Showing posts with label அகத்தியர். Show all posts
Showing posts with label அகத்தியர். Show all posts

அகத்தியர் அருளிய ஐயப்ப பஞ்சரத்னமாலா

ஐயப்ப பக்தர்கள் ஒவ்வொரு நாளும், ஐயப்ப மந்திரங்கள், பக்தி பாடல்கள் படித்து வழிபாடு செய்வது நல்லது. அதிலும் அகத்தியர் அருளிய ஐயப்ப பஞ்சரத்னமாலா.

ஐயப்பன் பஞ்சரத்ன மாலை!
அத்வைத வஸ்துவாய் ஆதி பரமாத்மனாய்
அசலனாய் அகுண குணணாய்
அமரருக்கதிபனாய் அடியவர்க்கெளியனாய்
சுத்த ஸத்துவ பரப்ரஹ்ம சாட்சாத்கார
ஜோதியாய் தோன்றும் உந்தன் துரிய
லீலா வைபவங்கள் பல என்று மறை
சொல்லுகின்றதேதுமறியேன்
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா


பித்தனாய் நினது புகழ் பேசித் திரிந்து நின்
பெருமையை நினைத்து பாடிப் பிதற்றுகின்றேன்
பிழை பொறுத்தாள வருவாய்
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
தத்துவமனைத்தும் ஒரு முத்திரை உரைத்திட
தந்த சற்குருநாதனே
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா (1)

அந்தகாரத்திலே அருள் விளக்கேந்துவாய்
அடவியிலே வழி காட்டுவாய்
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
அரவு பலி மிருகங்கள் அலகை பேய் குறள்
கள்வர் அணுகாது காத்து வருவாய்
வந்தனை புரிந்து மனமலரிட்டு வாழ்த்துவோர்
மரபெல்லாம் ஓங்க வைப்பாய்
மாறாத நோய்க்கொரு மருந்தாகி மாற்றுவாய்
மரணபயமும் போக்குவாய்
இவ்விதம் நீ புரியும் எண்ணிலா விளையாடல்
எண்ணித் துதிக்க வசமோ ஏறாத மலையேறி
எய்தும் மெய்யடியவரை ஏற்பதுன் பாரமல்லவோ
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
சந்தண சுகந்த சுந்தர சுதந்திர சித்த சங்க சற்குருநாதனே
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா (2)

ஏந்து புகழ்சூழ்ந்த கனகாந்தகிரி ஓங்கி எழும்
ஏகாந்த ஜோதிமணியே
எண்ணுவோர் எண்ணியதெல்லாம்
பேரின்ப மழை பொழியும் முகிலே
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
நீந்தரிய பிறவிப் பெருங்கடல் கடத்தி
அருள்நிலை சேர்க்க வந்த துணையே
நெடும் பாலைவன வாழ்வில் நின்ற கற்பகமே
நிராலம்பமான மெய்ப்பொருளே
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா

மாந்தளிர் மடந்தையர் மருங்குற மகிழ்ந்தெம்மை
வாழ்விக்கும் கருணை வடிவே
வர நீல சேல சிங்கார சுகுமார
மதிவதனனே மணிகண்டனே
சாந்த சமரச சச்சிதானந்த சன்னதியில்
சரணமே சரணம் அருள்வாய்
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா (3)

நீயலாதென் குறைகள் கேட்பவருமில்லை ஒரு
நிழலில்லை என்று மனமோ நிலையில்லை
நினை அடையும் நியமங்களில்லை
நின் நினைப்பன்றி ஒன்றுமில்லை
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
ஆயிரம் பிழைகள் தனதடியவர் புரிந்தாலும்
ஆதரித்தருளும் அரசே அவதார மூர்த்தயே
அன்பான தெய்வமே ஆதி அய்யப்ப குருவே
தூயனே பம்பைத் துறைவனே சிவஞான ஜோதியே
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
ஈன்றவர் உன்னைத் தொட்டனைத்துய்ய நீ
யார் போன்றுளாயென சொல்லாது
தாயவள் மடித்தலம் இருந்து முத்திரை ஒன்று
தந்தை போல் வைத்த மகனே
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா (4)

அரியமறை புகழ்கின்ற அன்னதானம் செய்யும்
அருளாளர் வாழ்க வாழ்க
அனுதினமும் நின் கோவில் இலகு திசை
தொழுகின்ற அனைவரும் மகிழ்ந்து வாழ்க
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
விரத நியமங்களால் மெய் மறந்துனது பெயர்
விண்ணதிரவே முழங்கி வெற்பேறி வளர்படிகள்
மேலேறி வருகின்ற மெய்த் தொண்டர் வாழ்க
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா

தெரிய விளையாடி அற்புத சித்து காட்டும் உன்
திருநாம மகிமை வாழ்க
தேடும் இக்கவிமாலை பாடுவோர் இன்பச்
சிறப்பெல்லாம் ஓங்கி வாழ்க
சரியை கிரியா யோக ஞான சன்னதி
சரணம் சரணமே சரணம் ஐயா
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா (5)

அகத்தியரால் அருளப்பட்ட ஐயப்ப மாலை

 


தமிழ் முனியாம் அகத்தியரால் அருளப்பட்ட ஐயப்ப மாலை

சபரிமலை பிரதிஷ்டைக்கு வழிகாட்டியவரும், பந்தள வேந்தனுக்கு குருவாக இருந்து ஐயப்ப தத்துவத்தை உணர்த்தியவரும், விரதமுறைகளை வகுத்து கொடுத்தவரும், ஐயனை முதன்முதலில் பூஜித்தவரும் அகத்தியரே ஆவார். சாஸ்தாவின் மூலாதார க்ஷேத்ரமான சொரிமுத்தைய்யன் கோவிலில் தான் அகத்தியருக்கு சாஸ்தாவின் பூர்ண தரிசனம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. ஆர்யாங்க்காவு, அச்சன் கோவில் என ஆறு ஆதார சக்ரங்க்களுக்கான கோவில்களிலும் வழிபட்டவர் அகத்தியர். ஆக்ஞா சக்ரமான சபரிமலையில் ஐயனை போற்றி அவர் எழுதியதே இந்த தமிழ் துதி

அய்யன் ஐயப்பன் ஆனந்த சித்தனாக விளங்குவதால், சித்தர்களுக்கேல்லாம் தலைவரான அகத்தியர் ஐயனை இப்படி துதித்தார் போலும்.

இந்த ஐயப்ப மாலை ஸ்ரீ நொச்சூர் ஸ்வாமிகள் மூலமாக அகத்தியர் இவ்வுலகுக்கு அளித்த சொத்து. இது பக்தர்தம் துன்பங்களையும் துயரங்களையும் போக்கி நல்வாழ்வு அருளக்கூடியது.

"ஸ்ரீ ஐயப்ப மாலை"

வையமும் வானும் வாழ மறைமுதல் தருமம் வாழ
செய்யும் நற்செயல்கள் வாழத் திருவருள் விளக்கம் வாழ
நையும் ஊழுடையார் தத்தம் நலிவு அகன்று இனிது வாழ
ஐயனாய் அப்பனானான் அவர்பதம் வணக்கம் செய்வோம்.

மெய்யெல்லாம் திருநீறாக விழியெலாம் அருள் நீராகப்
பொய்யிலா மனத்தராகிப் புலன் எலாம் ஒருத்தராகி
வெய்ய வேறற்றவுன் விளக்கமுற்றன் பால் விம்மி
ஐயனே அப்பா என்பார் அவர் பதம் வணக்கம் செய்வோஒம்.

சக்தியெலாம் சபரிமலை தத்வமெலாம் சபரிமலை
சித்தியெலாம் சபரிமலை மோனமெலாம் சபரிமலை
முக்தியெல்லாம் சபரிமலை சித்பரமாம் சபரிமலை
புத்தியெல்லாம் சபரிமலை போற்றிடுவாய் நீ மனமே!

ஓங்காரமான மலை ஓதுமறை ஓங்குமலை
ஹ்ரீங்கார மந்த்ர மலை ரிஷிகணங்கள் ஏத்தும் மலை
ஆங்காரம் அழிக்கும் மலை ஆனந்தம் கொழிக்கும் மலை
பாங்கான சபரிமலை பல்வளம்சேர் மலை வளமே!

ஹரிஹர புத்ரா போற்றி அன்பான குருவே போற்றி
புஷ்களை ரமணா போற்றி என்னையாள் சத்குருவே போற்றி
கண்கண்ட நாதா போற்றி சபரிமலை வாசா போற்றி
கஞ்சமலர்ப் பாதா போற்றி ஐயனே போற்றி! போற்றி!

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!
ஸ்வாமியே சரணம் ஐயப்பா!
ஸ்வாமியே சரணம் ஐயப்பா! 


ஐயனே போற்றி போற்றி
முந்திய சிவனார் போற்றி
மூர்க்கனும் அசுரன் போற்றி
இந்திர வரவும் போற்றி
ஈசனார் வேசம் போற்றி
பந்தடி கமலம் வெற்றி
வந்ததோர் விரதம் போற்றி


விருத்தம்,

1. ஆனைமுகத்தோன் தம்பி அருள் குமரனுக் கிளையோன்
வானவர் போற்றும் வாணி வந் தெனக்கு அருள வேனும்
சேனையில் தலைவர் போற்றும் தென் குளத்தூரிலையன்
கானக விளையாட்டெல்லாம் கருத்துடன் போற்றாய் நெஞ்சே

2. அந்தணர் முனிவர் சூழ் அற்புத சபையைப் போற்றி
மந்திரம் கையிலேந்தும் வாழ்குளத்தூரான் மீதில்
சிந்தையில் உதித்த செல்வம் செப்புமென் கவி விளங்க
கந்தனும் குருவும் வாணி கஜமுகன் காப்பதாமே

3. சாஸ்தா நமக்குண்டு தாய் போல் வருவார் இந்தத் தனி வழிக்கே
பார்த்தால் நமக்கு பயமேது மில்லை பயந்து பயந்து
ஆற்றாமல் சொல்லி அபய மிட்டோடி வரும் சுரர்தமை
கார்த்தே வரும் கடிய குன்றேறிய காவலனே

4. வாழையும் தெங்கும் வரிகை பலாவுடனே மாங்கனியும்
சோலையும் அருள் வண்டுலாவும் குளத்தூர் பதியில் சென்றால்
கங்கா நதிக்கும் ஹிமசேது மட்டுக்கும் இந்த கலியுகத்தில்உன் காலில் அதிசயம் போல் கண்டதில்லை என்பவர்க்கு
சிங்கார வஞ்சிமலையேறி சனிவாரம் தொழுதவர்க்கு
மங்காத சர்வ பீஷ்டமும் கொடுப்பதாமே

அகத்தியர் ஆகாய காவியம்

அகத்திபர் ஆகடிய காவியம் by Sithargal Rajiyam on Scribd

அகத்தியர் கூறும் கர்ம வினை

அகத்தியர் கூறும் கர்ம வினை?

விதியைப் பற்றியும், கர்மவினை பற்றியும் உலகம் முழுவதும் பரவலான நம்பிக்கை மக்களிடையே இருந்து வருகின்றது.''

சித்தர் அகத்தியர் பெருமான் இயற்றிய பல லட்சம் பாடல்களில்
"அகத்தியர் கன்ம காண்டம் -300" என்ற சிறப்பு வாய்ந்த நூலில் எந்த வித கர்ம வினையினால் என்னென்ன நோய்கள் தோன்றும் என மிகத்தெளிவாக விளக்கமளிக்கின்றார்.

ஒருவரிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காத பாபத்தால் "ஈளை நோய்" வரும். [ ஈளை, இளைப்பு, ஆஸ்த்மா ]

பசுமையாய் வளர்ந்த இளம் செடி,கொடிகளை வெட்டுவதும்,சிறு பூச்சிகளின் கை, கால்களை வெட்டினால் "வாதநோய் - பக்கவாதம்" வரும்.
பிறர் குடியை கெடுத்தல்,நல்லோர் மனதை நோகச் செய்தல், பிறர் பசியில் இருக்க அவர் பார்வையில் தான் உணவு உண்டால் வரும் நோய் "குன்மநோய் எட்டு" அதாவது அல்சர், குடற் புண்
,இதில் எட்டு வகை நோய் வரும்.[இன்று ஏராளமான பேருக்கு இந்நோய் உள்ளது]

மலராத அரும்பு பூக்களை கொய்தல், நந்தவனம் அழித்தல், பெற்றோர் மனம் நோகச் செய்தல் இதனால் "குஷ்ட நோய்" வரும்.

ஊர்ந்து செல்லும் சிறு விலங்குகள்,பறவைகள் போன்றவைகளைக் கொன்றால் வரும் நோய் "வலிப்பு நோய்" ஆகும்.

பிஞ்சு காய்கறிகள், இலை தழை பறித்தல்,பட்டை வெட்டுதல்,வேர் மற்றும் கொடிகள் வெட்டுவதால் பீனிசம்,[சைனஸ்],"ஒற்றைத் தலை வலி, மண்டைக்குத்து, மண்டைக் கரப்பான்" போன்ற நோய்கள் வரும்.

இளம் பயிரை அழித்தல், விந்து அழித்தல், கன்றுக்குரிய பாலைக் குடித்தல்,இதனால் "குழந்தையின்மை" குழந்தை பிறக்காது.

வீண் வம்பு பேசுதல், பிறரைப் பழித்தல், பொய் பேசல், ஆங்காரம் , ஆணவம் போன்ற வற்றால் "சோகை ,பாண்டு" [இரத்த சோகை, கல்லீரல் மண்ணீரல் வீக்கம்] நோய் வரும்.

உயிர்களை வதைத்தல்,ஊன் தின்னல், நன் மங்கையரைக் கற்பழித்தல், பிறர் செய்யும் புண்ணிய காரியங்களைக் கெடுத்தல், குடிநீரைக் கெடுத்தல் போன்றவற்றால் "கிராணி, கழிச்சல்",[சீத பேதி] நோய் வரும்.

பொய் மிக பேசல், பிறரை திட்டுதல், வஞ்சகம் பேசுதல்,கொடுத்த வாக்கை மறுத்தல், விஷமிடல் போன்றவற்றால் "கண், கன்னம், வாய்" பல் போன்றவற்றில் பல வகை நோய் வரும்.

சற்குருவை தூற்றுதல், வழியிலே முள்ளிட்டு வைத்தல் இவற்றால் "வண்டுகடி, ஊறல், கரப்பான்" நோய் வரும்.

வெடி வைத்தல், கல்லெறிதல், சிவ யோகிக்கு சினம் உண்டாக்குதல் இதனால் பிளவை எனும் "இராஜபிளவை" முதுகு தண்டில் வரும்.

பெண்களை மோகக்கண் கொண்டு, காம எண்ணத்துடன் உற்றுப் பார்த்தல்,கோழி ,ஆடு போன்றவற்றை வெட்டும் போது பார்த்தல், ஆலயம் செல்ல விரும்பாமை, தெய்வ நிந்தனை போன்றவற்றால் "கண்நோய் 96" - வகைகள் தோன்றும்.

கர்மவினை தான் நோய்கள் தோன்ற காரணம்
இனியாவது வினைகளை சேர்க்காமல் வாழ்வோம்

அகத்தியரின் முருகன் மந்திரம்

 

கரிய வெற்றி தரும் முருகன் மந்திரம்.... அகத்தியர் அருளியது

சித்தர்கள் பலர் முருகப்பெருமானை வழிபடுவது நாம் அறிந்ததே. அதிலும் தமிழ் மொழிக்கான இலக்கணத்தை வகுத்த அகத்திய மாமுனிவர், தமிழ் கடவுள் முருகன் மீதும் பெரும் பக்தி கொண்டிருந்தார். மானிட நலனுக்காக பல மந்திரங்களை அகத்தியர் தந்துள்ளார். அந்த வகையில் நமது சொல்லும் செயலும் தெளிவாக இருக்க அகத்தியர் அருளிய முருகன் மந்திரம் பற்றி பார்க்கலாம்:


ஓம் முருகா,குரு முருகா,அருள் முருகா,ஆனந்த முருகா

சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாக்ஷ்ரனே

என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க

ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா

முருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம்:

சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே

தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே

பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே

பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே

சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே

சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே

அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை

ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே.

- அகத்தியர்


ஓம் முருகா,
குரு முருகா,
அருள் முருகா,
ஆனந்த முருகா,
சிவசக்தி பாலகனே,
ஷண்முகனே,
சடாக்ஷ்ரனே,
என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க,
ஓம் ஐம் ஹ்ரீம்,
வேல் காக்க சுவஹா!

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வந்தால் குரு பகவானின் அருள் கிடைக்கும், செவ்வாய் தோஷம் விலகும். அதோடு நமது நாக்கில் இருந்து வரும் வார்த்தைகள் அனைத்தும் சத்திய வாக்காக இருக்கும். நமது எண்ணமும் செயலும் நன்னெறிகளை நோக்கி இருக்கும். இதன் காரணமாக சமுதாயத்தில் நமக்கான ஒரு அறிய இடம் கிடைக்கும். நமது நிலையானது படிப்படியாக உயரும். நம் மீது மக்களுக்கு மரியாதை ஏற்படு

முருகனின் ஆறெழுத்து  மந்திரப் பிரயோகம்....

முருகனின் ஆறெழுத்து  மந்திரப் பிரயோகம்:-

சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே

தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே

பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே

பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே

சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே

சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே

அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை

ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே

மேற்கண்ட  மந்திரம் அகஸ்தியர்   அருளியது  எந்த காரியத்திற்காக  கிளம்பும் முன் இதை ஜெபித்து திருநீறு  அணிந்து செல்ல கரிய வெற்றி உண்டாகும்.

ஷண்முக சடாட்சரம் ,ஆறெழுத்து  மந்திரம் எனப்படும் சரஹணபவ மந்திரத்தின்  பிரயோகம்:-

1.சரஹணபவ - என தொடர்ந்து ஜெபித்து வர  சர்வ வசீகரம் உண்டாகும்.

2.ரஹணபவச - என தொடர்ந்து ஜெபித்து வர  செல்வம், செல்வாக்குடன் கூடிய  வளவாழ்வு உண்டாகும்.

3.ஹணபவசர - என தொடர்ந்து ஜெபித்து வர  பகை,பிணி நோய்கள் தீரும்.

4.ணபவசரஹ - என தொடர்ந்து ஜெபித்து வர  எதிர்ப்புகள், எதிரிகளால் வரும் துன்பங்கள்  நீங்கும்.

5.பவசரஹண - என தொடர்ந்து ஜெபித்து வர உலகத்து உயிர்கள் யாவும் மனிதர்கள் முதல் ஜீவ ஜந்துக்கள்   வரை  நம்மை விரும்பும்.

6.வசரஹணப - என தொடர்ந்து ஜெபித்து வர எதிரிகளின் சதி,அவர்களால் வரும் தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்.

அவரவருக்கு தேவை என்னவோ அதற்குண்டான மந்திரத்தை தேர்ந்தெடுத்து ஜெபிக்கவும்.ஜெபம் ஆரம்பம் செய்யும் நாள் வளர்பிறை காலத்தில் விசாகம் அல்லது  கார்த்திகை நட்சத்திரத்தன்றோ , செவ்வாய்க்கிழமை அன்றோ இருந்தால் சிறப்பு.90 நாட்கள் குறைந்தது 108 அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.முதல் நாளும் ,ஜெபம் முடிக்கும் நாளும்  வெற்றிலை,பாக்கு,திணை மாவு,பழங்கள் வைத்து  வழிபடவும்.மற்றைய நாட்களில் இயன்றதைப் படைக்கலாம்.டைமண்ட் கல்கண்டு கூட படைக்கலாம்.

ஒரு செம்புத் தட்டில் விபூதி பரப்பி அதில் அறுகோணசக்கரம் வரைந்து அதில் முதல் கோணத்திலிருந்து   (அதாவது மேலே முதலாவது கோணம் ) நாம் ஜெபிக்கும் மந்திரத்தை வரிசையாக ஆறுகோணத்திலும் எழுதி அறுகோண நடுவில் ''றீங்'' என்று எழுதி ஜெபம்  செய்து அந்த விபூதியை அணிந்து வர  விரைவான சிறந்த பலன் உண்டாகும்.

மேற்கண்ட மந்திரங்களை வெறுமனே ஜெபிப்பதை விட முன்னால் ஓம் றீங் எனச் சேர்த்து ஜெபித்தால் அதிக வீரியமாய் மந்திரம் பலன் தரும்.

உதாரணமாக :-

சர்வ வசீகரம் வேண்டி ''சரஹணபவ'' என ஜெபிக்கவேண்டும் அதை ''ஓம் றீங் சரஹணபவ'' என ஜெபிக்க வேண்டும்