அசுவமேத யாகம் உண்மை ரகசியம் என்ன | Ashwamedha Yagam Real Facts

 

அசுவமேத யாகம் என்பது ஒரு பெரிய வேள்வியாகும். ஒரு நாட்டின் அரசன் தனது அரச குதிரையை தனது வெற்றிக் கொடியை அதன் முதுகுப்பகுதியில் கட்டி 

நாடு முழுவதும் திரிய விடுவான். அந்தக் குதிரையுடன் அவனோ அல்லது அவனது அரச பிரதிநிதியோ பெரும்படையுடன் உடன் செல்வார்கள். அதைப் பிடித்து மடக்கும் வேற்று அரசன் மேல் படையெடுப்பு நடத்தி அவனை வெற்றிகொண்ட பின் குதிரை மேலும் தொடர்ந்து செல்லும், மற்ற மன்னர்களெல்லாம் அவனது ஆட்சியை ஏற்றுக் கொண்ட பிறகு “சக்கரவர்த்தி” என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்வான் இதுவே அசுவமேத யாகத்தின்  நொக்க்கம் ஆகும் 

கடவுளுக்காக பலியிடுதல்' என தவறான அர்த்தம் கொள்ளப்படுகிறது. ஆனால், வேத யாகங்களில், யாகம் என்பது விலங்குகளை பலியிடுதல் என அர்த்தம் அல்ல. ஏனெனில்,

இது ஒரு குறியீட்டு செயல் அல்லது யாகத்தின் விலங்குகள் களிமண் உருவங்கள் அல்லது தானியங்களாக இருக்கலாம் அல்லது அவை குறிப்பிட்ட சொற்களாக இருக்கலாம். மனிதர்களை கொல்வது அல்லது யாகம் செய்பவர் என்று ஒருபோதும் அர்த்தப்படுத்த முடியாது. 

நல்லொழுக்கமுள்ளவர்கள மிருகங்களைக் கொல்வதில் ஈடுபடுவதில்லை.

ரிக்வேத மந்திரம் 

"தயிர், தேன், நெய், நீர் மற்றும் தானியங்கள் ஆகியவை(ஐந்தும்) விலங்குகளின் வடிவங்கள்"- தைத்ரிய சம்ஹிதை 

வசிஷ்ட சம்ஹிதை 11.12 இல் குதிரையைப் பற்றி பின்வருமாறு கூறுகிறது.

"பரலோகம் உங்கள் உயர்ந்த பிறப்பு, காற்று உங்கள் தொப்புள், பூமி உங்கள் வீடு."

இங்கே குதிரை பலியிடப்பட்ட நெருப்பு என குறிக்கப்படுகிறது.

'அஸ்வமேத என்பது சூரியன் என்று பொருள்

பலியிடப்பட்ட குதிரையின் தலை விடியல், கண் சூரியன், மூச்சு காற்று, காது சந்திரன், கால்கள் காலாண்டுகள், விலா எலும்புகள் இடைநிலை காலாண்டுகள், இரவும் பகலும் கண் சிமிட்டுதல், மூட்டுகள் அரை மாதங்கள் , மாதங்கள், கால்கள் பருவங்கள், தண்டு ஆண்டு, முடி கதிர்கள் (சூரியனின்), நக்ஸ்.சாத்ரா வடிவம், எலும்புகள் நட்சத்திரங்கள், சதை மூடுபனி, முடி செடிகள், வால் முடிகள், வாய் அக்னி, திறந்த (வாய்) வைஸ்வனாரா, தொப்பை கடல், ஆசனவாய் வளிமண்டலம், விந்தணுக்கள் வானத்தையும் பூமியையும், சவ்வு வீரல் அழுத்தும் கல், விதை சோமா  தைத்ரிய சம்ஹிதா 7.5.25 சொல்லபடுகிறது   ழுழு பிரபஞ்சமும்  குதிரையாக சொல்லபடுகிறது 

மனிதர்களின் உணர்வுகளை அமைதியற்றதாகவும், அவற்றின் இயல்பில் அசைந்து கொண்டிருப்பதாகவும் குறிக்கிறது. இந்த சூழலில், அஸ்வமேதா என்பது ஒரு மனிதன் தனது கீழ் உணர்வுகளை வென்று ஆன்மீக ஜீவனின் நிலைக்கு உயரக்கூடிய புலன்களின் மீது சரியான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.

அசுவமேத யாகம்  என்பது என்ன யோகவழி விளக்கம் என்ன என்பதை பார்ப்பொம் 

அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில்    

பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில்

அண்டமும் பிண்டமும் ஒன்றே

அறிந்துதான் பார்க்கும் போதே

இங்கு ‘அண்டம்’ என்பது உலகம், நவகோள்கள், பால்வீதி மண்டலம், பிற நட்சத்திர மண்டலங்களை உள்ளடக்கிய பிரபஞ்சம்.

‘பிண்டம்’ என்பது உடல்.

அண்டத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் பிண்டமாகிய உடலில் உள்ளதாக இந்தப் பாடல் நமக்குத் தெரிவிக்கின்றது.

அதாவது மண், நீர், தீ, காற்று, ஆகாயம் என்கிற பஞ்ச பூதங்கள் அண்டத்திலும் நிறைந்துள்ளன. பிண்டமாகிய உடலிலும் அணுக்கள் 


நிறைந்துள்ளன. இந்த பஞ்ச பூதங்கள் தான் உடலில் எலும்பு, தசை, ரத்தம், மூளை போன்ற உடல் கட்டமைப்புகளை உருவாக்குகின்றன !

யோகி ஒருவர்  ஏழு சக்கரங்களையும் காற்றின் மூலம் உயர்த்தச் செய்தான். காற்றினை அடக்கிதான் யோக நெருப்பை ஏழு சக்கரங்களின் வழியாக ஏற்ற வேண்டும். இதை பூரிக்கும் குதிரை என்பர் (அசுவமேத யாகம்).  ஆகாச நடனம்,அயிரம் சுரியன்,ஜொதி என்று சொல்வர் அப்படி யோகம் புரிந்து  ஒருவர் தெய்வ நிலை அடைவர்  ! 

இதை உறுதி படுத்தும்படியாக ராமன் இறுதி காலம்  ராமன் கடம்பவன சித்தரிடம் பாதம் பனிந்து ஆன்மிகத்தில் உயர்  நிலை அடைந்தார் என்று எற்கனவே  அகத்தியர் புலஸ்த்தியருக்கு சொல்லிய ரகசியம் ராமன் யார் வீடியோவை வெளியிட்டு உல்ளொம் மிண்டும் பார்க்கவும்  ! 

புராணங்கள் உணர்த்தும்  யோகத்தை மறைமுகமாக சொல்லவந்தவை என்பது தெளிவாகிறது. மெலும் பயணிப்போம் சித்தர் ராஜ்ஜியத்தில்  தொடரும் !


No comments:

Post a Comment