத்தால்தான் எப்பொழுதும் ஜலத்தில் ஸ்தம்பனம் செய்து கொண்டிருந்தார்.அப்படியே சில நாட்களில் ஜல சமாதியடைந்தார். அந்தநாள் சரியாக 1874 -ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி தட்டாஞ்சாவடி அருகில் உள்ள ருத்திர பூமிக்குச் சமீபத்தில் உள்ள குளத்திலேயே அவர் உடல் கிடந்தது. அவ்வழியே சென்றவர் இதை கவனிக்கவில்லை. மறுநாள் காலை ஒரு குரல் கேட்டது “கம்பளி தண்ணியிலே கம்பளி தண்ணியிலே“. இக்குரல் தொடர்ந்து கேட்டுக்கிட்டே இருந்தது. மக்கள் ஒன்றுகூடி அவரது திருவுடலை, நீரிலிருந்து வெளிக்கொணர்ந்து அங்கயே சமாதி எழுப்பி ஊர்மக்கள் அந்த சமாதியின்மேல் ஒரு லிங்கமும் பிரதிஷ்டை செய்தனர். சமாதியை சுற்றிலும் சுவாமியின் அனுக்கிரகம் பெற்றவர்கள் ஏழு பேர் சமாதியடைந்துள்ளனர். கம்பளி தேசிக சுவாமிகளின் சமாதியின் பின்புறம்-பெரியவர்க்கு பெரியவர் என்னும் மகானின் சமாதியும் இருக்கிறது.
இப்பழுது இந்த சித்தர் சமாதிக்கோவில், வெளிநாட்டிலிருந்து வந்து புதுச்சேரியில் நிரந்தரமாகக் குடியேறியுள்ள ஒரு மேல்நாட்டுக் குடும்பத்தினர் பராமரிப்பில் உள்ளது.அவர் மேல்நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும், இவரது மனைவியும், மருமகளும் தமிழ்ப்பெண்மணிகளாவர். இவரது மகன் ஒரு தமிழ் மகனாகவே வளர்க்கப்பட்டவர். அவர்கள்தான் இங்கு பூஜைகள் செய்கின்றனர். இந்த கம்பளிச் சித்தர் சமாதி கோவில் விசாலமான நிலப்பரப்பைக் கொண்டதாக உள்ளது. அடர்ந்த மரங்கள், பூஞ்செடிகள் நிரம்பிய இக்கோவிலை தரிசிப்பது மிகவும் சிறப்பான விஷயம். சித்தரின் சமாதிக்குப் பின்னால் சிவபெருமானது மிக அழகிய வெண்கல உருவம் உள்ளது. இது நம் கண்களையும் சிந்தையையும் கவர்ந்திழுக்கிறது. முன்புறம் இருக்கும் நந்தியின் கீழே கம்பளிச் சித்தரின் சிஷ்யர் அம்பலவாண சுவாமிகளின் சமாதியும் உள்ளது. கம்பளிச் சித்தரின் ஜீவசமாதிக்கு நேர் வெளியிலும் ஒரு பெரிய நந்தி உள்ளது. பிராகாரத்தைச் சுற்றி வரும்பொழுது தனிச்சந்நிதிகளில் விநாயகர் முருகப் பெருமானும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள சிலைகள் எல்லாம் கலைநயமும், புதுமையும் மிக்கவை. இங்கிருக்கும் முருகன் சந்நிதிக்கு எதிரிலுள்ள மயில் வாகனமும் வித்தியாசமாக வடிக்கப்பட்டுள்ளது.
படம் உதவி: முகநூல்
முருகப்பெருமான் சந்நிதியை அடுத்து கஜலட்சுமி தனிச்சந்நிதியில் வீற்றிருக்கிறாள். இந்த சந்நிதியில் கஜலட்சுமியின் இருபுறங்களிலும் இரண்டு யானைகளுக்கு பதிலாக எதிரில் ஒரேயொரு யானை மட்டுமென இதிலும் வித்தியாசம் காணப்படுகிறது. அதுவும் புதுமையாக- அழகாக வடிக்கப்பட்டுள்ளது. கஜலட்சுமி சந்நிதியை அடுத்து ரிஷப வாகனத்தில் சிவபெருமானும், சக்தியும் அருள்பாலிக்கின்றனர். வெண்கலத்தினாலான திருஉருவங்கள் பார்ப்பதற்கு பரவசமாக இருக்கிறது. கோவிலின் வெளிப்புறம் அம்மன் சிலையும், அதற்கு நேராக சிம்ம வாகனமும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் விநாயகர், ஆஞ்சனேயர், சரஸ்வதி உருவங்கள் அழகாக உருவாக்கப்பட்டுள்ளன.
கூடவே கம்பளிச் சித்தரின் அருளாசி பெற்ற மேலும் ஏழு சித்தர்களின் சமாதிகளும் இங்குள்ளது. அகத்திய முனிவருக்கும் ஒரு சிலை இருக்கு. இந்த சித்தர் சமாதியில் குழந்தை பிறந்தவர்கள் பால் வாங்கி கொடுத்து அதை கோவிலுக்கு வருபவர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். சித்தரை தரிசித்துவிட்டு வெளியே வரும்போதும், சமாதிக்கோவிலின் முகப்பில் உள்ள சிவசக்தி ரூபம் நம்மை பரவசமடைய செய்கிறது. ஒரு அக்கினி வளையத்தின் நடுவே சிவனும் சக்தியும் ஆனந்தத் தாண்டவமாடும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. சிவபெருமானின் ஆட்காட்டி விரல் நுனிபூமியைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. கீழ்ப்பக்கம் தலை, உயரத்தூக்கிய கால்கள். சக்தியின் முகமும் கீழ்ப்பக்கம், கால்கள் சிவனுடைய கால்களோடு பின்னிப் பிணைந்த திருக்கோலம் என சிலாரூபம் மிக அழகு. மலர்ந்த செந்தாமரைப் பூவின் இதழ்களுக்கு நடுவே மேற்கூறிய சிவன்- சக்தி உருவங்கள் சுமார் முப்பது அடிஉயரம் கொண்டதாய் இருப்பது மிக அழகு.
இந்த ஆனந்தத் தாண்டவ சிலையின் கீழ்ப்பக்கம் ஒரு சிறிய கதவு உள்ளது. அந்த கதவை வருடத்திற்கு ஒருமுறை வரும் மகாசிவராத்திரி அன்று மட்டுமே திறப்பார்களாம். அதற்கு முப்பது அடிக்குக் கீழே ஒரு பாதாள லிங்கம் இருக்கிறது. அந்த லிங்கத்திற்கு மகாசிவராத்திரி அன்று மட்டுமே பூஜை செய்கிறார்கள். சிவராத்திரி அன்று இரவு பதினோரு மணிக்குமேல் கதவு திறக்கப்பட்டு, மேல்நாட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரேஒருவர் மட்டுமே கீழே இறங்கிச் சென்று சிவபூஜை செய்வாராம். பாதாள லிங்கத்திற்கு சுமார் அரை மணிநேரம் பூஜை நடக்குமாம். பூஜை செய்தவர் திரும்பி வந்து அனைவருக்கும் விபூதி பிரசாதம் வழங்குவாராம். சிவன்- சக்தி ஆனந்தத் தாண்டவச் சிலையைச் சுற்றிலும் பெரிய வட்டவடிவமான பள்ளம் உள்ளது. கடந்த சிவராத்திரியில் பக்தர்கள் இவ்வட்டத்தைச் சுற்றி நின்று தங்கள் கையில் விளக்குகளை ஏந்தியபடி சிவநாமத்தைச் சொல்லியபடி சுமார் ஆயிரம் பேர், கைகளில் விளக்குகளை ஏந்தி சிவபெருமானைப் பிரார்த்தனை செய்வது பார்ப்பதற்க்கே கண்கொள்ளாக்காட்சியாக இருக்குமாம்.
அதைவிட முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் பூஜை முடிந்தவுடன் அன்றுமட்டும் பக்தர்கள் பாதாளலிங்கத்தை சென்று தரிசிக்கலாம். வருடத்திர்ற்கு ஒருமுறை மட்டுமே இந்த பாக்கியம் கிடைக்கும். இதேபோல், குப்பம்மாள் என்பவர் மகோதர நோயால் கடும் அவதிப்பட்டு கொண்டிருந்தார். வேதனை தாங்காது ஒருநாள் சித்தரின் சமாதியில் விழுந்து அழுதாராம். சிலநாட்களில் எந்த மருந்துமில்லாமல் அந்த நோய் குணமாகியது. என்றும் செல்லப்படுகிறது.
இந்த ஸ்ரீ கம்பளி ஞானதேசிக சுவாமிகளின் சமாதிக் கோவிலுக்கு சென்னையில் இருந்து ECR வழியாக புதுச்சேரி சென்று அங்கிருந்து , தட்டாஞ்சாவடி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் சென்று, அங்கிருக்கும் ருத்திரபூமி பகுதியில் உள்ள இந்த சித்தரின் சமாதிக்கு செல்லலாம். அல்லது ஆட்டோக்காரர்களிடம் சொன்னால் சரியாக சித்தர் சமாதியில் கொண்டு இறக்கி விடுவார்கள். வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறையேனும் இந்த சித்தரை வழிபட்டால் மனதில் ஆனந்தமும் நிம்மதியும் கிடைப்பதை அனுபவபூர்வமாக உணரலாம் .இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு இறைவனின் அருளும் சித்தரின் ஆசியும் கிடைக்கட்டும் என்று பிரார்த்தனை செய்து அடுத்தவாரம் வேறு ஒரு சித்தர் சமாதியில் இருந்து உங்களை தரிசிக்கிறேன்
சட்டி சித்தர் எனும் மௌனகுரு கண்ணப்ப சுவாமிகள் காவாங்கரை நவகண்டயோகி சொரூப சித்து காட்டியவர் | Kaavankarai Mouna Guru Kannappa Swamigal Jeeva Samathi
சித்தர்கள் பிறப்பதும் இல்லை; இறப்பதும் இல்லை; வருவதுமில்லை; போவதுமில்லை என்று திருமூலர் கூறியதுபோல் கண்ணப்பசாவாமிகள் எங்கே பிறந்தார்? அவர் யார்? எப்படிச் சென்னைக்கு வந்தார் என்று எவருக்கும் தெரியவில்லை. பல அவதார புருஷர்கள் ஜீவ சமாதி கொண்ட புண்ணிய பூமியான திருவொற்றியூர்க் கடற்கரையில் உடலில் எந்தவித ஆடையுமின்றிச் சடை முடியும், நீண்ட தாடியுமாக அலைந்துகொண்டிருந்தார் ஒருவர். அவர் ஒரு சித்தர் என்பதை அப்போது எவரும் அறிந்திருக்கவில்லை.
அவரைச் சித்தம் கலங்கியவர் என மக்கள் துரத்தியதால் அலைந்து திரிந்து இறுதியில் புழலில் உள்ள காவங்கரைக்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்ட சித்ராம்பாள் என்பவர் ஒரு வேட்டியை எடுத்து வந்து அவரது இடுப்பில் கட்டிவி்ட்டார். பின்னர் அவரது தாடியையும் சடை முடியையும் மழிப்பதற்கு ஏற்பாடுசெய்தார். அவரது முடியை மழிப்பதற்கு வந்தவர் அருவருப்பு அடைந்தார். ஆனால் சாமிகளின் தலையில் இருந்து நறுமணம் வீசியது. அதைக் கண்டு வியப்படைந்த மக்கள் அவரை ஒரு மகான் என்று அறிந்து கொண்டனர்.
அப்போது முதல் காவாங்கரையிலேயே தங்கிவிட்டார் அவர். ஒரு கையில் சட்டி மற்றொரு கையில் தடியுடன் யாசகம் எடுத்து வாழ்ந்து வந்தார். அதனால் அவரைச் சட்டிச் சாமி என்று மக்கள் அழைத்தனர். அவருக்கு உடை வழங்கிய சித்ராம்பாளும் அவருடைய கணவரும் ‘கண்ணா’ என்று அன்புடன் அழைத்ததால் கண்ணப்பசாமி என்றும் அவர் அழைக்கப்பட்டார்.
நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில்
படமாடக் கோயில் பகவற்க தாமே
என்ற திருமூலரின் கூற்றுப்படி பக்தர்களுக்குச் செய்யும் உதவி இறைவனைச் சென்றடைய உதவும் என்று கண்ணப்பசாமி நம்பினார். தன் கையிலிருக்கும் சட்டியை அட்சய பாத்திரமாக மாற்றினார். உணவை எடுக்க எடுக்க அது பெருகிய அதிசயத்தை, இன்றும் பலர் வழி வழியாகப் பேசி வருகின்றனர். கண்ணப்பசாமிகள் தமது பக்தர்களின் குறைகளை, அவர் சொல்லாமலேயே தீர்த்து வைத்துள்ளார். அவரது தீவிர பக்தரான பொற்கொல்லர் ஒருவர் தமது வாடிக்கையாளர் நகை செய்வதற்குக் கொடுத்த பணத்தைக் குடும்பச் செலவுக்காகப் பயன்படுத்திவிட்டதாகக் குற்ற உணர்வுடன் வந்து அவரிடம் முறையிட்டார். சாமிகள் தனது பக்தனின் கையில் மூன்று கூழாங்கற்களைக் கொடுத்தார். அவை தங்கக் கட்டிகளாக மாறி ஜொலித்தன.
நவகண்ட சித்தர்:
வியாசர்பாடியைச் சேர்ந்த கண்ணையா பாகவதர் என்பவர் நள்ளிரவு 12 மணிக்குச் சாமிகளைப் பார்க்கச் சென்றார். அப்போது சாமிகளின் அவயங்கள் அனைத்தும் தனித்தனியாகக் கிடந்ததைப் பார்த்துப் பயந்து ஓடிவிட்டார். இப்படி அவயங்களைத் தனித்தனியாகப் பிரித்துவிட்டு யோகம் செய்வதை ‘சொரூப சித்து’ என்றும் ‘நவ கண்ட சித்து’ என்றும் போகர் குறிப்பிடுகிறார்.
இப்படிப் பல அற்புதங்களைப் புரிந்த கண்ணப்பசாமிகள் தாம் சமாதி அடையப்போகும் தருணத்தை முன்பே அறிந்தார். தமக்கான சமாதிக் குழியைத் தோண்டப் பணித்தார். தாம் சமாதி அடைந்து 48 நாள்களுக்குப் பிறகுதான் தன்னைப் புதைக்க வேண்டும் என அவரது பக்தர்களிடம் கூறினார். 1961-ம் ஆண்டு பிலவ வருடம், புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையன்று சோமவாரம், அஸ்த நட்சத்திரத்தில் சமாதிக் குழிக்குள் இறங்கிச் சின் முத்திரையுடன் பத்மாசனத்தில் அமர்ந்தார்.
சமாதிக் குழியைப் பலகையால் மூடி 48 நாளும் விளக்கேற்றி வழிபட்டனர் பக்தர்கள். பின்னர் பலகையை அகற்றிவிட்டுச் சமாதியை மூடினர். சாமிகள் சொன்னதுபோல சமாதியின் மீது விநாயகர் சிலையைப் பிரதிஷ்டை செய்தனர். பின்னால் காஞ்சிப் பெரியவரின் ஆலோசனையின் பேரில் கண்ணப்பசாமிகளின் கற்சிலை ஸ்தாபிக்கப்பட்டது. தற்போது சிலை சமாதியின் முன்புறம் வைக்கப்பட்டு சமாதி மீது லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
புழல் செல்லும் சாலையிலிருந்து காவாங்கரையினுள் நுழைந்து சிறிது தூரம் சென்று வலது புறம் சென்றால் கண்ணப்பசாமிகளின் ஜீவசமாதியை அடையலாம். அங்கே சிவமாக வீற்றிருக்கும் சித்தரை உணர்ந்து கொண்டால் அவர் நம்முடன் பேசுவார்; துன்பங்களுக்குத் தீர்வு கூறுவார்.
ஸ்ரீ அப்பரானந்தா சித்தர் முருகப்பெருமானோடு பேசியவர் நாகத்தின் காவலில் தவம் செய்தவர் || NETTUR APARANANTHAR SITTHAR
இவ்வூரில்தான் மிகப்பெரிய அதிசய அருள் சக்தி குடிகொண்டுள்ளது. ஆம்.. அகத்தியப் பெருமானுக்கே தமிழ் கற்றுக்கொடுத்த முருகப்பெருமான் சன்னிதிக்குள், அப்பரானந்தா சுவாமி சமாதி அமைந்திருக்கிறது. இது எங்குமே காணக்கிடைக்காத அற்புதத் தரிசனம். குருவின் மூலஸ்தானம் அருகே சமாதி நிலை யாருக்கு கிடைக்கும்?. அப்படி கிடைத்திருக்கிறது என்றால் இவர் எவ்வளவு பெரிய மகானாக திகழ்ந்திருக்கிறார் என்பது புலப்படும்.
யார் இந்த அப்பரானந்தா சுவாமிகள்?. இவர் எங்கிருந்து இவ்வூருக்கு வந்தார்?
நெட்டூர் சித்தர் அப்பரானந்தர் சுவாமிகள்
தான் முக்தியடையும் காலத்தை மன்னன் வெள்ளப் பாண்டியனுக்கும் மற்றவர்க்கும் சொல்லியனுப்பினார்.
சுவாமிகள் தாம் சொல்லியபடியே ஆனி மாதம் வியாழக்கிழமை பூச நட்சத்திரத்தில் பரிபூரண மெய்தினார். சமாதி கோயில் அமைந்துள்ள இடம்: தென்காசி திருநெல்வேலி பேருந்து வழித்தடத்தில் உள்ளது ஆலங்குளம். ஆலங்குளத்திற்கு வடக்கே செல்லும் சாலையில் ஏறத்தாழ 8 கி.மீ. தொலைவில் சித்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது சமாதிக் கோயில். நெட்டூர் கிராமம். அவ்வூரின் நடுவே அமைந்துள்ளது சமாதிக் கோயில். கருவறையில் முருகன் பிரதிஷ்டை ஆகியுள்ளார். அர்த்த மண்டபத்தில் சுவாமிக்கு முன் இடப்பாகத்தில் சித்தரின் சமாதி. சமாதியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் உள்ளது ஆலங்குளம். இங்கிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், திருநெல்வேலி- சங்கரன்கோவில் சாலையில் அழகிய பாண்டிய புரத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும், சங்கரன்கோவிலில் இருந்து ஊத்துமலை, சோழச்சேரி வழியாக 10 கிலோமீட்டர் தொலைவிலும் நெட்டூர் அமைந்துள்ளது. இங்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன..
siddhar apprananthar swamy, His temple situated at Tirunelveli District, Nettur village, Alangulam.
கோம்பைச் சித்தர் ஜீவசமாதி | SRI KOMBAI SIDDHAR JEEVASAMADHI
கோம்பை சுவாமிகள் ஜீவசமாதி
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடமாடி அருளாட்சி புரிந்த சித்தர் பெருமக்களுள் குறிப்பிடத்தக்கவாராக விளங்கியவரும் கோம்பை சுவாமிகளும் ஒருவர், மதுரை மாவட்டம் பெரியகுளம் வட்டத்தில் உள்ள கோம்பை எனும் ஊரில் பிறந்ததால் சுவாமிகள் கோம்பை சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.
கோம்பையின் ஜமின்தாராக விளங்கிய சம்தவாய் என்பவருக்கு மகனாகத் தோன்றிய சுவாமிகளின் இயற்பெயர் வேல்தளவாய் என்பதாகும் இளமையிலேயே வீட்டை விட்டு வெளியேறி பரஞானம் தேடிப்புறப்பட்ட சுவாமிகள் பாரதத்தின் பல பகுதிகளுக்கும் சென்று அருட்செயல் நிகழ்த்திய கலாமிகள் கி பி 1865 ஆம் ஆண்டு நாகர்கோவில் வடசேரிக்கு எழுந்தருளினார்கள்.
எல்லோருடைய வணக்கத்திற்கும் உரியவராக விளங்கிய சுவாமிகள் 18-2-1925 அன்று புதன்கிழமை இரவு சுமார் 8.00 மணிக்கு ஏகாதசி திதியில் அண்மையில் யாருமில்லாத சமயத்தில் தம் இகிலோக வாழ்வை நீத்து சமாதி அடைந்தார். நாட்டின் பல பகுதிகளிலிருந்து அடியவர்கள் திரளாகக் கூடினர். சமாதிச்சடங்குகள் நல்ல முறையில் நடந்து கொண்டிருந்த சமயத்தில் கேரளாவில் ஆரண்முளையைச் சேர்ந்த தவத்திரு சுவாமி சுயம்பர்ணானந்தா ஈத்தா மொழி வந்து சேர்ந்தார். அவரது முன்னிலையில் மகாசமாதி சடங்குகள் சிறப்பாக நடந்தன. இன்றும் ஒவ்வொரு பௌர்ணமி நாளன்றும், நாட்டின் பல பாகங்களிருந்தும் பக்தர்கள் அங்கு வந்து வணங்கி, அருள் பெற்றுச் செல்கின்றனர்.
திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும்.
அது மலையல்ல, மருந்து. பிறவிப்பிணி தீர்க்கும் பெருமருந்து. அலையாட்டம் போடும் அகத்துக்கு அமைதித்தரும் அருமருந்து. அதுவே திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலை. நான் என்ற அகந்தை அழிந்த தலம்.
திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. எனவே கோயிலில் இறைவனை வலம் வருதலைப் போல மலையை வலம் வரும் வழமை இங்குள்ளது. மலையைச் சுற்றிவர இரு வழிகள் உள்ளன. மலையை ஒட்டிச் செல்லும் வழியில் பாறைகள், முட்கள் மிகுந்த கடின பாதையாக அமைந்துள்ளது.
எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகிறது. அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம். தேவாரத்தில் புகழப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை வலப்பாதையில்தான் அமைந்துள்ளது. இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு.
மலையை வளம் வரும்போது மனிதர்கள் இடப்பக்கம் நடக்க வேண்டும், ஏனென்றால் மலையை ஒட்டியுள்ள வலப்பக்கம் சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம். கிரிவலம் செல்லும்போது பஞ்சாச்சர நாமத்தையோ( நமசிவாய,சிவாயநம) அல்லது திருமுறைகளையோ ( தேவாரம், திருவாசம்......) உச்சரிக்க வேண்டும் , அதை தவிர்த்து வேற எதையும் பேசக்கூடாது. கிரிவலம் செல்லும்போது நிதானமாக நடக்க வேண்டும், அவசரமாகவோ, வேகமாகவோ அல்லாத மற்றவர்களை இடித்து கொண்டு செல்லக் கூடாது.
இத்தலத்தினை நால்வர் என்று அழைக்கப்படும் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் தேவாரம் பதிகங்களை பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் சிவபெருமான் என்றாலும், இங்குள்ள முருகன் மீது அருணகிரி நாதர் பாடல்களைப் பாடியுள்ளார். இத்தலத்தில் உள்ள மலை எல்லா யுகங்களிலும் அழியாமல் இருப்பதாகவும், இம்மலையானது சிவபெருமானே என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். இதனால் இம்மலையை வலம் வருதலை கடைபிடிக்கின்றனர். இவ்வாறு மலையை வலம் வருதல் கிரிவலம் என்று அழைக்கப்படுகிறது.
பல்வேறு நகரங்களிலிருந்தும், ஊர்களிலிருந்தும் எண்ணற்ற சித்தர்கள் இந்நகருக்கு வந்து வாழ்ந்து சமாதியடைந்துள்ளார்கள். அவர்களில் ரமணர், சேசாத்திரி சாமிகள், விசிறி சாமிகள், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் சமாதிகள் கிரிவலப் பாதையில் அமைந்துள்ளன.
ஏரிகாத்த ராமர் | ERI KATHA RAMAR TEMPLE MYSTERY - MADURANTAKAM
உண்மையில் கடவுளை காண முடியுமா..? அப்படி கண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா..? என்ற கேள்விக்கு, ஆமாம், இருக்கிறார் என்பது பதிலாக உள்ளது. அவர் கடவுளை கண்ட சம்பவத்தை, கல்வெட்டில் பதிவாகவும் அமைத்திருக்கிறார்கள். இது 1825-ம் ஆண்டில் கிழக்கு இந்திய கம்பெனியின் செங்கல்பட்டு கலெக்டராக இருந்த கர்னல் லியோனல் பிளேஸ் என்பவருக்கு நடந்தது.
ஒரு முரை தொடர்ச்சியான மழை காரணமாக ஏரி விரைவாக நிரம்பியது. அதிகப்படியான நீர் நிரம்பிய காரணத்தால் இன்னும் சில தினங்களில் கரைகள் உடைய வாய்ப்புள்ளதாக செய்தி பரவியது. அவ்வாறு கரை உடைந்தால் வெள்ள நீர் ஊருக்குள் வருவதோடு, விளை நிலங்களும் பாதிக்கப்படலாம் என்ற பயம் மக்கள் மத்தியில் நிலவியது. அப்போதைய கலெக்டர் என்ற நிலையில் லியோனல் பிளேஸ் ஏரியின் கரையை பலப்படுத்த முயற்சி எடுக்க வேண்டி அந்த பகுதிக்கு வருகை புரிந்தார்.
அடுத்த ஓரிரு நாட்கள் பெய்த தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகமாகிவிட்டது. அந்த சமயத்தில் ஒரு நாள் நள்ளிரவு நேரத்தில் மழை அதி தீவிரமாக பெய்யும் நிலையில், நிச்சயம் ஏரியின் கரை உடைந்து விடும் என்று நினைத்த அவர், நிலைமையை நேரில் சென்று பார்த்து, மேலதிகாரிக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று, தனி ஆளாகவே கையில் ஒரு குடையுடன் ஏரியை நோக்கி துணிச்சலுடன் சென்றார்.
சற்று நேரம் அப்படியே நின்று பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு மின்னல் தோன்றியது. அந்த மின்னல் வெளிச்சத்தில் அவரது கண்களில் அந்த காட்சி தெரிந்தது. அங்குள்ள ஏரியின் கரை மீது உயரமான இரண்டு இளைஞர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் முகம் அந்த மின்னல் ஒளியில் அழகாக தென்பட்டது. இருவர் கைகளிலும் வில், அம்பு வைத்திருந்தார்கள். ஏரியை உற்று நோக்கியவாறே, எதிரும் புதிருமாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்கள். ஒரு சில கணங்கள் மட்டுமே அந்தக் காட்சியை கண்டார்.
மறுநாள் பொழுது புலர்ந்தது. வெள்ளம் வடிந்திருந்தது. பெருமழை பெய்த அறிகுறிகள் அவ்வளவாக தென்படாமல் வழக்கம் போல் ஏரி அமைதியாக இருந்தது, ஏரிக்கு சென்று அதைப் பார்த்துச் சிலிர்த்த அந்த ஆங்கிலேய அதிகாரி நடந்த சம்பவத்தை மக்களுக்கு ஆச்சரியத்துடன் சொன்னார். அவர் சொன்னபடி ஜனகவல்லி தாயாருக்கு சன்னிதியை புதிதாக அமைத்து கொடுத்ததுடன், பல திருப்பணிகளையும் அந்த ஆலயத்திற்கு செய்தார். நடந்த சம்பவம் அந்த ஆலய கல்வெட்டிலும் பதிவு செய்து வைக்கப்பட்டது.
1600 ஆண்டுகள் தென்னிந்தியாவின் பழமையான பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட அருள்மிகு மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில் | Eri-Katha Ramar Temple
Sri Yeri Katha Raamar Temple is a Hindu temple dedicated to Lord Rama located in the town of Maduranthakam, Tamil Nadu, India.This is the sthalam (place) where Udayavar (the presiding deity) was named Ramanuja. The temple is also known by other names such as - Mathuranthaka Chaturvedi Mangalam, Vaikunda Varthanam, Thirumathurai, Thirumanthira Tirupathi, Karunagara Vilagam. Thirumalisai Alvar attained siddhi (enlightenment) in this sthalam (place). Also, Sri Ramanujar was instructed the Pancha Samskara Mantram at this place.
உலக மக்களின் அறியாமை என்னும் இருளை அகற்றவும்,அறிவு ஒளி பெருகவும்,ஆன்ம ஒளி நல்கிடவும் சித்தர்களும்,மகான்களும் அவ்வப்போது தோன்றி மக்களை வழி நடத்திக் கொண்டு வருகின்றார்கள். இந்த புண்ணிய பூமியாம் தமிழ் நாட்டிலே பிறந்ததற்கு நாம் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும். ஓரளவேனும் புண்ணியம் இருந்தால் தான் நாம் தென்னாட்டிலே பிறக்க முடியும். அப்படி பிறந்த நாம், வாழ்கின்ற நாட்களில் சித்தர்கள்,மகான்கள் பற்றியும்,அவர்களது அருளாசி பற்றியும் அறிந்து இருளகற்றி , அறிவு ஒளி பெருக்கிட வேண்டும்.
சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புறத்திலுள்ள சித்தர்கள் மற்றும் மகான்கள் வரிசையில் இவருக்கு தனி இடம் உண்டு.சொல்ல சொல்ல இனிக்குதடா என்பதற்கேற்ப இந்த சித்தரின் பெயரை சொல்ல சொல்ல நம்மிடம் குரு பக்தி உயரும். தெய்வ பக்தி சாதிக்காததை குரு பக்தி சாதிக்கும்.
மகான் பாடகச்சேரி சுவாமிகள் எனும் ஶ்ரீ இராமலிலிங்க சுவாமிகள் | பைரவர் சித்தர் | Padagacheri Ramalinga Swamigal
பாடகச்சேரி சுவாமிகள் யோகங்களைக் கற்றவர். இறைப் பணிகளை மேற்கொண்டவர், பலருடைய பிணிகளைத் துரத்தியவர். இறந்ததாக் கருதப்பட்ட சிலரை உயிர்ப்பித்துப் பிறரை ஆச்சரியப்பட வைத்தவர், இவரது ஜீவன் இன்று சென்னை திருவொற்றியூரிலே ஐக்கியம் ஆகி இருந்தாலும், கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்தில் இவர் உருவாக்கிய பாதாள அறையிலும் ஜீவன் இருப்பதாக சுவாமிகளே அருளி இருக்கிறார்கள் என்கிறார்கள் அவரின் பக்தர்கள். ஜீவ சமாதி என்பது ஓர் அடையாளம்தான்! மானுட ஜீவனா அது ஓர் இடத்தில் மட்டும் அடங்கிக் கிடப்பதற்கு? எங்கும் நிறைந்திருக்கிறார் பாடகச்சேரி சுவாமிகள். இன்றைக்கும் தன் பக்தர்கள் எவருக்கு ஒரு துயர் வந்தாலும், விரைந்தோடி வந்து அதைக் களைகிறார்.
வடலூர் வள்ளலாரின் சிஷ்ய பரம்பரை நான் என்று சொல்லிக்கொள்ளும் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் தன் பக்தர்களுக்கு அருளிய மொழி என்ன தெரியுமா?
நான் மறைந்தாலும், என்னை நம்பி இருப்பவர்களுக்கு நான் என்றும் துணையாக இருப்பேன். என்னை நம்பாதவர்களுக்கும் நம்பிக்கை வரும் பொருட்டு உதவிகள் செய்து வருவேன்!
இன்றுவரை தன் பக்தர்களுக்கு ஆசியும் அருளும் வழங்கித் கொண்டுதான் இருக்கிறார் பாடகச்சேரி சுவாமிகள். அந்த மகானின் திருவடி தொழுவோம்! தரிசனம் பெறுவோம்.
மகான் சாங்கு சித்த சிவலிங்க நாயனார்| Magaan Saangu Siddha Sivalinga Nayanar| CHENNAI - LONDON 40 Min
சமையல்காரராக இருந்து சித்தரானவர் நாற்பது நிமிடத்துக்குள் சென்னையிலிருந்து லண்டன் சென்று அற்புதம் செய்தவர் “உன்னுள் உத்தமனை காணும் வழி சாகா கல்வி” என்று உலகத்திற்கு ஞான உபதேசம் அருளியவர். நவகண்ட யோகத்தில் வல்லவர் "மகான் ஸ்ரீ சாங்கு சித்த சிவலிங்க நாயனார் ஜீவ சமாதி - கிண்டி"
ஒவ்வொருவரும் தங்களை உணர வேண்டும். நான் யார்? என்ற கேள்விக்கு விடை காண வேண்டும்? அந்த ஆத்ம ஞானத்தை பெற செய்யவே சித்தர்கள் அற்புதங்களை நிகழ்த்தி காட்டினார்கள். அப்படித்தான் சென்னையில் வாழ்ந்த ஒரு சித்தர் நாற்பது நிமிடத்துக்குள் சென்னையிலிருந்து லண்டன் சென்று அற்புதம் செய்தார் நினைத்துப்பார்த்தால் வியப்பூட்டும் இந்த அற்புதத்தை செய்தவர் சாங்கு சித்த சிவலிங்க நாயனார்.
“உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி”
இதுவே நம்முடைய வினாவிற்கான பதிலுமாக இருக்கிறது.
சாங்கு என்றால் அதன் பொருள் என்ன?
அம்புகளில் பலவகைகள் உண்டு. அதில் சாங்கு என்கிற அம்பு மிக கூர்மையாக இருக்கும். ஏன்? என்ற கேள்வி. இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை. ஞானம் சம்பந்தமாக. நாம் பலவித கேள்வி கணைகளை தொடுக்க வேண்டும். அத்தகைய கேள்வி களுக்கு பிறர் மூலமாக பதில் கிடைக்கும். இல்லை சில சமயங்களில். நமது கேள்விகளுக்கு நமது ஆழ்மனமே பதிலை சொல்லும்.
கேள்வி என்னும் அம்பை கொண்டு. ஞானம் என்னும் கனியை பரி. என்று இவர் தனது சீடர்களுக்கு பலமுறை உபதேசித்து உள்ளார். இவரது கருத்துக்களும், அறிவும். சாங்கு என்கிற அந்த அம்பை போல் கூர்மையாக இருக்கும் என்பதால் அப்பெயர் .
சாங்கு சித்தன் என்றால். குருவின் உபதேசத்தை பெற விரும்புபவர் என்றும் அர்த்தம். சாங்கு சித்தர். சர்வ வல்லமை பொருந்தியவராக இருந்தாலும். தான் மேலும், மேலும் பல விசயங்களை கற்று கொள்ள வேண்டும் என்று அவர் நினைத்தார். அதனாலும் இவருக்கு இப்பெயர் வந்து இருக்கலாம். போன்ற பல காரணங்கள் இருந்தாலும். உண்மையில் இவர் கபில முனிவர் வகுத்த சாங்கியம் என்கிற தத்துவத்தை பின்பற்றினார் என்பதாலேயே இந்த பெயர் இவருக்கு வந்து இருக்கும்.
சாங்கியம் இந்தியத் தத்துவங்களில் சிறப்பானதும் முன்னோடியான தத்துவம் ஆகும். உலக படைப்பு மற்றும் சீவராசிகளின் தோற்றம் குறித்து சாங்கிய தத்துவம் சொல்கிறது.
சாங்கிய தத்துவங்களையே ஞான யோகம் என்கிற பெயரில் கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொல்லி இருக்கிறார். கபில முனிவர். வியாசர் போல் விஷ்ணுவின் அம்சமானவர் என்று வைஷ்ணவ நூல்கள் சொல்கின்றன. புத்த மத சிந்தனையில் கூட சாங்கியம் அதிகம் இடம் பெறுகிறது.