Showing posts with label ஞானம். Show all posts
Showing posts with label ஞானம். Show all posts

மதுரை வாலைசாமி

ஞானக் கும்மி

காப்பு

1. சீர்மேவு ஞான வடிவான பர
தேசிகன் சற்குரு தன்னருளாற்
பார்மீதில் ஞானக் கும்மி பாடசிவ
பாலன் கணபதி காப்பாமே.

2. அம்பிகை வாலை பதம் போற்றி - அருள்
ஆனந்தக் கும்மித் தமிழ்பாடத்
தும்பி முகனுக் கிளையவ னாஞ்சிவ
சுப்பிர மண்யனுங் காப்பாமே.

3. நாலாம் வேதமு மோராறும்-வெகு
நாநா பேதமாய் நின்றானை
மேலாய்ப் போற்றிக் கும்மி பாடச்-செந்தில்
வேலவன் தன்பதங் காப்பாமே.

4. பாரி லுயர்மது ராபுரியில்-வாலை
சாமிசொல் லுங்கும்மிப் பாடலுக்கு
மேரு வதனடி மூலமுக் கோண
விநாயகன் தன்பதங் காப்பாமே.

5. ஆதியும் அந்தமும் ஒன்றாகி -வளர்
அண்டபின் டம்மு மிரண்டாகிச்
சாதி பலபல வேறாகி நின்று
தத்துவங் கேளடி ஞானப்பெண்ணே!

6. தேகமா னதோர் மலபாண்டம்-அதிற்
சிற்பணம் வந்திடு முற்பணத்தை
யோக மெனுந் தமிழ்ப்பாடலுக்கு-மனம்
உவந்து கேளடி ஞானப்பெண்ணே!

7. ஏகப் பெருவெளி பட்டணமாம்-அதில்
எவனோ சித்த னொருவனுண்டாம்-அந்த
வாச னிலைபேசா வாயுமில்லை-அந்த
மாப்பிள்ளை பெண்ணென்று ஞானப்பெண்ணே

8. சாட்சி யெனும்பிர மன்பிள்ளைக்கு மூலச்
சத்தியென்ற வொரு பெண்ணாச்சு:
சூட்சும காரண மிரண்டினுக் குநிலை
தூலநா மென்கிறாள் ஞானப்பெண்ணே!

9. ஊமையன் என்றே அறிந்துகொண்டாள் அந்த
ஊமைபேச் செல்லாமே நாமென்கிறாள்:
சீமையை ஆளத் துசங் கட்டினாள் அந்தச்
சீமாட்டி தானடி ஞானப்பெண்ணே!

10. பெண்ணர சானதி ரத்தின மாமதைப்
பெண்ணென்று சொல்லவுங் கேள்வியுண்டோ?
மண்ணையும் விண்ணையுங் கூட்டிப் பயிர்செய்த
மார்க்கத்தைக் கேளடி ஞானப்பெண்ணே!

11. பட்டணங் கட்டி மகராசி துரை
பாங்குடன் செய்த அதிகாரச்
சட்டமுஞ் சொல்லத் தொலையாதே விதைச்
சற்றே கேளடி ஞானப்பெண்ணே!

12. அஞ்சூர் அஞ்சூர் வகுப்பாச் சாமம் அதில்
அஞ்சூர் அஞ்சு பிரிவாச்சாம்;
அஞ்சூ ருக்கொரு வித்தாச் சாமம் அதற்
கான குளமுண்டு ஞானப்பெண்ணே!

13. ஊரை யடுத்து மலையுமுண் டாம் அதற்
குள்ளாயிருந்த நிலைக்காரர்
பேரை யுரைக்க இனிக்கே ளுமவர்
பெருமைதா னென்னடி ஞானப்பெண்ணே!

14. தலைமன் னாரிலி ருப்பவ ராமந்தச்
சட்டையப் பிள்ளையும் நெட்டையராம்
நிலமூ மான்யமு மென்னவன் றாளந்த
நிசந்தெ ரியுமோ ஞானப்பெண்ணே!

15. கும்பகோ ணத்திலே அப்புப்பிள் ளையவர்
கூட்டமற் றால்வெகு வாட்டமென்று
செம்பாதிப் பங்குதான் கேட்டுவந் தால்நியாயந்
தெளிவ தெப்படி ஞானப்பெண்ணே!

16. மூலக் குடிவன்னித் தேவரை வரவர்
மூர்க்கமுந் தீர்க்கவு மார்க்கமுண்டோ?
நாலு கரைப்பங்கு நாமென்கி றாரிந்த
ஞாயந் தெரியுமோ ஞானப்பெண்ணே!

17. காத்தவ ராய கவுண்டனுக்குத் திசைக்
காவலும் மற்ற விசாரணையும்
பார்த்து வருவது நாமென்கி றாரிந்தப்
படிநி லைக்குமோ ஞானப்பெண்ணே!

18. ஆகாய மான பரஞ்சோ தியவர்
அஞ்சுக் கரைப்பங்கும் தனக்குள்ளே
சேகர மாமென்றுஞ் சொல்லுகி றாரிந்தச்
சேதியை கேளடி ஞானப்பெண்ணே!

19. அம்பலக் காரரும் மூன்றுபே ராம் பின்னும்
அந்தக னாட்டுக் கணக்கனெ ன்றாம்:
வம்புசெய் தாலந்த முன்னா ளனுப்படி
வகைதெ ரியுமே! ஞானப்பெண்ணே!

20. ஒன்பது கூத்தரும் பங்காளி எந்த
ஊருக்கு ளூர்களும் அப்படியாம்;
ஐம்பது சேருவைக் காரருக் குமவன்
அண்ண னொருவனாம் ஞானப்பெண்ணே!

21. கோயிற் குருக்க ளொருபார்ப் பான்தெப்பக்
குளத்தின் மேலே யவன்வீடு.
தாவிக் கொண் டுதொடை தட்டுகி றானிலஞ்
சாருமோ கேளடி ஞானப் பெண்ணே!

22. செட்டி யொருவனாம் பங்கா ளிஅதிற்
சேர்ந்தவனாக மிக வோங்கிக்
கட்டி வராகனைக் கொண்டு வந்தால் காணி
யாட்சி செல்லுமோ ஞானப்பெண்ணே!

23. காரியக் காரரோ அஞ்சுபே ராமவர்
காரியம் பார்க்க வீரஞ்சு பேராம்;
மாரீசக் காரர்: சமாதிக்கண் மூன்றுபேர்
வார்த்தையைக் கேளடி ஞானப்பெண்ணே!

24. ஊழியக் காரர் அநேகருண் டாமவர்க்
கும்பளஞ் சம்பளம் நிரம்பவுண்டாம்:
பாளையங் கோட்டைக்குச் சாரிவைத் தாலிவர்
பதுங்குவாரடி ஞானப்பெண்ணே!

25. பாழூ ருக்கொரு மேல்மணி யாமவன்
பார்த்தாற் சின்னப் பயல் காணும்
வேளூ ரானரைப் பங்குத் தனமுதல்
விற்றுக் கொடுக்கிறான் ஞானப்பெண்ணே!

26. ஆராறு குடியு முண்டா கும்மதில்
அந்நியக் குடிமுப்பத் தைந்து முண்டாம்:
ஓராறு பத்துக் குடிதனி லேயஃது
ஒட்டுக் குடியடி ஞானப்பெண்ணே!

27. இத்தனை பேரு மிருந்தா லும்மதில்
இரண்டே பேர்கள் சமுசாரி:
அத்தனை பேரையுந் தள்ளிவைத் தாற்பயிர்
ஆரிடு வாரடி ஞானப்பெண்ணே!

28. ஒற்றேர் ஒன்றை எருதா கும்மதில்
ஒன்று பரம்புமுச் சாலடிக்கும்;
கற்றுடன் காரணங்கண்டா யோஞானக்
கண் கொண்டு பாரடி ஞானப் பெண்ணே!

29.  இரண்டு கரைக்குடி மானிய மாமதில்
இட்ட விதையொட்டி ரட்டியுண்டாம்;
பண்டு பழகின மேன்புள்ளிக் காரனும்
பார்த்துப் போயினான் ஞானப்பெண்ணே!

30. புள்ளிக் குறைச்சலும் வாரா மல்முன்னே
போட்ட பலனுங்கை யாடாமற்
கொள்ளையிடச் சொல்லி ஒலைவந் தாலிது
கொடுமை சொல்லடி ஞானப்பெண்ணே!

31. வந்த விதியென்றி ருந்தா லும்வசக்
கட்டு நிலுவையுங் கேட்கிறானே
இந்த மகிமை யவன்றா னோவிதற்
கென்ன சுகமடி ஞானப்பெண்ணே!

32. தரிசுக் கிடக்கிற பெட்டியி லேயேறித்
தண்ணீர் பாய்ச்சவுஞ் சொல்லுகிறான்;
வரி கொடுக்கிற தில்லையென் றாற்பூசை
மாட்டுகி றானடி ஞானப்பெண்ணே!

33. ஊரிற் குடியதி ருக்கவொட் டானிருந்
தூழியஞ் செய்யவும் வேலையிட்டான்;
தீரமில்லை யென்று சொன்னா லுமவன்
தெண்டம் பிடிக்கிறான் ஞானப்பெண்ணே!

34. அந்த இருபத்தோ ராயிரத் திருநூற்
றுக்கல நெல்லுமே கண்டுமுதல்
வந்ததுண் டோவதில் மூன்றத் தொருபங்கு
வாரம் பிடித்தாண்டி ஞானப்பெண்ணே!

35. மிச்சமிருந்த நெல் லுத்தொகை யில்வாரம்
விண்ணுறுநோய் கொண்ட பேயனுடன்
அச்சுதன் சேயனுஞ் துங்கக்கோ னானுமாய்
அழித்துப் போட்டாரடி ஞானப்பெண்ணே!

36. நிலம் விளைந்ததுங் காணீ ரோவதிற்
செலவழிந்ததும் பாரீரோ?
அலமந்து திரி யாம லேயருள்
ஆனந்தஞ் சேரடி ஞானப்பெண்ணே!

37. எண்சா ணீள மொரு வீடாமதில்
எட்டொரு பீற்றல் மலக்கூடாம்:
பஞ்சாயக் காரரீ ரைந்துபே ருந்தெய்வப்
பதியி தென்கிறார் ஞானப்பெண்ணே!

38. தேக மென்னுஞ் சிவாலய மாமதிற்
சென்னி சிறுவாயிற் கோபுரமாம்.
காக மான விரண்டு கரக்கோடுங்
கையாங் கேளடி ஞானப்பெண்ணே!

39. உண்ணாக் கென்ற கொடி மரமாமதிற்
கோபுர சந்திர புட்கரணி
அண்ணாக் கென்றே வலப்புறத் திற்கண்ட
தக்கினி தீர்த்தமாம் ஞானப்பெண்ணே!

40. நாற்பத்து முக்கோண மண்டப மாம் அதன்
நடுவி ருக்குதாஞ் சிங்காரம்!
பார்ப்பது சக்கரக் கோட்டையிலே யிந்தப்
படியிருக்குதாம் ஞானப்பெண்ணே!

41. பீடமிருப்பது மையத்தி லேபலி
பீட மிருப்பதுங் குய்யத்திலே;
மாடமிருந்த சிவாலயத் தின்மணி
விளக்கி ருக்குது ஞானப்பெண்ணே!

42. இப்படி யான திருக்கோ விலதற்
கெப்படி வாயி லிருக்காதோ
அப்படி யென்று தெரியா மற்றெரிந்
தலைகி றாரடி ஞானப்பெண்ணே!

43. பூட்டைத் திறப்பதுங் கையாலே மனப்
பூட்டைத் திறப்பது மெய்யாலே;
வீட்டைத் திறக்க முடியாமல் விட்ட
வீதியி தென்கிறார் ஞானப்பெண்ணே!

44. வாசலிலே யொரு மேல்வா சலந்த
வாசலிலே சிறு வாசலுண்டு;
நேசமு டன்றிருவாசலிற் பூட்டு
நெருக்கம் பாரடி ஞானப்பெண்ணே!

45. அட்சர மாமௌ னாட்சர மாவது
ஆனால் நல்ல திறவு கோலாம்;
உச்சிதமாகத் திறந்தா லேயந்த
உச்சிவழிகாணும் ஞானப்பெண்ணே!

46. கண்ணா லேமனக் கண்ணா லேயதைக்
கண்டாலே வழி யுண்டாகும்;
பெண்ணாசை தன்னை யடுக்கா மல்வழி
பேணிப் பாரடி ஞானப்பெண்ணே!

47. பார்த்து நடப்பது மேல்வா சலந்தப்
பாதையறிவது மெவ்வாறு?
மாத்திரை நேரம் பிரியா மற்பாதை
மார்க்கங் கேளடி ஞானப்பெண்ணே!

48. எருக்கி டந்த குழிதாண் டியதில்
இரண்டு விரற்கடை மேற்றாண்டிக்
கருக்கி டைக்கும் அடையாள மதைக்
கண்டு கேளடி ஞானப்பெண்ணே!

49. மாயன் அரண்மனை காணீ ரோவன்னி
மரமி ருப்பதுங் தோணீரோ?
நேய மதுகடந் தப்பா லேயறு
கோணப் படியடி ஞானப்பெண்ணே!

50. கோணத்தில் நின்று மயங்கா தேசுழிக்
காற்றை யடக்கிச் சிணுங்காதே;
வீணுக் கலைந்து தியங்காதே தூல
வேடத்தைத் தள்ளடி ஞானப்பெண்ணே!

51. தூலத்தை விட்டு விடாயா கிலதிற்
சூட்சத்தைக் காண முடியாது;
பாலத்திலேறி நடந்தக் காற்பெரும்
பாதையி தல்லவோ ஞானப்பெண்ணே!

52. பாதையான பெரும்பாதையைக் கிட்டிடப்
பட்டண முண்டொரு வட்டமதாய்;
நாதமுங் கீதமுங் கேட்குதடி தெய்வ
நாயகன் சந்நிதி ஞானப்பெண்ணே!

53 சந்நிதி யென்னடி கண்டதுண்டோ கண்டால்
தத்துவம் பேசத் திறமுமுண்டோ?
முன்னே முப்பாழுங் கடப்பதுண்டோ - அதில்
முச்சுடருண்டடி ஞானப்பெண்ணே!

54. முச்சுடர் வட்டமே சக்கர மாமது
மூக்கு நுனியிற் சுழுமுனையாம்;
அச்சுடர் வட்டத் திருந்தவ னேகுரு
ஆனந்த நந்தியாம் ஞானப்பெண்ணே!

55. நந்தியிருந்தது வன்னிவட் டம்மதில் நாட்டம் புருவமத் யான திட்டம்:
சந்திரனுங் கதிர்ச் சூரியனும் அந்தத் தலத்தில் நின்றனர் ஞானப்பெண்ணே!

56. நாதவிந்தல்லவோ நால்யோ னிதச நாதவிந் தல்லவோ எழுத்தோற்றம்?
நாதவிந்தால் உடலும் உயிரும்பரம் நந்தியைப் போற்றடி ஞானப்பெண்ணே!

57. விந்து இருந்த தலந்தனிலே குருநந்தி யிருந்தார் கொலுவாகி:
சிந்தை தெளிந்து மகாரம்வைத் தால் அந்தச் சீமானைக் காணலாம் ஞானப்பெண்ணே!

58. சீமான் கிட்ட அடுத்தக் கால்மேலைச் சீமை நமக்குக் குடியாச்சு;
ஆமா மென்று கும்மிப்பாடியருள் ஆனந்தஞ் சேரடி ஞானப்பெண்ணே!

59. ஆனந்தமான தலந்தானே அது அத்து விதமாந் தலந்தானே
தானந்தமான சதாசிவத்தைப் போற்றித் தாண்டிக் கும்மி அடியுங்கடி

60. ஞானமாம் ஆயிரத் தெட்டிதழ்ப் பீடம் நாட்டமாஞ் சந்திரனார் வீடு
மோனம் இருந்த மகார மவுனத்தை மூட்டிக் கும்மி அடியுங்கடி

61. குண்டலி வாசி யகாரம டிபிடர்க் கண்டமதிலே யுகாரமடி
உண்டு கழியின் மகாரம்வைத் தாற்சிவ லோகம் இதல்லவோ ஞானப்பெண்ணே!

62. ஒங்காரமான பிரணவத் தாள்எங்கும் உயர்ந்த சோம கலை நிறத்தாள்
ரீங்காரமான பராசக்தியை நீங்கள் நேர்ந்து கும்மியடியுங்கடி

63. பூரக முப்பத்திரண்டாகு மனப் பூரண கும்பம் இரட்டியதாம்
கூறவே ரேசகம் எண்ணிரண்டாம் அந்தக் குறிப் பறிந்துகொள் ஞானப்பெண்ணே!

64. பிங்கலை யாவதி ரேசகத் தைவளர் பூரகந் தன்னிடலத்தூதி
நங்கலை நந்தியிற் கும்பிக்கவே சிவ நாட்டம் இதல்லவோ ஞனாப்பெண்ணே!

65. அறிந்து கொள்ளு மெழுத்தோடே பவுரனை முதலமா வாசிமட்டும்
மறந்திடாமற் செய் மாத்திரை யின்படி வாசி வசமாகும் ஞானப்பெண்ணே!

66. காலாலே கனல் ஏற்றுங்கடி சுழி மேலே கொண்ட முதூட்டுங்கடி
மூலா தாரத் தலங்கேசர மென்று முழங்கிக் கும்மியடியுங்கடி.

67. சார்ந்து கொள்ளடி கேசரத்தை முதற்றன்னை யறியலாந் தானாகக்
கூர்ந்து மூலக் கணபதி பாதத்தைக் கும்பிட்டுக் கொள்ளடி ஞானப்பெண்ணே!

68. நவ்வெழுத்தே பிரமனாரா குமதில் நாரணன் மவ்வெழுத்தானானே:
சிவ்வெழுத்தே தெய்வ ருத்திரனாம் இன்னுஞ் செப்புவன் கேளடி ஞானப்பெண்ணே!

69. செப்பவே வவ்வு மகேசுரனாம் வட்டஞ் சேர்ந்துப சாரம் சதாசிவனாம்
தப்பிலா ஐந்தெழுத்தாலே சராசரந் தங்கியிருந்தது ஞானப்பெண்ணே!

70. வாலையி னட்சர மூன்றாகும் அதை வாய்கொண்டு சொல்பவரார் காணும்
மேலொன்றுங் கீழொன்றும் மத்திம முங்கூட்டி விரைந்து பாரடி ஞானப்பெண்ணே!

71. விரைந்து சொல்லுவன் மூன்றெழுத் தாற் சதம் விரிந்து தானுயுர் உண்டாச்சு;
தெரிந்து கண்டவர் தங்களுக்கு காவலை தீட்சையி தல்லவோ ஞானப்பெண்ணே!

72. தீட்சை யெனுஞ்சிவ சக்கரத் தின்மையைந் தேவியெழுத்தை நிரை நிறுத்திக்
காட்சியுடன் சிவ பூஜை செய் தாற்சித்தி கைவச மாமடி ஞானப்பெண்ணே!

73. கள்ளுண்டு தள்ளுண்டு நில்லாதேபின்பு கஞ்சா உறக்கமுங்கொள்ளாதே;
உள்ளுண்டு சோமக் கலையாதி பானத்தை ஊட்டிக் கும்மியடியுங்கடி!

74. கும்மி அடிப்பெண்கள் அம்பலத்தை யரைக் கூட்டி அமுதங் குடியுங்கடி
அம்மென்றும் உம்மென்றுஞ் சொல்லாமல் நின்ற அத்விதம் பாரடி ஞானப் பெண்ணே!

75. அத்வித மாவத்துக் காதியடி மதி ஆயிரத் தெட்டிதழ்ப் பூசைபண்ண
முத்தி தருஞ் சோமப்பாலை யனுதினம் மூட்டிக் கும்மியடியுங்கடி.

76. மூட்டுவதென்ன திரிகோண வட்ட மூலத்தில் குண்டலி வாசியினால்
நாட்டுவன் பூரண நாலையுங் கட்டினான் ஞாயமி தல்லவோ ஞானப்பெண்ணே!

77. கட்டிக்கொள் விந்துவைத் தள்ளா தேசுழிக் காற்றையடக்கிப் பெருக்காதே
சுட்டி மனப்பொறா துறாதே காமச் சோம்பலைத் தள்ளடி ஞானப்பெண்ணே!

78. சோம்பலுந் தூக்கமும் ஆகாதே அன்ன சுகியுஞ் சோகமுங் கொள்ளாதே.
சாம்ப சதாசிவ நாட்டத்திலே நின்று சார்ந்து கும்மியடியுங்கடி.

79. கைவச மாவது சட்டிவித் தைஞானக் கற்பகமும் வந்து லபிக்குமடி;
தெய்வம் இவரென்று சொன்னாரே நல்ல சித்தரு முத்தரும் ஞானப்பெண்ணே!

80. யோகத்துக் காதியுமைதீட் சைமற்ற யோகத்துக் கெல்லா முதல் தீட்சை
போகத்தைக் கைவிட லாகா தேசுத்திப் பூசையை வேண்டிக் கொள் ஞானப்பெண்ணே!

81.வேண்டிக்கொள் விந்து முகனா தஞ்சத்தி மேவுஞ் சிவத்துடனே பரமாம்
தாண்டிக் கொள் இந்த வகையாறும் யோகசாதக சாக்கிரம் ஞானப்பெண்ணே!

82. சாக்கிரம் விந்துக்கு மேலண்ட மாம் அதைச் சார்ந்திடும் நிற்குண நிட்களந்தான்
பார்க்கில் நிராதார மாமலத் தை அதைப் பாரா விடம் அந்தம் ஞானப்பெண்ணே!

83. அந்த மடியிந்த மேலா றுங்கண்டே ஆரறி வாரடி ஞானவழி?
சிந்தை தெரிந்த பெரியோ ரைக்கண்டு சேவித்துக் கும்மியடியுங்கடி.

84. சேவிப்ப துந்தவ னந்தியடி யோக மாய்நிற்ப தும்விந்து நாதமடி
ஆவிக் கிசைந்த சதாசிவ சாக்கிரம் அவ்விட மாமடி ஞானப் பெண்ணே!

85. அவ்விட்டே யுவ்விட்டே மேற்சுழி யிற்சுழி அங்கியைவிட்டுக் காலாலே
மவ்விட்டு நாதவிந் துட்பொரு ளைக்கண்டு வாழ்த்திக் கும்மியடியுங்கடி.

86. முழக்க மென்ன பிரணவ மாமதை மூட்டுச் சமாதியிலிரேசகத்தை
விளக்கு மாகு மிரவி காந்திநித்தம் வேண்டிக் கும்மியடியுங்கடி.

87. பார்க்குஞ் சுழுமுனை காணா ரேயது மூக்கு நுனியென் றறியாரே
மார்க்க மறிந்து பெரியோ ரைக்கண்டு வாழ்த்திக் கும்மி யடியுங்கடி.

88. வாழ்த்தி யடிபெண்ணே ரேசகத் தைவினை மாற்றியடி பெண்ணே பூரகத்தை
தூற்று மகாமிய சஞ்சிதத் தைத்தொல்லை தொலைத்துக் கும்மியடியுங்கடி

89. பாசமற் றவிடம் கேசர மாம்ஒரு பாதியில் நின்றிட யோகமுமாம்.
நேசமற் றார்பிர்ம ஞான சமாதியும் நிருவி கற்பமாம் ஞானப்பெண்ணே.

90. கற்ப மடியிது மெய்யா குமற்றைக் கர்மமெல் லாமிக அற்பமடி
தற்பரா னந்த சதாசிவ மோனத்தைச் சார்ந்து கும்மியடியுங்கடி!

91. பாசத்தைச் சொல்லும் உடலாக அந்தப் பசுவைச் சொல்லும் உயிராக
நேசத்தில் நிற்பது யாதது பிரம நிட்டையென் பாரடி ஞானப்பெண்ணே!

92. தேகத்துக் காதியாம் ஐம்பூ தமற்றைச் செயலுக் காதியாம் விட்சேபம்
மோகத்துக் காதியா மம்மா யைஇன்னும் முழுதுங் கேளடி ஞானப்பெண்ணே!

93. இன்னமுண்டந்த வியாகிரு தற்கும் இரணிய கர்ப்பன் விண்ணுவுக்கும்
மின்னிய விராடபு ருடனுக் கும்இன் னும் மேலுண்டு சைதன்யம் ஞானப்பெண்ணே!

94. சைதன்ய வத்துவே பிரமமடி அந்தச் சாட்சிக்குப் பிரதி பிம்பமடி
மெய்நின்ற சுத்த அறிவா னால்ப்ரதி பிம்பத்தைத் தள்ளலாம் ஞானப்பெண்ணே!

95. ஆமடி யிந்தப் பதந்தா னேகண்டால் ஆதியும் அந்தமு நீதானே;
நாமடி வாசிக் குதிரையி னால்மிக்க நல்ல கதியடி ஞானப்பெண்ணே!

96. சாதிக் குதிரை வலுவே கஞ்சரு தாரு இருக்கின்றான் மேலாக
வீதிக்கு வீதி சாரிவைத் தாற்பரி வேடிக்கை பார்க்கலாம் ஞானப்பெண்ணே!

97. கட்டுப் படாதந்த அச்சுமட்டம் அது காலோ பன்னிரண்டா கையினால்
எட்டுக் கயிற்றினாற் கட்டிக்கொண் டால்இது மட்டுப்படுமடி ஞானப் பெண்ணே!

98. கட்டுப்படுமோ மலவா யில்நடு மையத்தின் குண்டலி வாசியினால்
எட்டையும் நாலையுங் கட்டியே போற்றிடில் ஏறி நடத்தலாம் ஞானப்பெண்ணே!

99. சூட்சக் குதிரை யடங்கா துசுழிக் கோட்டுக்குட் செல்ல முடியாது
மூச்சுக் காயிரங் காதவழி மிக முந்தி நடக்குதாம் ஞானப்பெண்ணே!

100. குதிரை கட்டிய லாயத்திலே மனக் கோட்டையிலே சந்தைப் பேட்டையிலே
எதிரிதான் வந்து தட்டுகிறான் அதை எனென்று கேளடி ஞானப்பெண்ணே!

101. காமன் எவருக்கும் மூத்தவனாம் அவன் கற்றிடும் வித்தைகள் மெத்தவுண்டாம்!
தாமத மானகு ரோதனும் லோபனுந் தம்பியாம் கேளடி ஞானப்பெண்ணே!

102. மோக மதமிரு பிள்ளைக ளாம்ஒரு மூர்க்க மமசியக்காரனொடு
சேகர வீரசை டம்பனுஞ் சம்பனுஞ் சிநேக மாமடி ஞானப்பெண்ணே!

103. சிநேகனுக் கேற்ற உறவாளி பொல்லாத் தீயவ னாகுமோ ராங்காரி
அநேகத்தைச் செய்யு மவதியில் ரோசனும் அத்தை மகனடி ஞானப்பெண்ணே!

104. பெண்ணே கேளு பதிமூன்றாகிய பேர்களுண்டு பகையாளர்;
ஒன்றே யொன்று வசமா னால் அவர் ஒடுங்குவாரடி ஞானப்பெண்ணே!

105. ஒடுக்கமில்லை யிவரா லேபலன் ஒட்டமெல் லாமனக் கோட்டையிலே
படுகளத்துக்கு மேய்ந்துவ ரப்பசு பற்றுகிறாரடி ஞானப்பெண்ணே!

106. பாம்பி ருக்குது புற்றுக்குள் ளேசுக பந்த மிருக்குது நெஞ்சுக்குள்ளே;
வீம்பை யடக்கி உயர்ந்தக்கால் பரிவேடிக்கை பார்க்கலாம் ஞானப்பெண்ணே!

107. பித்துப் பிடித்த மனக்குரங்கு வெறிப் பேயும் பிடித்துக் கொண்டாட்டமிட்டால்
அத்தை யடக்க மருந்துசெய் தாற்பரி அன்று நடத்தலாம் ஞானப்பெண்ணே!

108. நடத்தாலமே மனவாசி ஒரு நாலைந்து பீற்றலை மூடாமல்
திடத்தினால் மனஞ் சித்தானாற் சித்தந் தெளிந்து கொள்ளலாம் ஞானப்பெண்ணே!

109.  தெளிந்த சித்தகம் பூட்டிய திற்சேணத் தேறும் அறிவை யதிற்சேர்த்துக்
குளிர்ந்து ஞானவை ராக்கியக் குறடா கொண்டு மாட்டடி ஞானப்பெண்ணே!

110. மூலத் தெருவி லொரூபாய்ச் சல்அந்த முச்சந்தி வீதியி லோர்பாய்ச்சல்
மேலைத் தெருவி லொரூபாய்ச் சல்பரி வேடிக்கை பார்க்கலாம் ஞானப்பெண்ணே!

111. அந்த விதங்கள் அறியா மல்மணி மந்திர மென்று திரிகின்றார்.
அந்தரமான எழுத்தறிந் தால்மணி மந்திர மல்லவோ ஞானப்பெண்ணே!

112. மவுன மந்திரங் களினாலே தங்கள் வாய்தனை மூடித் திரிவார்கள்.
புவன சாரம் புசிப்பார்க் குமதி போசனமாகுமோ ஞானப்பெண்ணே!

113. தாயென்று சொல்லுவார் சொப்பனத் திற்காம- சன்னதம் வந்தால் நினைப்பாரோ?
வாய்கொண்டு வேதம் படித்தா லுஞ்சுத்த மௌனந் தங்குமோ ஞானப்பெண்ணே!

114. தாடி வளர்த்துச் சடைவளர்த் துநல்ல சந்யாசி யென்றோரு வேடமிட்டே
ஓடித் திரிந்த விளையாட்டை யிங்கே ஒப்புவ தாரடி ஞானப்பெண்ணே!

115. பேசாதிருக்கும் இடம் பார்த்தே அதைப் பெற்றேயிருப்பது மந்திரமாம்.
ஆசான்என் றேயுப தேசமிட் டாற்குரு அல்லவென் றுகும்மி யடியுங்கடி.

116. சொற்குரு வாலே கதியா மோபொய்யைச் சொல்லுவார் தங்கள் உறவாமோ
சற்குரு வான வரைச்சேர்ந் தேயவர் தம் சொல்லைக் கேளடி ஞானப்பெண்ணே!

117. நானென்ற ஆணவம் பேசார்கள் நல்ல நாடென்றுங் காடென்றுஞ் சொல்லார்கள்
தானென் றியாவையுங் கண்டாரே நல்ல சற்குரு வாமடி ஞானப்பெண்ணே!

118. குருஇருப்பதும் உள்ளத்திலே மனக் கோணல் அறுப்பதுந் தனக்குள்ளே
பொருள் இருப்ப தறியாமல்புடம் போடுவதெப்படி ஞானப்பெண்ணே!

119. வாதஞ் செய்ய அறியா மல்ரச வாதஞ் செய்கிறோமென்று சொல்லிச்
சூதங் கெந்தி புடத்திலிட் டால்அதிற் சொன்னம் விளையுமோ ஞானப்பெண்ணே!

120. லிங்க முருக்க அலைவார்கள் சாதி லிங்க மிருப்ப தறியாமல்;
வங்கமுந் தங்கமும் சேர்த்து ருக்கினால் பங்கமி தல்லவோ ஞானப்பெண்ணே!

121. பாசா ணங்குகை தன்னில் வைத் துவெள்ளைப் பாலாலுட்டிக் குகைமூடி
ஈசானியப்புட மிட்டாலும் அதில் இருப்ப தென்னடி ஞானப்பெண்ணே!

122.காரணமானது காரிய மாவதைக் கட்ட அறியார் முழுமூடர்:
பூரணமென்று திரிந்தா லுமதிற் புண்ணிய முண்டாமோ ஞானப்பெண்ணே!

123. முப்பூ வென்று திரிவார் கள் அந்த மூப்பூ வந்த வகைகாணார்;
அப்பூ வென்று மறிந்தக் காற்சித்தி ஆமென்று கும்மி அடியுங்கடி.

124. காரத்தைக் கட்ட அறியார்கள் கடுஞ் சாரத்தை நீற்றினஞ் செய்யாமல்
வீரத்தைப் பூரத்தைச் சேர்த்தத னாலது வீணல்ல வோசொல்லு ஞானப்பெண்ணே!

125. கோசவித் தையை யறியாமல் லோக வேசத்தி னின்று மலைவார்கள்
கோச பீசம றிந்தா லேவாதங் கோசார மாமடி ஞானப்பெண்ணே!

126. வாதத் திறவுகோல் காணா ரேபஞ்ச பூதச் சரக்கையுந் தோணாரே
ஏதுக்குக் கண்புகைந்தூதுகின் றாரிதை ஏதென்று கேளடி ஞானப்பெண்ணே!

127. துருசு சுன்ன முடிந்தாச் சே அதைச் சோதிக்க எட்டரை மாற்றாச்சு:
பொருளைச் சொல்லிப் பணம்பறிப் பாரிவர்  பொய்க்குரு அல்லவோ ஞானப்பெண்ணே!

128. கவனி சூத முடிந்ததென்பார் ஊசிக் காந்தத்தைக் கிண்ணமுஞ் செய்தோமென்பார்:
புமனி வாதப் புரட்டா லேயவர் பிழைக்கி றாரடி ஞானப்பெண்ணே!

129. பிழைக்க முத்தியறியாமற் சென்ம பூர்வக்கியானத தெரியாமல்
தழையைத் தின்று சருகாகித் திசை தயங்குறாரடி ஞானப் பெண்ணே!

130. தயங்கி யென்ன பலனா மோவனஞ் சாதித்து நிற்கத் திறமாமோ?
மயங்கி டாதே அழலை மகத்துவம் வருவ தெப்படி ஞானப்பெண்ணே!

131. உப்பை யறிந்தவ னேவா திசகத் துப்பை யொழிந்த வனேயோகி
தப்பிலை யேபூமி நாத மகிமையைச் சார்ந்து பாரடி ஞானப்பெண்ணே!

132. வீட்டி லிருக்கு தொரு மூலம்வெளிக் காட்டி லிருக்கு திருமூலம்;
மாட்டி லிருக்கும் பெரியோர்குரசவாதமி தல்லவோ ஞானப்பெண்ணே!

133. தோணா தென்ற சரக்கெடுத் துக்கருஞ் சூரா சூரையில் வைத்தெடுப்பச்
சாணான் கண்ட பொருள்போ லேசித்தி தானென்று கும்மியடியுங்கடி.

134. நெல்லி யிருக்குது காட்டுக்குள் ளேகரு நெல்லயிருக்குது வீட்டுக்குள்ளே;
கொல்லி மலைக்குத் திரிந்தாலும் குரு கொண்டு வருவாரோ ஞானப்பெண்ணே!

135. காயம் பட்டிக்கு ளத்துக்குள் ளேவெள்ளைக் காயா வேரு முளைத்திருக்கும்;
வாயாற் றின்று நிமிர்ந்தக் காலுடல் மாயா தல்லவோ ஞானப்பெண்ணே!

136. கற்ப நிலையறிந் தெண்ணாமல் வெறிக் கஞ்சா உண்டு விழிப்பார்கள்!
அற்பர் குகைமலை சென்றாலும்வத்தை அறியலாகுமோ ஞானப்பெண்ணே!

137. கொங்கணர் சொன்ன கடைக்காண்டம் அதிற் சங்கை யறிவது பிரமாண்டம்;
எங்கள் குருசட்டை மாமுனி யாரிரு நூறும் பாரடி ஞானப்பெண்ணே!

138. நூறி லுரைத்தது மெய்ஞ்ஞா னந்திரு மூலர் உணர்ந்தது வேஞானம்
பூரண கும்ப முனிசொன்ன சூத்திரம் பூண்டகம் பாரடி ஞானப்பெண்ணே!

139. தீட்சையில் மச்ச முனிதீட் சையவர் செப்பின ஞான மொரு நூறும்
தாழ்ச்சிவா ராது பெரியோ ரைக்கண்டு சாட்சி கேளடி ஞானப்பெண்ணே!

140. ரேசக பூரக கும்பகத் தால்வாசி நேரிட்டுச் செய்வதும் ஆசையடி;
கேசர மாகிய அத்வித பிரமத்தைக் கிட்டிக் கும்மியடியுங்கடி.

141. உப்பை விடுவதும் ஆசையடி அன்னம் ஓர்பொழு துண்பதும் ஆசையடி;
செப்ப ஒண்ணாத மனோன்மணி தேவனைச் சேர்ந்து கும்மி யடியுங்கடி.

142. வாசலி லேயொரு மேல்வாசல் அந்த வாசலி லேசிறு வாசலுண்டு;
நேசமு டன்சிறு வாசலிற் பூட்டியே நெருக்கம் பாரடி ஞானப்பெண்ணே!

143. தேசங்கள் போவதும் ஆசையடிகுல தெய்வமுன் டென்பதும் ஆசையடி;
நேச மெம்பிர மஞான சோதியைச் சேர்ந்து கும்மி யடியுங்கடி

144. சமய பேதமும் ஆசைய டிகங்கா ஸ்நான பூசையும் ஆசையடி:
மமதை யற்றுஇருக் கின்ற மமதையை வாழ்த்திக் கும்மியடியுங்கடி.

145. பால்கற வாப்பசு தள்ளுங்க டிபதி பாசத்தை யும்விட்டுத் தீருங்கடி:
மேல்வி ளங்கிய தற்பர சோதியை வேண்டிக் கும்மியடியுங்கடி.

146. தத்துவக் குப்பையைத் தள்ளுங்கடிவேத சாத்திரப் பொத்தலை மூடுங்கடி:
முத்தி தருஞான வத்துவை வாவென்று மூட்டிக் கும்மியடியுங்கடி

147. ஆறா தாரமுந் தொல்லைய டியதற் கப்பாலே யொன்றும் இல்லையடி;
சீராய் நின்ற நிலைபார்த் துப்பெண்கள் சேர்ந்து கும்மி யடியுங்கடி.

148. சித்தர் சொற்படி சித்தானந் தங்கண்டு தெளிந்து கொள்ளடி வேதாந்தம்
தத்துவ மாகிய உற்பத்தி சூக்குமச் சார்பு கேளடி ஞானப்பெண்ணே!

149. சார்புதா னென்னடி வேதாந் தஞ்சொல்லுந் தத்துவந் தானிவ் வகையுடனே
கார ணாதி அவத்தை நிலைகளின் கணக்குரைக்கிறேன் ஞானப்பெண்ணே!

150. உரைக்குந் தத்துவம் நாலே ழிற்கண்ட ஓதுஞ் சித்துரு நாலாறாம்;
மறைக்குட் சொல்லிய சித்துரு நாலாகும் மகிமை பாரடி ஞானப்பெண்ணே!

151. மகிமை யாகிய தொம்பத மாமதில் வந்த வுபாதி யுணர்த்துகிறேன்!
தகைமை யென்னமுன் சொன்ன வதித்திருத் தன் செயல் கேளடி ஞானப்பெண்ணே!

152. வாசல் மிகுந்த உடம்போ டுப்ராண வாயுவோ டிந்திரியம் ஆனதொன்று;
காசலை யாமதி சேர்ந்து வளர்ந்ததன் காரணம் நாலடி ஞானப்பெண்ணே!

153. காரண மென்ப திவையே ழும்வந்து கலந்த தாமடி தொம்பதத்தைத்
தாரண தொம்பத மான துரியத்தில் தன்னுட லாச்சுதாம் ஞானப்பெண்ணே!

154. தன்னுடலாகிய சாக்கிரத் தைத்தனதாக விருந்திடும் ஆத்துமற்குப்
பின் சொல்வதாம் விசுவ னென்ற பிமானப் பேரல்லோ சொல்லடி ஞானப் பெண்ணே!

155. பேர் பெறும் எந்த்ரமு பாதியுடன் கூடப் பெற்றிடு சூட்சமச் சொப்பனத்தின்
சார்பி லிருந்த துரியற்கு நாமமுஞ் சைதன் யமடி ஞானப்பெண்ணே!

156. ஆகும் பிராணநல்ல வாயுயவு டன்கூடி அடங்கி மூலத்து டன்சேர்ந்து
சேகர மாவந்த நாத துரியத்தைச் சேர்ந்திடிற் காரண தேகமடி

157. சேர்ந்த அவத்தைச் சுழுத்திய டியதைச் சேர்ந்தவனும் பிராக்ஞ னாகுமடி
கூர்ந்த மூன்றையுங் கண்ட துரியத்தைக் கும்பிட்டு கும்மியடியுங்கடி!

158. கும்பிட்டுத் தொம்பதச் சித்தார்த் தங்கண்டு கூறிய ஞாயம் இதுபோல
அம்பிட்டுத் தற்பத மான விவேகத்தை அறியச் சொல்லுவேன் ஞானப்பெண்ணே!

159. அறிவ தென்னடி தொம்பத மாம்பொருள் ஆன வுபாதியும் ஆனதுபோல்
சருவ தற்பர மான பொருளுக்குத் தன்னுடைச் சீவன் துரியமடி;

160. சர்வஞ்ஞ னுஞ்சரு வக்கார னுஞ்சரு வேந்திரி யாமிசர் வேசுரனுஞ்
சர்வ சிருட்டி சர்வதி திசர்வ சங்கார னும்பேராம் ஞானப்பெண்ணே!

161. பேரான தென்ன இவையே ழுமிகப் பேசிடில் வேதும் துரியமடி;
தோரா உபாதியைப் பெற்றத னால்முத்தி தூசணம் உண்டாச்சு ஞானப்பெண்ணே!

162. தூசணச் சீவன் இவையே ழுங்கண்டு சொல்லும் பரனுக் குடலாச்சு;
சாசுவ தமென்ற தானத்தி னாற்சாயா கிரக மென்றுபேர் ஞானப்பெண்ணே!

163. சாக்கிரந் தன்னைத்தா னென்றுசொல் லியப்பால் தானபி மானித் தருந்தாக்காற்
சேர்க்க விராட்டெனச் சொல்லுவார் நாமந் தெரிந்து கொள்ளடி ஞானப்பெண்ணே!

164. தெரிந்த மூன்றனு பாதியு மாம்அதிற் சேர்ந்த பரன்பர சொப்பனமாம்;
பிரிந்தி டாதபி மான னிரணிய கற்பன்என் பாரடி ஞானப்பெண்ணே!

165. பாருமி திலொரு பாதியு டன்பரா பரனுக் கல்லவோ பார்சுழுத்தி
சேரும் பொழுது வியாகிரு தனெனச் சிந்தையிற் காணடி ஞானப்பெண்ணே!

166. காணடி தற்பர சத்தார்த் தமதைக் கண்டு தெரிந்த வகைபோல
ஊணடி ஞான சிவப தார்த்தத்தில் உண்மையைக் கேளடி ஞானப்பெண்ணே!

167. உண்மையாந் தற்பர நற்றுரி யங்கண்டும் உற்றுப்பா ராதொரு தோடமதால்
தண்மைச் சிவபத சுத்துனுக் குப்பரன் தன்னுடலாச்சுது ஞானப்பெண்ணே!

168. ஓதும் பரம்விஸ்வ கிராசமடியுப சாந்தமெ னும்வகை மூன்றி லொன்றைச்
சாதனை செய்த சிவத்துக்கல் லோபர சாக்கிரமாகுமே ஞானப்பெண்ணே!

169. ஆகும் பொருள் சிவ சாக்கிரத் தையபி மானித்திருந்த சிவதுரியம்
சேகர மாயிடிற் சிற்சொ லிதையென்று  செப்பிடும் வாக்கியம் ஞானப்பெண்ணே!

170. வாக்கிய மாம்விஸ் வகிராசம டியந்த மார்க்கமென் னசிவ சொப்பனத்தைப்
பாக்கி யனபி மானிடத் திற்பிர சாபத்தனென்று சொல் ஞானப்பெண்ணே!

171. சொல்வது மென்ன உபசாந் தஞ்சிவ சுழுத்தி தானென்றி திருந்தக்கால்?
நல்லது பொற்புறு சாந்தனென் றாலது நாமம தல்லவோ ஞானப்பெண்ணே!

172. நாமச் சிவதுரி யத்தில டியபி மான மிழந்து தனித்ததனால்
நேமமி தல்லவோவாதி துரியத்தின் நிலைமை கண்டிலர் ஞானப்பெண்ணே!

173. கண்டறி யாதது முற்றிரி  யமதைக் கண்டு சுழன்றுமே லானதடி;
பண்டு பிரமவா னந்த சொரூபத்தைப் பணிந்து கும்மியடியுங்கடி.

174. பணிந்த ஞான மதுதாண் டிபர மானந்த மானது இதுதாண்டி;
துணிந்து பாருமா னந்தசொ ரூபனைத் தொழுது கும்மியடியுங்கடி.

175. தொழுது கொள்ளுஞ் சுகசீவ பர சுத்தப் பொருளு மிது தாண்டி;
பழுதி லாத சொரூபக்கு ருவுடைப் பாதம் இதல்லவோ ஞானப்பெண்ணே!

176. பாதமி தாகிய தொம்பத மாம் அதிற் பாதமுந் தற்பர மானதடி;
பேதவு பாதி யவத்தைக ளும்பல பேர்களு மானது ஞானப்பெண்ணே!

177. பேருக்குச் சார்ந்த துரியம டியதைப் பேசவுந் தற்பிர காசமடி;
யாருக்குங் கண்டறி யாத பொருளைக்கண் டகந் தெளிந்து கும்மியடியுங்கடி.

178. முத்தி பெறுந்தேவ தத்தனைப் போற்சக முழுதுந் தன்மய மானதடி:
நத்தியே விட்டுவிடாதே இலக்கண ஞானம் இதல்லவோ ஞானப்பெண்ணே!

179. ஞானமாம் மோட்சம் இதுதாண் டிமற்ற ஞாயமெல்லாமன மாயமடி:
தானசங் கற்ப விகற்ப சமயமுந் தன்மய மானது ஞானப்பெண்ணே!

180. தூர தூரமும் இல்லைய டியதைச் சொல்வதுங் கேட்பதும் இல்லையடி
தாரார் பிரமநிலை பார்த் துப்பெண்கள் தாண்டிக் கும்மியடியுங்கடி.

181. அண்டமும் பிண்டமும் பாழாச் சே அதற் கப்பா லும் பெரும் பாழாச்சே;
உண்டில்லை யென்று பராபரப் பிரமத்தை உவந்து கும்மியடியுங்கடி!

182. சொல்லினுங் கல்லினும் நில்லா தேபிரம சோதியை யாதியைத் தூவெளியை
வல்லதத் தற்பிர காச மவுனத்தை வகைய றிந்துகொள் ஞானப்பெண்ணே!

183. பிருதிவி தூய்மை மயமாச் சேயதில் பேதம் பலபல உண்டாச்சே;
சுருதி முடிவைக் குருசொல்லு வார் அந்தச் சூட்சந் தெரியுமோ ஞானப்பெண்ணே!

184. அறிந்து கொண்ட பெரியோர் பாதங்கள் அர்ச்சனை செய்து கும்மித்தமிழைப்
பிரிந்தி டாமனூற் றெண்பத்தைந் துகண்ணி பேசினேன் சற்குரு தாள்வாழி

185. சற்குரு பாத மிகவா ழிவாலை சாமி தமிழ்நிதந் தான்வாழி!
நற்குண ஞானக்கும் மித் தமிழ் கற்றவர் ஞான நெறியே மிக வாழி.

திருவள்ளுவர் ஞானம்

திருவள்ளுவர் 

காப்பு

எண்சீர் விருத்தம்

அண்டபிண்டம் நிறைந்துநின்ற அயன்மால் போற்றி!
அகண்டபரி பூரணத்தின் அருனே போற்றி!
மண்டலஞ்சூழ் இரவிமதி சுடரே போற்றி
மதுரதமி ழோதும்அகத் தியனே போற்றி!
எண்டிசையும் புகழுமென்றன் குருவே போற்றி!
இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி!
குண்டலிக்குள் அமர்ந்துநின்ற குகனே போற்றி!
குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி!

கட்டளைக் கலித்துறை

1. அன்னை யெனுங்கர்ப்ப மதனில்வந் தும்மதி லேயிருந்தும்
நன்னய மாய்ப்பத்துத் திங்களு நானகத் தேயிருந்தேன்;
என்ன அதிசயங் காணிவ் வுலகி லேயமைந்த்
உன்னத மெல்லா மமைத்தேன் உண்மையைக் காண்கிலரே!

2. அம்புலி தன்னி லேயுதித் தாய்ந்தறி பாடைதன்னை
வம்புல கத்தார் வசியமாய்க் கைப்பிடித் தேபிரிந்து
கும்பி தனிலே யுழன்றுமக் குண்டலி பொற்கமலம்
நம்பி யிருந்தேன் சிலநாள் ரகசியங் காண்கிலனே!

தரவு கொச்சகம்

3. அண்டரண்ட வான்புவியும் ஆகமத்தி னுட்பொருளும்
கண்டிதமா யான்விளங்குங் காயமதி லேயறியும்
வண்டரெனை நீசனென்ற வாறுதனை யேயொழித்தேன்;
விண்டரக சியந்தன்னை விளக்கமது காண்கிலரே.

4. வையமதி லேயுதிக்கு மாண்பர்களே யுங்களுயிர்
மெய்யென் றிருந்தசைவு வெளிப்படுவ தென்னவிதம்?
அய்யமில்லா வாழ்ந்துலகி லாண்மையாய்ப் பூண்டமதிப்
பொய்யெனுமிவ் வாழ்க்கையது போகுஞ்சுடு காடுளதே!

கட்டளைக் கலித்துறை

5. வீடான மூலச் சுழிநாத வீட்டில் விளங்கும் விந்து
நீடாழி லோகந் தழைத்துப் பெருகியு நின்றிலகுந்
தேடாத ழித்த பொருளான பொக்கிடந் தேடியென்ன?
காடான நாடு சுடுகாடு சேர்வதுங் கண்டிலரே?

6. எழுவகைத் தோற்றமும் நால்வகை யோனியி லெய்திடினும்
பொழியச் சுரோணிதம் நாதவிந்துப் பொருள் போதகத்தால்
சுழியக் சுழியக் கடலுயிர் தேய்பிறை கண்டுமிருந்
தழியப் பெருந்தரை யெந்நா ளிருந்தும் அனித்தியமே!

7. எந்நா ளிருந்தென்ன முன்னா ளனுப்படி யிந்தவுடல்
தன்னா லழிவதுந் தான்றி யாதெனத் தந்தைவிதி
உன்னா லழிவ துடலுயிர் காய மொழிவதுங்கண்
டந்நா ளனுப்படி கண்டு மிருந்தறி யாதவரே!

8. யோனிக்கு ளாசை யொழியா தனித்தியமு ங்களுயிர்:
தேனிக்கு ளின்பஞ் சுகாதித மோவருஞ் சிற்றின்பத்தில்
ஊனற்றுக் காய முடலற்றுப் போம்பொழு தொன்றறியா
ஈனர்க்குச் சொர்க்கஞ் சுடுகா டொழிய இனியில்லையே!

நேரிசை வெண்பா

9. இந்தவுடல் காயம் இறந்தவிடு மிவ்வுலகில்
வந்தவழி தானறியா வாழ்க்கையோ இந்தவுடல்
அற்பக் குழியி லரவ மிருப்பதெனும்
கற்பகத்தை யாண்டிடுமோ காண்.

10. ஞானமறிந் தோர்க்கு நமனில்லை நாள்தோறும்
பானமதை யுண்டு பசியினால்----ஞானமது
கண்டால் உடலுயிருங் காயம் வலுவாகும்
உண்டால் அமிர்த ரசம் ஊண்.

11. சுழியறியார்க் கென்ன சுகமறியார்க் கென்ன
வழியறியார்க் கென்னஎய்து மாறு-சுழியறியா
மூலமறிந் தவ்வழியில் முத்தியடை யார்க்குநமன்
காலனவர்க் கேமரணங் காண்.

12. வேத மறைஞான மெய்யுணர்வு தானாகில்
நாதனரு ளால்பதவி நாடுமே வேதமறை
நாலு பொருளுள் நற்பொருளின் ஆறறியப்
பாலுமது நெய்யெனவும் பார்.

13. முதலிருந்த ஊழ்வினையை முப்பாழைச் சுட்டுப்
பதறா மதிபாடு பட்டேன் முதலிருந்த
நல்வினையுந் தீவினையு நாடாம லும்பிறந்து
வல்வினையிற் போக்கிவிட்டேன் வாழ்வு.

14. காயசித்தி யாலெனது கன்மவினை போக்கியபின்
மாயசித்தி மூலசுழி வாய்க்குமே- காய்சித்தி
மூலப் புளியால் முதல்தீட்சை யாச்சுதுஇனிக்
காலமென்னி ரண்டாண்டில் காண்.

15. கல்லுப்பின் வாருங் கருத்தறியா துண்டுமனு
வல்வினைக்குள் ளாகி மரணமார் கல்லுப்பு
வெள்ளைக்கல் லுப்பு வெகுவிதமாய் வந்தாலும்
உள்ளமதி லுண்டென்றே உன்.

16. என்றுமிந்த துப்பாகும் எண்சா ணுடலிருக்கக்
கண்டுமறி யாததென்ன காரணமோ? என்றுமதி
வாரி யமுரியதை வன்னிவிட்டுக் காய்ச்சியபின்
விரியமா யானுணரு மெய்.

17. உப்பின் கசடுதான் ஊறலது மாறினதால்
முப்புசுன்ன மாவதற்கு முன்னமே-உப்பதனால்
கற்பாந்தங் கோடி காய மிதுவலுத்துச்
செற்பாயும் வாசியில் தேகம்.

18. அஞ்சுபஞ்ச பூதம் அறிந்தால் அனித்தியம்போம்
அஞ்சு வசப்படுவ தாண்டதனில்- அஞ்சினையும்
கண்டறி வோர்ஞானக் காட்சி யதினினைவு
விண்டறிய லாமே விதி.

19. எண்சாணாந் தேக மெடுத்தாலென் னாண்டையே
பெண்சாரல் நீக்கியே பேரின்பம் கண்காணத்
தேக மொழியாமல் சித்தி பெறுஞானம்
யோகசித்தி பூசைவிதி யுன்.

கொங்கண சித்தர்


வாலைக்கும்மி :
 
விநாயகர் துதி
1:

 

கல்விநிறை வாலைப்பெண் காதலியென் றோதுகின்ற
செல்வியின் மேற் கும்மிதனைச் செப்புதற்கே - நல்விசய
நாதனின்சொல் வேதனஞ்சு போதன்மிஞ்சி மானகஞ்ச
பாதம் வஞ்ச நெஞ்சினில்வைப் போம்.

கும்மி
1:

 

சத்தி சடாதரி வாலைப்பெண் ணாமந்த
உத்தமி மேற் கும்மிப் பாட்டுரைக்க
வித்தைக் குதவிய வொற்றைக்கொம் பாம்வாலை
சித்தி விநாயகன் காப்பாமே.

சரஸ்வதி துதி
1:

 

சித்தர்கள் போற்றிய வாலைப் பெண் ணாமந்த
சத்தியின் மேற்கும்மிப் பாட்டுரைக்கத்
தத்தமி தோமென ஆடுஞ் சரஸ்வதி
பத்தினி பொற்பதங் காப்பாமே.

சிவபெருமான் துதி
1:

 

எங்கும் நிறைந்தவள் வாலைப்பெண் ணாம்மாலின்
தங்கையின் மேற்கும்மி பாடுதற்குக்
கங்கை யணிசிவ சம்புவாஞ் சற்குரு
பங்கயப் பொற்பதங் காப்பாமே.

சுப்பிரமணியர் துதி
1:

 

ஞானப்பெண் ணாமருள் சோதிப்பெண் ணாமாதி
வாலைப்பெண் மேற்கும்மி பாடுதற்கு
மானைப் பெண் ணாக்கிய வள்ளிக் கிசைந்திடும்
மால்முரு கேசனுங் காப்பாமே.

விஷ்ணு துதி
1:

 

ஆண்டிப்பெண் ணாம்ராச பாண்டிப்பெண் ணாம்வாலை
அம்பிகை மேற்கும்மி பாடுதற்குக்
காண்டீப னாம்பணி பூண்டவன் வைகுந்தம்
ஆண்டவன் பொற்பதங் காப்பாமே.

நந்தீசர் துதி
1:

 

அந்தரி சுந்தரி வாலைப்பெண் ணாமந்த
அம்பிகை மேற்கும்மி பாடுதற்குச்
சிந்தையில் முந்திநல் விந்தையாய் வந்திடும்
நந்தீசர் பொற்பதங் காப்பாமே.

நூல்
1:

 

தில்லையில் முல்லையி லெல்லையு ளாடிய
வல்லவள் வாலைப் பெண் மீதினிலே
சல்லாபக் கும்மித் தமிழ்பா டவரும்
தொல்லை வினை போக்கும் வாலைப் பெண்ணே!

2:

 

மாதா பிதாகூட இல்லாம லேவெளி
மண்ணும் விண்ணுமுண்டு பண்ணவென்று
பேதைப்பெண் ணாமுதல் வாலைப்பெண் ணாளென்று
புகுந்தா ளிந்தப் புவியடக்கம்

3:

 

வேதமும் பூதமுண் டானது வும்வெளி
விஞ்ஞான சாத்திர மானதுவும்
நாதமுங் கீதமுண் டானது வும்வழி
நான் சொல்லக் கேளடி வாலைப் பெண்ணே!

4:

 

முந்தச் செகங்களுண் டானது வும்முதல்
தெய்வமுந் தேவருண் டானதுவும்
விந்தையாய் வாலையுண் டானது வும்ஞான
விளக்கம் பாரடி வாலைப் பெண்ணே!

5:

 

அரிக்கு முந்தின தவ்வெழுத்தாம் பின்னும்
அரிக்குள் நின்றதும் அஞ்செழுத்தாம்
தரிக்கும் முந்தின தஞ்செழுத்தாம் வாசி
பரிக்குள் நின்றது மஞ்செழுத்தாம்.

6:

 

ஆதியி லைத்தெழுத் தாயினாள் வாலைப்பெண்
ஐந்தெழுத் துமென்று பேரானாள்
நாதியி னூமை யெழுத்திவள் தானல்ல
ஞான வகையிவள் தானானாள்.

7:

 

ஊமை யெழுத்தே யுடலாச்சு மற்றும்
ஓமென் றெழுத்தே யுயிராச்சு
ஆமிந் தெழுத்தை யறிந்துகொண் டுவிளை
யாடிக் கும்மி யடியுங்கடி.

8:

 

செகம்ப டைத்ததும் அஞ்செழுத்தாம் பின்னும்
சீவன் படைத்ததும் அஞ்செழுத்தாம்
உகமு டிந்தது மஞ்செழுத் தாம்பின்னும்
உற்பன மானது மஞ்செழுத்தாம்.

9:

 

சாத்திரம் பார்த்தாலுந் தானுமென்ன வேதந்
தானுமே பார்த்திருந் தாலுமென்ன?
சூத்திரம் பார்த்தல்லோ ஆளவேணு மஞ்சு
சொல்லை யறிந்தல்லோ காணவேணும்

10:

 

காணாது கிட்டாதே எட்டாதே அஞ்சில்
காரிய மில்லையென் றேநினைத்தால்
காணாதுங் காணலா மஞ்செழுத் தாலதில்
காரிய முண்டு தியானஞ் செய்தால்.

11:

 

ஆயனு மைந்தா மெழுத்துக்குள் ளேயறி
வாயனு மைந்தா மெழுத்துக்குள்ளே
வாயனு மைந்தா மெழுத்துக்குள் ளேயிந்த
வாலையு மைந்தா மெழுத்துக்குள்ளே.

12:

 

அஞ்செழுத் தானதும் எட்டெழுத் தாம்பின்னும்
ஐம்பத்தோர் அட்சரந் தானாச்சு
நெஞ்செழுத் தாலே நினையா மலந்த
நிசந்தெ ரியுமோ வாலைப் பெண்ணே

13:

 

ஏய்க்கு தேய்க்கு தஞ்செழுத் துவகை
எட்டிப் பிடித்துக் கொளிரண்டெழுத்தை
நோக்கிக்கொள் வாசியை மேலாக வாசி
நிலையைப் பாரடி வாலைப் பெண்ணே!

14:

 

சிதம்பர சக்கரந் தானறி வாரிந்தச்
சீமையி லுள்ள பெரியோர்கள்
சிதம்பர சக்கர மென்றால் அதற்குள்ளே
தெய்வத்தை யல்லோ அறியவேணும்.

15:

 

மனமு மதியு மில்லாவி டில்வழி
மாறுதல் சொல்லியே யென்ன செய்வாள்
மனமு றுதியும் வைக்கவே ணும் பின்னும்
வாலை கிருபையுண் டாகவேணும்.

16:

 

இனிவெ ளியினிற் சொல்லா தேயெழில்
தீமட்டு திந்த வரி விழிக்கே
கனிமொ ழிச்சியீர் வாருங்கடி கொஞ்சங்
கருவைச் சொல்லுவேன் கேளுங்கடி.

17:

 

ஊத்தைச் சடலமென் றெண்ணா தேயிதை
உப்பிட்ட பாண்டமென் றெண்ணாதே;
பார்த்த பேருக்கே ஊத்தையில் லையிதைப்
பார்த்துக்கொள் உன்ற னுடலுக்குள்ளே.

18:

 

உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்
வைத்த விளக்கும் எரியுதடி;
அச்சுள்ள விளக்கு வாலையடிஅவி
யாம லெரியுது வாலைப் பெண்ணே!

19:

 

எரியு தேஅறு வீட்டினி லேயதில்
எண்ணெயில் லையமிழ் தண்ணீரில்லை;
தெரியுது போக வழியுமில் லைபாதை
சிக்குது சிக்குது வாலைப் பெண்ணே!

20:

 

சிலம்பொ லியென்னக் கேட்டுமடிமெத்த
சிக்குள்ள பாதை துடுக்கமடி;
வலம்புரி யச்சங்க மூது மடிமேலே
வாசியைப் பாரடி வாலைப் பெண்ணே!

21:

 

வாசிப் பழக்க மறியவே ணுமற்று
மண்டல வீடுகள் கட்டவேணும்;
நாசி வழிக்கொண்டு யோகமம் வாசியும்
நாட்டத்தைப் பாரடி வாலைப் பெண்ணே!

22:

 

முச்சுட ரான விளக்கினுள் ளேமூல
மண்டல வாசி வழக்கத்திலே
எச்சுடராகி யந்தச் சுடர்வாலை
இவள் விட வேறில்லை வாலைப் பெண்ணே!

23:

 

சூடாமல் வாலை யிருக்கிற தும்பரி
சித்த சிவனுக்குள் ளானதால்
வீடாமல் வாசிப் பழக்கத்தைப் பாருநாம்
மேல்வீடு காணலாம் வாலைப் பெண்ணே!

24:

 

மேல்வீடு கண்டவன் பாணியடி விண்ணில்
விளக்கில் நின்றவன் வாணியடி
தாய்வீடு கண்டவன் ஞானியடிபரி
தாண்டிக் கொண்டான்பட் டாணியடி.

25:

 

அத்தியி லேகரம் பத்தியி லேமனம்
புத்தியி லேநடு மத்தியிலே
நெற்றி சதாசிவ மென்றுசொன் னேனுன்றன்
நிலைமையைப் பாரடி வாலைப் பெண்ணே!

26:

 

அழுத்தி லேசொல்லஞ் செழுத்தி லேநானும்
வழுத்தி னேன்ஞானப் பழத்திலே
கழுத்தி லேமயேஸ் வரனு முண்டுகண்
கண்டு பாரடி வாலைப் பெண்ணே!

27:

 

அஞ்சிலே பிஞ்சிலே வஞ்சிய ரேநிதம்
கொஞ்சி விளையாடும் வஞ்சியரே!
நெஞ்சிலே ருத்திரன் சூழிருப் பானவன்
நேருட னாமடி வாலைப் பெண்ணே!

28:

 

தொந்தியி லேநடுப் பந்தியி லேதிடச்
சிந்தையிலே முந்தி யுன்றனுடன்
உந்தியில் விண்ணுவுந் தாமிருப் பாரிதை
உண்மையாய்ப் பாரடி வாலைப் பெண்ணே!

29:

 

ஆலத்தி லேயிந்த ஞாலத்தி லேவருங்
காலத்தி லேயனு கூலத்திலே
மூலத்தி லேப்ரமன் தானிருந் துவாசி
முடுக்கிறான் பிண்டம் பிடிக்கிறானே.

30:

 

தேருமுண்டு ஐந்நூறும் ஆணியுண் டேஅதில்
தேவரு முண்டுசங் கீதமுண்டே
ஆருண்டு பாரடி வாலைத் தெய் வம்மதில்
அடக்கந் தானடி வாலைப் பெண்ணே!

31:

 

ஒன்பது வாயில்கொள் கோட்டையுண் டேஅதில்
உள்ளே நிலைக்கார ரஞ்சுபேராம்;
அன்புட னேபரி காரர்க ளாறுபேர்
அடக்கந் தானடி வாலைப் பெண்ணே!

32:

 

இந்த விதத்திலே தேகத்தி லேதெய்வம்
இருக்கையில் புத்திக்க றிக்கையினால்
சந்தோட வாலையைப் பாராமல் மனிதர்
சாகிறதேதடி வாலைப் பெண்ணே!

33:

 

நகார திட்டிப்பே ஆன தினால் வீடு
வான வகார நயமாச்சு;
உகார முச்சி சிரசாச் சேஇதை
உற்றுப் பாரடி வாலைப் பெண்ணே!

34:

 

வகார மானதே ஓசையாச் சேஅந்த
மகார மானது கர்ப்பமாச்சே;
சிகார மானது மாய்கையாச் சேஇதைத்
தெளிந்து பாரடி வாலைப் பெண்ணே!

35:

 

ஓமென்ற அட்சரந் தானுமுண் டதற்குள்
ஊமை யெழுத்து மிருக்குதடி;
நாமிந்தெ ழுத்தை யறிந்து கொண் டோம்வினை
நாடிப் பாரடி வாலைப் பெண்ணே!

36:

 

கட்டாத காளையைக் கட்டவே ணுமாசை
வெட்டவே ணும்வாசி யொட்டவேணும்
எட்டாத கொம்பை வளைக்கவே ணுங்காய
மென்றைக்கி ருக்குமோ வாலைப் பெண்ணே!

37:

 

இருந்த மார்க்கமாய்த் தானிருந்து வாசி
ஏற்காம லேதான டக்கவேணும்;
திரிந்தே ஓடி யலைந்துவெந் துதேகம்
இறந்து போச்சுதே வாலைப் பெண்ணே!

38:

 

பூத்த மலராலே பிஞ்சுமுண்டே அதில்
பூவில்லாப் பிஞ்சும் அனேகமுண்டு
மூத்த மகனாலே வாழ்வுமுண் டுமற்ற
மூன்றுபே ராலே அழிவுமுண்டு!

39:

 

கற்புள்ள மாதர் குலம் வாழ்க நின்ற
கற்பை யளித்தவ ரேவாழ்க!
சிற்பர னைப்போற்றிக் கும்மிய டிகுரு
தற்பர னைப்போற்றிக் கும்மியடி.

40:

 

அஞ்சி னிலேரண்டழிந்ததில் லையஞ்
சாறிலே யுநாலொ ழிந்ததில்லை;
பிஞ்சிலே பூவிலே துஞ்சுவ தாம்அது
பேணிப் போடலாம் வாலைப் பெண்ணே!

41:

 

கையில்லாக் குட்டையன் கட்டிக்கிட் டானிரு
காலில்லா நெட்டையன் முட்டிக் கிட்டான்;
ஈயில்லாத் தேனெடுத் துண்டுவிட் டானது
இனிக்கு தில்லையே வாலைப்பெண்ணே!

42:

 

மேலூரு கோட்டைக்கே ஆதர வாய்நன்றாய்
விளங்கு கன்னனூர்ப் பாதையிலே
காலூரு வம்பலம் விட்டத னாலது
கடுந டையடி வாலைப் பெண்ணே!

43:

 

தொண்டையுள் முக்கோணக் கோட்டையி லேயிதில்
தொத்திக் கொடிமரம் நாட்டையிலே
சண்டைசெய் துவந்தே ஓடிப்போ னாள்கோட்டை
வெந்து தணலாச்சு வாலைப் பெண்ணே!

44:

 

ஆசை வலைக்குள் அகப்பட்ட தும்வீட
அப்போதே வெந்தே அழிந்திட்டதும்
பாச வலைவந்து மூடிய தும்வாலை
பாதத்தைப் போற்றடி வாலைப் பெண்ணே!

45:

 

அன்ன மிருக்குது மண்டபத் தில்விளை
யாடித் திரிந்ததே ஆண்புலியும்
இன்ன மிருக்குமே யஞ்சுகி ளியவை
எட்டிப் பிடிக்குமே மூன்று கிளி;

46:

 

தோப்பிலே மாங்குயில் கூப்பிடு தேபுது
மாப்பிள்ளை தான் வந்து சாப்பிடவும்
ஏய்க்கு மிப்படி யஞ்சா றாந்தை
இருந்து விழிப்பது பாருங்கடி.

47:

 

மீனு மிருக்குது தூரணி யிலிதை
மேய்ந்து திரியுங் கலசா வல்;
தேனு மிருக்குது போரையிலே யுண்ணத்
தெவிட்டு தில்லையே வாலைப் பெண்ணே!

48:

 

காகமிருக்குது கொம்பிலே தான்கத
சாவ லிருக்குது தெம்பிலேதான்;
பார்க்க வெகுதூர மில்லை யிதுஞானம்
பார்த்ததால் தெரியுமே வாலைப் பெண்ணே!

49:

 

கும்பிக் குளத்திலே யம்பல மாமந்தக்
குளக்க ருவூரில் சேறு மெத்த;
தெம்பி லிடைக்காட்டுப் பாதைக ளாய் வந்து
சேர்ந் தாராய்ந்துபார் வாலைப் பெண்ணே!

50:

 

பண்டுமே ஆழக் கிணற்றுக்குள் ளேரண்டு
கெண்டை யிருந்து பகட்டுதடி;
கண்டிருந் துமந்தக் காக்கையு மேயஞ்சி
கழுகு கொன்றது பாருங்கடி!

51:

 

ஆற்றிலே யஞ்சு முதலைய டியரும்
புற்றிலே ரண்டு கரடியடி;
கூற்றனு மூன்று குருடன டிபாசங்
கொண்டு பிடிக்கிறான் வாலைப் பெண்ணே!

52:

 

முட்டை யிடுகு தொருபற வைமுட்டை
மோசம் பண்ணு தொருபறவை;
வட்டமிட் டாரூர் கண் ணியிலி ரண்டு
மானுந் தவிக்குது வாலைப் பெண்ணே!

53:

 

அட்டமா வின்வட்டம் பொட்டலி லேரண்டு
அம்புலி நிற்குது தேர்மேலே;
திட்டமாய் வந்து அடிக்குதில் லைதேகம்
செந்தண லானதே வாலைப் பெண்ணே!

54:

 

முக்கோண வட்டக் கிணற்றுக்குள் ளேமூல
மண்டல வாசிப் பழக்கத்திலே
அக்கோண வட்டச் சக்கரத் தில்வாலை
அமர்ந்தி ருக்கிறாள் வாலைப் பெண்ணே!

55:

 

இரண்டு காலாலொரு கோபுர மாம்நெடு
நாளா யிருந்தே அமிழ்ந்து போகும்;
கண்டபோ துகோபு ரமிருக் கும்வாலை
காணவு மெட்டாள் நிலைக்கவொட்டாள்.

56:

 

அஞ்சு பூதத்தை யுண்டுபண் ணிக் கூட்டில்
ஆறா தாரத்தை யுண்டு பண்ணிக்
கொஞ்ச பெண்ணாசை யுண்டு பண்ணி வாலை
கூட்டுகிறாள் காலனை மாட்டுகிறாள்.

57:

 

காலனைக் காலா லுதைத்த வளாம்வாலை
ஆலகா லவிட முண்டவளாம்;
மாளாச் செகத்தைப் படைத்தவ ளாமிந்த
மானுடன் கோட்டை இடித்தவளாம்.

58:

 

மாதாவாய் வந்தே அமுதந்தந் தாள்மனை
யாட்டியாய் வந்து சுகங்கொடுத்தாள்
ஆதர வாகிய தங்கையா னாள்நமக்
காசைக் கொழுந்தியு மாமியானாள்.

59:

 

சிரித்து மெல்லப் புரமெரித் தாள்வாலை
செங்காட்டுச் செட்டியைத்தா னுதைத்தாள்;
ஒருத்தியாகவே சூரர்த மைவென்றாள்
ஒற்றையாய்க் கஞ்சனைக் கொன்று விட்டாள்.

60:

 

இப்படி யல்லோ இவள் தொழி லாமிந்த
ஈனா மலடி கொடுஞ்சூலி;
மைப்படுங் கண்ணியர் கேளுங்கடி அந்த
வயசு வாலை திரிசூலி.

61:

 

கத்தி பெரியதோ யுறைபெரி தோவிவள்
கண்ணு பெரிதோ முகம் பெரிதோ?
சத்தி பெரிதோ சிவம் பெரிதோ நீதான்
சற்றே சொல்லடி வாலைப் பெண்ணே!

62:

 

அன்னம் பெரிதல்லால் தண்ணீர் பெரிதல்ல
அப்படி வாலை பெரிதானால்
பொன்னு பெரிதல்லால் வெள்ளி பெரிதல்ல
பொய்யாது சொல்கிறேன் கேளுங்கடி

63:

 

மாமிச மானா லெலும்புமுண் டுசதை
வாங்கி ஓடு கழன்றுவிடும்;
ஆமிச மிப்படிச் சத்தியென் றேவிளை
யாடிக் கும்மி அடியுங்கடி.

64:

 

பண்டு முளைப்ப தரிசியே யானாலும்
விண்டுமி போனால் விளையாதென்று
கண்டுகொண் டுமுன்னே அவ்வைசொன் னாளது
வுண்டோ வில்லையோ வாலைப் பெண்ணே!

65:

 

மண்ணுமில் லாமலே விண்ணுமில்லை கொஞ்சம்
வாசமில் லாமலே பூவுமில்லை;
பெண்ணுமில்லாமலே யாணுமில் லையிது
பேணிப்பாரடி வாலைப் பெண்ணே!

66:

 

நந்தவனத்திலே சோதியுண் டுநிலம்
நித்திய பேருக்கு நெல்லுமுண்டு;
விந்தையாய் வாலையைப் பூசிக்க முன்னாளில்
விட்ட குறைவேணும் வாலைப் பெண்ணே!

67:

 

வாலையைப் பூசிக்கச் சித்தரா னார்வாலைக்
கொத்தாசை யாய்ச்சிவ கர்த்தரானார்;
வேலையைப் பார்த்தல்லோ கூலிவைத் தாரிந்த
விதந்தெ ரியுமோ வாலைப் பெண்ணே!

68:

 

வாலைக்கு மேலான தெய்வமில் லைமானங்
காப்பது சேலைக்கு மேலுமில்லை;
பாலுக்கு மேலான பாக்கியமில் லைவாலைக்
கும்மிக்கு மேலான பாடலில்லை.

69:

 

நாட்டத்தை கண்டா லறியலா குமந்த
நாலாறு வாசல் கடக்கலாகும்;
பூட்டைக் கதவைத் திறக்கலா கும்இது
பொய்யல்ல மெய்யடி வாலைப் பெண்ணே!

70:

 

ஆணும்பெண் ணும்கூடி யானதனாற் பிள்ளை
ஆச்சுதென் றேநீரும் பேசுகின்றீர்;
ஆணும்பெண் ணுங்கூடி யானதல் லோபேதம்
அற்றொரு வித்தாச்சு வாலைப் பெண்ணே!

71:

 

இன்றைக் கிருப்பதும் பொய்யல்ல வேவீடே
என் வாழ்க்கை யென்பதும் பொய்யல்லவே;
அன்றைக் கெழுத்தின் படிமுடி யும்வாலை
ஆத்தாளைப் போற்றடி வாலைப் பெண்ணே!

72:

 

வீணாசை கொண்டு திரியா தேயிது
மெய்யல்ல பொய்வாழ்வு பொய்க்கூடு
காணாத வாலையைக் கண்டுகொண் டாற்காட்சி
காணலா மாகாய மாளலாமே.

73:

 

பெண்டாட்டி யாவதும் பொய்யல்ல வோபெற்ற
பிள்ளைக ளாவதும் பொய்யல்லவோ?
கொண்டாட்ட மான தகப்பன்பொய் யேமுலை
கொடுத்த தாயும் நிசமாமோ?

74:

 

தாயும் பெண் டாட்டியுந் தான்சரி யேதன்யம்
தாமே யிருவருந் தாங்கொடுத்தார்;
காயும் பழமுஞ் சரியா மோஉன்றன்
கருத்தைப் பார்த்துக்கொள் வாலைப் பெண்ணே!

75:

 

பெண்டாட்டி மந்தைமட்டும்வரு வாள்பெற்ற
பிள்ளை மசானக் கரையின் மட்டும்;
தெண்டாட்டுத் தர்மம் நடுவினி லேவந்து
சேர்ந்து பரகதி தான் கொடுக்கும்.

76:

 

பாக்கிய மும்மகள் போக்கிய மும்ராச
போக்கிய மும்வந்த தானாக்கால்
சீக்கிரந் தருமஞ் செய்யவேண் டுங்கொஞ்சத்
திருப்ப ணிகள்மு டிக்கவேண்டும்.

77:

 

திருப்பணி களைமு டித்தோ ருஞ்செத்துஞ்
சாகாத பேரி லொருவரென்றும்
அருட்பொ லிந்திடும் வேதத்தி லேயவை
அறிந்து சொன்னாளே வாலைப் பெண்ணே!

78:

 

மெத்தை தனிலே படுத்திருந் துநாமும்
மெல்லிய ரோடு சிரிக்கும்போது
யுத்தகா லன்வந்து தான்பிடித் தால்நாமும்
செத்த சவமடி வாலைப் பெண்ணே!

79:

 

ஏழை பனாதிக ளில்லையென் றாலவர்க்
கிருந்தா லன்னங கொடுக்க வேண்டும்;
நாளையென் றுசொல்ல லாகா தேயென்று
நான்மறை வேத முழங்குதடி.

80:

 

பஞ்சை பனாதி யடியாதே யந்தப்
பாவந் தொலைய முடியாதே;
தஞ்சமென் றோரைக் கெடுக்கா தேயார்க்கும்
வஞ்சனை செய்ய நினையாதே.

81:

 

கண்டதுங் கேட்டதுஞ் சொல்லாதே கண்ணில்
காணாத வுத்தரம் விள்ளாதே;
பெண்டாட்டிக் குற்றது சொல்லாதே பெற்ற
பிள்ளைக் கிளப்பங் கொடுக்காதே.

82:

 

சிவன்ற னடியாரை வேதிய ரைச்சில
சீர்புல ஞானப் பெரியோரை
மவுன மாகவும் வையா தேயவர்
மனத்தை நோகவும் செய்யாதே.

83:

 

வழக்க ழிவுகள் சொல்லா தேகற்பு
மங்கையர் மேல்மனம் வையாதே;
பழக்க வாசியைப் பார்த்துக்கொண் டுவாலை
பாதத்தைப் போற்றடி வாலைப்பெண்ணே!

84:

 

கூடிய பொய்களைச் சொல்லாதே பொல்லாக்
கொலைக ளவுகள் செய்யாதே
ஆடிய பாம்பை யடியா தேயிது
அறிவு தானடி வாலைப் பெண்ணே!

85:

 

காரிய னாகினும் வீரியம் பேசவும்
காணா தென்றவ்வை சொன்னாளே;
பாரினில் வம்புகள் செய்யா தேபுளிப்
பழம்போ லுதிர்ந்து விழுந்தானே.

86:

 

காசார் கள்பகை செய்யா தேநடுக்
காட்டுப் புலிமுன்னே நில்லாதே;
தேசாந்த ரங்களுஞ் செல்லா தேமாய்கைத்
தேவடி யாள்தனம் பண்ணாதே.

87:

 

தன்வீ டிருக்க அசல்வீடு போகாதே
தாயார் தகப்பனை வையாதே;
உன்வீட்டுக் குள்ளேயே யூக மிருக்கையில்
ஓடித் திரிகிறாய் வாலைப் பெண்ணே!

88:

 

சாதி பேதங்கள் சொல்லுகி றீர்தெய்வம்
தானென் றொருவுடல் பேதமுண்டோ?
ஓதிய பாலதி லொன்றாகி யதிலே
உற்பத்தி நெய்தயிர் மோராச்சு.

89:

 

பாலோடு முண்டிடு பூனையு முண்டது
மேலாக காணவுங் காண்பதில்லை;
மேலந்த வாசையைத் தள்ளிவிட் டுள்ளத்தில்
வேண்டிப் பூசையைச் செய்திடுங்கள்.

90:

 

கோழிக் கறுகாலுண் டென்றுசொன் னேன்கிழக்
கூனிக்கு மூன்றுகா லென்று சொன்னேன்;
கூனிக்கி ரண்டெழுத் தென்றுசொன் னேன்முழுப்
பானைக்கு வாயில்லை யென்று சொன்னேன்.

91:

 

ஆட்டுக் கிரண்டுகா லென்றுசொன் னேனம்
மானைக்குப் பானைக்கு நிற்குமேல் சூல்
மாட்டுக்குக் காலில்லை யென்றுசொன் னேன் கதை
வகையைச் சொல்லடி வாலைப் பெண்ணே!

92:

 

கோயிலு மாடும் பறித்தவ னுங்கன்றிக்
கூற்று மேகற் றிருந்தவனும்
வாயில்லாக் குதிரை கண்டவ னுமாட்டு
வகைதெ ரியுமோ வாலைப் பெண்ணே!

93:

 

இத்தனை சாத்திரந் தாம்படித் தோர்செத்தார்
என்றா லுலகத்தோர் தாம்சிரிப்பார்;
செத்துப்போய்க் கூடக் கலக்கவேண்டு மவன்
தேவர்க ளுடனே சேரவேண்டும்.

94:

 

உற்றது சொன்னக்கா லற்றது பொருந்தும்
உண்டோ உலகத்தி லவ்வைசொன்னாள்;
அற்றது பொருந்து முற்றது சொன்னவன்
அவனே குருவடி வாலைப் பெண்ணே!

95:

 

பூரண நிற்கும் நிலையறி யான்வெகு
பொய்சொல்வான் கோடிமந் திரஞ்சொல்வான்
காரண குருஅ வனுமல் லவிவன்
காரிய குருபொ ருள்பறிப்பான்.

96:

 

எல்லா மறிந்தவ ரென்றுசொல் லயிந்தப்
பூமியி லேமுழு ஞானியென்று
உல்லாச மாக வயிறு பிழைக்கவே
ஓடித் திரிகிறார் வாலைப் பெண்ணே!

97:

 

ஆதிவா லைபெரிதானா லும்அவள்
அக்காள் பெரிதோ சிவன்பெரிதோ!
நாதிவா லைபெரி தானா லும்அவள்
நாயக னல்ல சிவம்பெரிது.

98:

 

ஆயுசு கொடுப்பாள் நீரிழி வுமுதல்
அண்டாது மற்ற வியாதியெல்லாம்
பேயும் பறந்திடும் பில்லிவினாடியில்
பத்தினி வாலைப்பெண் பேரைச் சொன்னால்.

99:

 

நித்திரை தன்னிலும் வீற்றிருப் பாளெந்த
நேரத்தி லும்வாலை முன்னிருப்பாள்;
சத்துரு வந்தாலும் தள்ளிவைப் பாள்வாலை
உற்றகா லனையுந் தானுதைப்பாள்.

100:

 

பல்லாயி ரங்கோடி யண்டமு தல்பதி
னான்கு புவனமும் மூர்த்திமுதல்
எல்லாந் தானாய்ப் படைத்தவ ளாம்வாலை
எள்ளுக்கு ளெண்ணெய்போல் நின்றவளாம்.

101:

 

தேசம் புகழ்ந்திடும் வாலைக்கும் மித்தமிழ்
செய்ய எனக்குப தேசஞ்செய்தாள்
நேசவான் வீரப் பெருமாள் குருசாமி
நீள் பதம் போற்றிக்கொண் டாடுங்கடி.

102:

 

ஆறு படைப்புகள் வீடு கடைசூத்ர
அஞ்செழுத் துக்கும் வகையறிந்து
கூறு முயர்வல வேந்த்ரன் துரைவள்ளல்
கொற்றவன் வாழக்கொண் டாடுங்கடி!

103:

 

ஆடுங்கள் பெண்டுக ளெல்லோ ருமந்த
அன்பான கொங்கணர் சொன்ன தமிழ்
பாடுங்கள் சித்தர்க ளெல்லோ ரும்வாலை
பரத்தைப் போற்றிக்கொண் டாடுங்கடி

104:

 

சித்தர்கள் வாழி சிவன்வா ழிமுனி
தேவர்கள் வாழி ரிஷிவாழி
பத்தர்கள் வாழி பதம்வா ழிகுரு
பாரதி வாலைப்பெண் வாழியவே!

சட்டை முனி ஞானம்

சட்டை முனி ஞானம்

ஞானம்

எண்சீர் விருத்தம்

1. காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய்;
கைம்முறையாய்ச் சுவடிவைத்துப் பூசை செய்வார்
பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துப்
புகழாகப் பூசைசெய்வார் பெண்ணை வைத்தும்;
நாளப்பா சக்கரத்தைப் பூசை செய்வார்
நம்முடைய பூசையென்ன மேருப் போலே
ஓதப்பா நாற்பத்துமுக் கோணம் வைத்தே
உத்தமனே! பூசைசெய்வார் சித்தர் தானே.

2. தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார்
சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும்;
தேனென்ற மேருவுக்குத் தீட்சை வேண்டும்:
சிறுபிள்ளை யாமொருவன் தீண்டப் போகா:
வானென்ற மேருவைத்தான் பூசை செய்தார்
வாய்திறந்தே உபதேசம் சொன்னா ராகிற்
கோனென்ற வாதசித்தி கவன சித்தி
கொள்ளையிட்டான் அவன்சீடன் கூறி னானே.

3. கூறியதோர் வாலையின்மூன் றெழுத்தைக் கேளாய்:
குறியறிந்து பூசைசெய்து பின்பு கேளாய்;
மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய்:
மைந்தனே! இவளைநீ பூசை பண்ணத்
தேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய்:
திறமாகப் புவனையை நீ பூசை பண்ணு:
ஆறியதோர் யாமளையா றெழுத்தைக் கேளாய்:
அவளுடைய பதம்போற்றிப் பூசை பண்ணே.

4. பண்ணியபின் யாமளையைந் தெழுத்தைக் கேளாய்:
பண்பாகத் தீட்சையைந்தும் முடிந்த பின்பு
வண்ணியதோர் வாசியென்ற யோகத் துக்கு
மைந்தனே வைத்துப்ராணா யாமந் தீரும்:
கண்ணியதோர் இத்தனையும் அறிந்தி ருத்தாற்
காயசித்தி விக்கினங்கள் இல்லை யில்லை;
உண்ணியதோர் உலகமென்ன சித்த ரென்ன
உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே!

சேஷ யோகியார்

ஞான ஏற்றம்

பிள்ளையாரும் வாரி
பிள்ளையாரும் அங்கே
பெருத்தமூலர் தாரஞ்
சிறுத்தஇதழ் நாலாம்
உரைத்தகம்ப மாகி
ஒங்கியுச்சி தொட்டுத்
தாங்கியதன் கீழாய்த்
தான் இரண்ட தாகித்
தங்கிவாயு வானால்
அங்குமே கடந்து
சங்கிலி பிளந்து
சமத்தவாயு வானால்
இங்கிது உரைத்தே
இரண்டுடனே வாரி
இன்னம் அதன் மேலே
வன்னமதைச் சொல்வேன்;
அன்னத்துக்கு ராசன்
அயன் சரஸ் வதியாம்;
நயந்த இதழ் ஆறாம்
நல்ல நிலம் பொன்னாம்
நகரமேயெ ழுத்தாம்
உகரங்கந்த மாகும்;
முத்திதந்த நாதா
மூன்றுடனே வாரி
மோசம்பண்ண மாயன்
வாசமணி பூரம்
நேசம் லட்சுமியாம்
வீசம்பத் திதழும்
ஓசைமவ்வெ ழுத்தாம்
தேசமே வெளுப்பாம்
ஆறுசுவை யாலே
நடுவேதேயு வீடாம்
நாலுடனே வாரி
நாலும்எட் டிதழும்
நல்ல செம்பு மேனி
எல்லைருத்தி ரனாம்
தொல்லைவிழிப் பார்வை
செல்லுமே சிகாரம்
அல்லல்உண்டே யின்னம்
அஞ்சுடனே வாரி
நெஞ்சில் அவ்வே ழுத்தாம்
கொஞ்சிய மயேசன்
மிஞ்சுமறு கோணம்
மேனிகறுப் பாமே
தன்னிதழைப் பார்க்கில்
தனியேபதி னாறாம்
முந்தவேலை யோடல்
அந்தரங்கஞ் சொல்வேன்
ஆறுடனே வாரி
கூறுவேனே நானும்
குருவிருந்த நேர்மை
அருகிருந்த பூசம்
அமைச்சல்லவோ அத்தான்!
என்னவென்று சொல்வேன்!
ஏழுடனே வாரி
தாழச்சொன்ன பேச்சுச்
சத்தியங்காண் அத்தான்!
ஏழைசொன்ன பேச்சு
எட்டுடனே வாரி
எட்டுச்சாண் உடம்பு!
கட்டையைநம் பாதே;
ஒன் றல்லவோ தெய்வம்;
ஒருபதியா லெட்டாம்
ஊமையெழுத் தாலே
ஓங்காரம்உண் டாச்சு:
ஓங்காரத்தி னாலே
உண்டாச்சுதே லோகம்:
இதுவுங்குரு வாலே
இருபதியா லெட்டாம்
இறைக்கிறரண் டேற்றம்
சுரக்குமேழை நாலாம்
முந்திகுரு பாதம்
முப்பதியா லெட்டாம்
முப்பாழுங் கடந்து
அப்பாலே நடந்தால்
அதிசயம்பார் அத்தான்!
நல்லகுரு பாதம்
நாற்பதியா லெட்டாம்
நாலுமூலைக் குண்டம்
நடுவெழுந்த தூணாம்
படுமுதல் இரண்டாம்
படுமுதல் பிடுங்கி
பருத்தமரம் ஏறிக்
குருத்தில்கள்ளி றக்கிக்
கூசாமற் குடித்தாற்
பேசாதே பிறகு
அஞ்சாதே நீ அத்தான்!
ஐம்பதியா லெட்டாம்
அஞ்சல்லவோ பூதம்?
பஞ்சல்லோவெ ழுத்து?
அஞ்சொடுங்கும் போது
நெஞ்சடங்கும் அத்தான்!
ஆறுமுக மல்லோ
அறுபதியா லெட்டாம்
ஆறல்லவோ தாரம்?
வேறெல்லோ சொரூபம்?
வேறறிந்த போக்குத் 
தூரமில்லை அத்தான்!
என்னவென்று சொல்வேன்
எழுபதியா லெட்டாம்
ஏழல்லவோ நாடி?
வாழின்பத்து நாடி
பாழல்லவோ நானும்?
பாழ்கடந்த பேர்க்குப்
பத்துக்கோடி தெண்டம்
என்னவென்று சொல்வேன்?
எண்பதியா லெட்டாம்
எண்ணிக்கை யறிந்து
கண்ணப்பனைக் கண்டு
திண்ணப்பா பழத்தைக்
குண்ணப்பா வறுமை.
விண்ணப்பம் உரைத்துச்
சண்ணப்பா குருவை
சொன்னதப சாரம்
தொண்ணூறுடன் எட்டாம்
மண்ணில்வெகு தூரம்
குண்ணறிந்த பேரை
எண்ணறிந்தே வாடி
ஏகமன மாகிப்
பாரமும் அறிந்து
நாகத்தை யெழுப்பிப்
பீசத்தைத் துறந்து
யோகத்தை நடத்திப்
போகத்தைக் கடந்தால்
தாகத்தை நிறுத்தும்:
சோதியறிந் தோர்க்குத்
தூரமில்லை அத்தான்!
சாதிகுல மில்லை
சற்குருவ றிந்தால்;
நித்தியம் இதுவே;
பத்தியாய்ப் பணிந்தால்
முத்திதரும் அத்தான்!
வாமநெறி சீவன்
ராமயோகி தந்த
ராசயோகி சேடன்
தாசன் அரு ளாலே
பாசமறச் சொன்னேன்
பிரியாமலே அத்தான்
பிள்ளையாரும் வாரி.

ஞான ஏற்றம் முற்றும்


குதம்பைச் சித்தர்

குதம்பைச் சித்தர்

கண்ணிகள்

1. வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப்
பட்டயம் ஏதுக்கடி? குதம்பாய்!
பட்டயம் ஏதுக்கடி?

2. மெய்ப்பொருள் கண்டு விளங்குமெய்ஞ் ஞானிக்குக்
கற்பங்கள் ஏதுக்கடி? குதம்பாய்!
கற்பங்கள் ஏதுக்கடி!

3. காணாமற் கண்டு கருத்தோடு இருப்பார்க்கு
வீணாசை ஏதுக்கடி? குதம்பாய்?
வீணாசை ஏதுக்கடி?

4. வஞ்சகம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச்
சஞ்சலம் ஏதுக்கடி? குதம்பாய்?
சஞ்சலம் ஏதுக்கடி?

5. ஆதார மான அடிமுடி கண்டோர்க்கு
வாதாட்டம் ஏதுக்கடி? குதம்பாய்!
வாதாட்டம் ஏதுக்கடி?

6. நித்திரைகெட்டு நினைவோடு இருப்போர்க்கு
முத்திரை ஏதுக்கடி? - குதம்பாய்!
முத்திரை ஏதுக்கடி!

7. தந்திரமான தலந்தனில் நிற்போர்க்கு
மந்திரம் ஏதுக்கடி? குதம்பாய்!
மந்திரம் ஏதுக்கடி?

8. சத்தியமான தவத்தில் இருப்போர்க்கு
உத்தியம்  ஏதுக்கடி? குதம்பாய்!
உத்தியம் ஏதுக்கடி?

9. நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு
வாட்டங்கள் ஏதுக்கடி? குதம்பாய்!
வாட்டங்கள் ஏதுக்கடி?

10. முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச்
சத்தங்கள் ஏதுக்கடி? குதம்பாய்!
சத்தங்கள் ஏதுக்கடி?

11. உச்சிக்கு மேற்சென்று உயர்வெளி கண்டோர்க்கு
இச்சிப்பிங்கு ஏதுக்கடி? குதம்பாய்!
இச்சிப்பிங்கு ஏதுக்கடி?

12. வேகாமல் வெந்து வெளியொளி கண்டோர்க்கு
மோகாந்தம் ஏதுக்கடி? குதம்பாய்!
மோகாந்தம் ஏதுக்கடி?

13. சாகாமல் தாண்டித் தனிவழி போவோர்க்கு
ஏகாந்தம் ஏதுக்கடி? குதம்பாய்!
ஏகாந்தம் ஏதுக்கடி?

14. அந்தரந் தன்னில் அசைந்தாடு முத்தர்க்குத்
தந்திரம் ஏதுக்கடி? குதம்பாய்!
தந்திரம் ஏதுக்கடி?

15. ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்பார்க்கு
ஞானந்தான் ஏதுக்கடி?-குதம்பாய்!
ஞானந்தான் ஏதுக்கடி!

16. சித்திரக் கூடத்தைத் தினந்தினம் காண்போர்க்குப்
பத்திரம் ஏதுக்கடி?-குதம்பாய்!
பத்திரம் எதுக்கடி?

17. முக்கோணம் தன்னில் முளைத்த மெய்ஞ் ஞானிக்குச்
சட்கோணம் ஏதுக்கடி? குதம்பாய்!
சட்கோணம் ஏதுக்கடி!

18. அட்டதிக் கெல்லாம் அசைந்தாடும் நாதர்க்கு
நட்டணை ஏதுக்கடி? குதம்பாய்!
நட்டணை ஏதுக்கடி?

19. முத்தி பெற் றுள்ளம் முயங்குமெய்ஞ் ஞானிக்குப்
பத்தியம் ஏதுக்கடி? குதம்பாய்!
பத்தியம் ஏதுக்கடி?

20. அல்லலை நீக்கி அறிவோடு இருப்பார்க்குப்
பல்லாக்கு ஏதுக்கடி?-குதம்பாய்!
பல்லாக்கு ஏதுக்கடி?

21. அட்டாங்க யோகம் அறிந்தமெய்ஞ் ஞானிக்கு
முட்டாங்கம் ஏதுக்கடி? குதம்பாய்
முட்டாங்கம் ஏதுக்கடி?

22. வேகம் அடக்கி விளங்குமெய்ஞ் ஞானிக்கு
யோகந்தான் ஏதுக்கடி? குதம்பாய்!
யோகந்தான் ஏதுக்கடி?

23. மாத்தானை வென்று மலைமேல் இருப்போர்க்குப்
பூத்தானம் ஏதுக்கடி? குதம்பாய்!
பூத்தானம் ஏதுக்கடி?

24. செத்தாரைப் போலத் திரியுமெய்ஞ் ஞானிக்கு
கைத்தாளம் ஏதுக்கடி?- குதம்பாய்!
கைத்தாளம் ஏதுக்கடி?

25. கண்டாரை நோக்கிக் கருத்தோடு இருப்பார்க்குக்
கொண்டாட்டம் ஏதுக்கடி?-குதம்பாய்!
கொண்டாட்டம் ஏதுக்கடி?

26. காலனை வென்ற கருத்தறி வாளர்க்குச்
கோலங்கள் ஏதுக்கடி? குதம்பாய்!
கோலங்கள் ஏதுக்கடி?

27. வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
உண்காயம் ஏதுக்கடி? குதம்பாய்!
உண்காயம் ஏதுக்கடி?

28. மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி?-குதம்பாய்!
தேங்காய்ப்பால் ஏதுக்கடி?

29.பட்டணஞ் சுற்றிப் பகலேதிரிவார்க்கு
முட்டாக்கு ஏதுக்கடி? குதம்பாய்!
முட்டாக்கு ஏதுக்கடி?

30. தாவாரமில்லை தனக்கொரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி? குதம்பாய்!
தேவாரம் ஏதுக்கடி?

31. தன்னை அறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப்
பின்னாசை ஏதுக்கடி? குதம்பாய்!
பின்னாசை ஏதுக்கடி?

32. பத்தாவுந் தானும் பதியோடு இருப்பார்க்கு
உத்தாரம் ஏதுக்கடி? குதம்பாய்!
உத்தாரம் ஏதுக்கடி?

பாம்பாட்டி சித்தர் பாடல்

பாம்பாட்டி சித்தர் 


1. தெளிந்து தெளிந்து தெளிந்து ஆடுபாம்பே! சிவன்
சீர்பாதங்கண்டு தெளிந்து ஆடுபாம்பே!
ஆடுபாம் பே! தெளிந்து ஆடுபாம் பே! சிவன்
அடியிணை கண்டோமென்று ஆடு பாம்பே!

2. நீடுபதம் நமக்கென் றுஞ்சொந்தம் என்றே
நித்தியம்என் றேபெரிய முத்தியென்றே
பாடுபடும் போதும் ஆதிபாதம் நினைந்தே
பன்னிப்பன்னிப் பரவி நின்று ஆடுபாம்பே!

3. பொன்னில்ஒளி போலவெங்கும் பூரணமதாய்ப்
பூவின்மணம் போலத் தங்கும் பொற்புடையதாய்
மன்னும் பலஉயிர்களில் மன்னிப் பொருந்தும்
வள்ளலடி வணங்கி நின்று ஆடுபாம்பே!

4. எள்ளில் எண்ணெய் போலவுயிர் எங்கும் நிறைந்த
ஈசன்பத வாசமலர் எண்ணி யெண்ணியே
உள்ளபடி அன்புபத்தி ஓங்கி நிற்கவே
ஒடுங்கி யடங்கித் தெளிந்து ஆடுபாம்பே!

5. அண்டபிண்டம் தந்தஎங்கள் ஆதிதேவனை
அகலாம் லேநினைத்தே அன்புடன் பணிந்து
எண்திசையும் புகழ்ந்திட ஏத்தி மேத்தியே
ஏகமன மாகநாடி ஆடு பாம்பே!

6. சோதிமயமான பரி சுத்தவத்துவைத்
தொழுதழு தலற்றித் தொந் தோம்தோம் எனவே
நீதி தவறா வழியில் நின்று நிலையாய்
நினைந்து நினந்துருகி ஆடுபாம்பே!

7. அருவாயும் உருவாயும் அந்தி யாயும்
அந்தமாயும் ஒளியாயும் ஆகம மாயும்
திருவாயும் குருவாயும் சீவனாயும்
செறிந்தவத் துவைப் போற்றி ஆடுபாம்பே!

8. சுட்டிகாட்ட ஒண்ணாதபாழ்ச் சூனியம் தன்னைச்
சூட்சமதியால் அறிந்து தோஷம் அறவே
எட்டிப் பிடித்தோ மென்றானந்த மாகப்பை!
எடுத்து விரித்துநின்று ஆடுபாம்பே!

9. எவ்வுயிரும் எவ்வுலகும் ஈன்று புறம்பாய்
இருந்து திருவிளையாட்டு எய்தியும் பின்னர்
அவ்வுயிரும் அவ்வுலகும் ஆதியும் நின்ற
ஆனந்த வெள்ளங்கண்டு ஆடு பாம்பே!

குரு வணக்கம்

10. காற்று உடன் பொருள் ஆவி தத்த மாகவே
தானம் வாங்கி நின்ற எங்கள் சற்குருவினைப்
போற்றிமனம் வாக்குக்காயம் மூன்றும் பொருந்தப்
புகழ்ந்து புகழ்ந்து நின்று ஆடு பாம்பே!

11. பொய்ம் மதங்கள் போதனை செய் பொய்க் குருக்களைப்
புத்தி சொல்லி நன்னெறியில் போக விடுக்கும்
மெய்ம் மதந்தான் இன்னதென்று மேவ விளம்பும்
மெய்க் குருவின் பதம் போற்றி ஆடுபாம்பே!

12. வேதப் பொருள் இன்னதென்றும் வேதம் கடந்த
மெய்ப் பொருளைக் கண்டு மனம் மேவி விரும்பிப்
போதப் பொருள் இன்னதென்றும் போதனை செய்யும்
பூரண சற்குருதாள் கண்டு ஆடுபாம்பே!

13. உள்ளங்கையிற் கனிபோல உள்ள பொருளை
உண்மையுடன் காட்டவல்ல உண்மைக் குருவைக்
கள்ளமனந் தன்னைத் தள்ளிக் கண்டு கொண்டு அன்பாய்க்
களித்துக் களித்து நின்று ஆடுபாம்பே!

14. அங்கையிற் கண்ணாடிபோல ஆதி வத்துவை
அறிவிக்கும் எங்கள் உயிரான குருவைச்
சங்கையறச் சந்ததமும் தாழ்ந்து பணிந்தே
தமனியப் படம் எடுத்து ஆடுபாம்பே!

15. காயம் நிலை அழிகையைக் கண்டு கொண்டு பின்
கற்பு நிலை யுள்ளிற் கொண்டு எக்காலமும் வாழும்
தூயநிலை கண்ட பரிசுத்தக் குருவின்
துணையடி தொழுது நின்று ஆடு பாம்பே!

16. கூடுவிட்டுக் கூடு பாயும் கொள்கை யுடைய
குருவின் வல்லபம் எவர் கூற வல்லவர்?
வீடு பெறும் வகையை மேன்மேலுங் காட்டும்
மெய்க் குருவைப் பணிந்து நின்று ஆடு பாம்பே!

17. அட்ட திக்கும் அண்ட வெளியான விடமும்
அடக்கிய குளிகையோடு ஆடி விரைவாய்
வட்டமிட்டு வலம்வரும் வல்ல குருவின்
மலரடி தஞ்சம் என்று ஆடு பாம்பே!

18. கற்பகாலம் கடந்தாதி கர்த்தா வோடும்
கடமழி யாது வாழுங் காரணக் குரு
பொற்பதமே தஞ்சமென்று போற்றுதல் செய்து
பூரணச் சிந்தையோடு ஆடு பாம்பே!

19. வச்சிரத்திற் கோர் பழுது வாய்க்கு மாயினும்
வல்லுடம்புக் கொருகுறை வாய்த்திடாது
மெச்சுகட முள்ள எங்கள் வேத குருவின்
மெல்லடி துதித்து நின்று ஆடு பாம்பே!

பாம்பினது சிறப்பு

20. நாதர்முடி மேல்இருக்கும் நாகப் பாம்பே!
நச்சுப் பையை வைத்திருக்கும் நல்லபாம்பே!
பாதலத்திற் குடிபுகும் பைகொள் பாம்பே!
பாடிப்பாடி நின்று விளையாடு பாம்பே!

21. வளைபுகும் போதேதலை வாங்கும் பாம்பே!
மண்டல மிட்டுடல் வளை வண்ணப் பாம்பே!
தளைக்கஞ்சி நின்றிடும் சத்தியப் பாம்பே!
தலையெடுத்தே நீ விளையாடு பாம்பே!

22. குற்றமற்ற சிவனுக்குக் குண்டலமானாய்;
கூறுந்திரு மாலினுக்குக் குடையுமானாய்:
கற்றைக் குழல் பார்வதிக்குக் கங்கணமானாய்:
கரவாமல் உளங்களித்து ஆடுபாம்பே!

23. மண்டலத்தைத் தாங்குமிக வல்லமை கொண்டாய்;
மாயனுக்குப் படுக்கைக்கு வண்ணப் பாயானாய்!
கண்டபடை நடுங்கிடக் காட்சியும் பெற்றாய்:
கண்ணே செவியாகக் கொண்டாய் ஆடுபாம்பே!

24. சந்திரனைச் சூரியனைத் தாவித் தீண்டினாய்:
சங்கரனுக்கு ஆபரணந் தானு மாகினாய்:
மந்திரத்துக் கடங்கினாய் மண்டலமிட்டாய்:
வளைந்து வளைந்து நின்று ஆடுபாம்பே!

சித்தர் வல்லபம்

25. எட்டு நாகம் தம்மைக் கையால் எடுத்தே ஆட்டுவோம்
இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம்
கட்டுக்கு அடங்காத பாம்பைக் கட்டி விடுவோம்
கடு விஷந் தனைக் கக்கி ஆடுபாம்பே!

26. ஆதிசேடன் ஆயினுமெம் மங்கையினாலே
ஆட்டி விடுவோ மெங்கள் ஆக்கினைக்குள்ளே;
நீதியோடு மடங்கியே நின்றிடச் செய்வோம்:
நின்ற நிலை தவறாமல் ஆடு பாம்பே!

27. தூணைச் சிறு துரும்பாகத் தோன்றிடச் செய்வோம்:
துரும்பைப் பெருந்தூணாகத் தோற்றச் செய்குவோம்:
ஆணைப் பெண்ணும் பெண்ணை ஆணும் ஆகச் செய்குவோம்:
ஆரவாரித்து எதிராய் நின்று ஆடு பாம்பே!

28. எட்டு மலைகளைப் பந்தாய் எடுத்து எறிகுவோம்:
ஏழு கடலையுங் குடித்து ஏப்பமிடுவோம்:
மட்டுப் படா மணலையும் மதித்து விடுவோம்:
மகாராசன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே!

29. மண்டலமுற்று மெங்கையால் மறைத்து விடுவோம்:
வானத்தையுமே வில்லாக வளைத்து விடுவோம்:
தொண்டருக்குச் சூனியஞ் சொல்லிக் காட்டுவோம்:
தோன்றலுக்கு முன்பு நீ நின்று ஆடு பாம்பே!

30.மூண்டெரியும் அக்கினிக்குள் மூழ்கி வருவோம்:
முந்நீருள் இருப்பினும் மூச்சடக்குவோம்:
தாண்டி வரும் வன்புலியைத் தாக்கி விடுவோம்:
தார்வேந்தன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே!

31. செப்பரிய மூன்றுலகுஞ் செம்பொன் ஆக்குவோம்:
செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம்:
இப்பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம்:
எங்கள் வல்ல பங்கண்டு நீ ஆடு பாம்பே!

32. வேதன் செய்த சிருட்டிகள் போல் வேறு செய்குவோம்
வேதனையும் எங்கள்கீழே மேவச் செய்குவோம்:
நாதனுடன் சமமாக நாங்களும் வாழ்வோம்:
நாங்கள் செய்கை யாம்இதுவென்று ஆடு பாம்பே!

33. அறுபத்து நாலு கலை யாவும் அறிந்தோம்:
அதற்குமேல் ஒரு கலையான தறிந்தோம்:
மறுபற்றுச் சற்றுமில்லா மனமும் உடையோம்:
மன்னனே ஆசான் என்று ஆடுபாம்பே!

34. சீறுபுலி யானையாளி சிங்க முதலாய்ச்
சிற்றடிக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம்:
வீறுபெருங் கடவுளை எங்களுடனே
விளையாடச் செய்குவோமென்று ஆடுபாம்பே!

35. வாசுகியை ஒரு பக்கம் மன்ன நிறுத்தி
மகத்தான பதுமனை மறுபக்கம் வைத்தே
தேசுலவு தக்கனைத்தன் திக்கினிற் சேர்த்துச்
செய்யபது மனைக்கொள்ளும் சித்தனாரே!

36. அனந்தனை யொருபக்கமாக நிறுத்தி
அதன் பக்கங் குளிகனை யண்டச் சேர்த்துக்
கனங்கொண்ட கார்க்கோடகன் காணக் காட்டுங்
கடுஞ்சங்க பாலனைத்தான் சித்தனாரே!

37. அட்டதிக்குஞ் சக்கரங்களாகக் கீறி
அக்கோண நிலைகளி லக்கரஞ் சேர்த்துத்
திட்டமுடன் மந்திரத்தைச் செபித்து நில்லும்
சித்தந்தடு மாறாதீர் சித்தனாரே!

38. அட்டதிக்குஞ் சக்கரங்கள் அமைத்துவிட்டோம்!
அவ்வவற்றில் சக்கரங்கள் அமைத்து விட்டோம்:
எட்டுநாகம் இருக்கின்ற இடத்தில் விட்டோம்:
இனியென்ன செய்வம் சொல்லும் சித்தனாரே!

39. நடுவாக ஆதிசேடன் தன்னை நாட்டும்
நான்கு திக்கும் மந்திரித்த நீறு தூவும்:
கடுவிடங் கக்க வேயக் கட்செவிகளைக்
கையிலெடுத் தாடுங்கள் சித்தனாரே!

பொருளாசை விலக்கம்

40. நாடுநகர் வீடுமாடு நற்பொருள் எல்லாம்
நடுவன்வ ரும்பொழுது நாடி வருமோ?
கூடுபோன பின்பு அவற்றால் கொள்பயன் என்னோ?
கூத்தன் பதங் குறித்துநின்று ஆடுபாம்பே!

41. யானை சேனை தேர்பரி யாவும் அணியாய்
யமன்வரும் போது துணையாமோ அறிவாய்:
ஞானஞ்சற்றும் இல்லாத நாய்கட் குப்புத்தி
நாடிவரும்படி நீ நின்று ஆடுபாம்பே!

42. மாணிக்கமா மணிமுடி வாகு வலயம்
மார்பில் தொங்கும் பதக்கங்கள் மற்றும் பணிகள்
ஆணிப்பொன் முத்தாரம் அப்பொன் அந்தக் கடகம்
அழிவான பொருளெனநின்று ஆடுபாம்பே!

43. மாடகூட மாளிகைகள் வண்ண மண்டபம்
மதில்சூழ்ந்த அரண்மனை மற்றும் உள்ளவை
கூடவாரா வென்று அந்தக் கொள்கை அறிந்தோர்
குலவாமல் வெறுப்பாரென்று ஆடுபாம்பே!

44. மலைபோன்ற செம்பொற்குவை வைத்தி ருப்பவர்
மறலிதான் வருகையில் வாரிச் செல்வரோ?
அலையாமல் அகத்தினை அத்தன் பால்வைத்தோர்
அழியார்என் றேநீ துணிந்து ஆடுபாம்பே!

45. பஞ்சணையும் பூவணையும் பாய லும்வெறும்
பாழ்ச்சுடு காடதிலே பயனைப் பெறுமோ?
மஞ்சள்மணம் போய்ச் சுடுநாறு மணங்கள்
வருமென்று தெளிந்துநின்று ஆடுபாம்பே!

46. முக்கனியுஞ் சர்க்கரையும் மோதகங்களும்
முதிர் சுவைப் பண்டங்களும் முந்தி உண்டவாய்
மிக்க உயிர் போன பின்பு மண்ணை விழுங்க
மெய்யாகக் கண்டோம் என்று ஆடுபாம்பே!

47. வண்ணப்பட்டும் வாசனையும் வாய்த்த கோலமும்
வண்கவிதை ஆலவட்டம் மற்றுஞ் சின்னமும்
திண்ணமுடன் யமபுரஞ் செல்லுங் காலத்தில்
சேரவர மாட்டாயென்று ஆடுபாம்பே!

48. மக்கள் பெண்டிர் சுற்றமரு மக்கள் மற்றவர்
மாளும்போது கூடஅவர் மாள்வ தில்லையே!
தக்கவுல கனைத்தையும் தந்த கர்த்தனைத்
தாவி த்தாவித் துதித்துநின்று ஆடுபாம்பே!

49. கானலைமான் நீரெனவே கண்டு செல்லல்போல்
காசினிவாழ் வினைமூடர் கண்டு களிப்பார்:
மேனிலை கண்டார்கள் வீணாய் வீம்பு பேசிடார்:
மெய்யன்பதம் நாடுவாரென்று ஆடுபாம்பே!

பெண்ணாசை விலக்கம்

50. வெயில்கண்ட மஞ்சள் போன்ற மாதர் அழகை
விரும்பியே மேல்விழுந்து மேவு மாந்தர்
ஒயில்கண்டே இலவுகாத்து ஓடும் கிளிபோல்
உடல்போனால் ஓடுவாரென்று ஆடுபாம்பே!

51. செண்டுமுலை வண்டுவிழி கொண்ட தோகையைச்
சித்தப்பால் விழுங்கிய சீயென்று ஒறுத்தோம்:
குண்டுகட்டெ ருமையேறுங் கூற்றுப் பருந்தைக்
கொன்றுதின்று விட்டோம் நாம் என்று ஆடு பாம்பே!

52. வட்டமுலையென்றுமிக வற்றுந் தோலை
மகமேரு என்று உவமை வைத்துக் கூறுவார்
கெட்ட நாற்ற முள்ளயோனிக் கேணியில் வீழ்ந்தார்
கெடுவர் என் றேநீர் துணிந்து ஆடுபாம்பே!

53. மலஞ்சொரி கண்ணைவடி வாளுக் கொப்பாக
வருணித்துச் சொல்வார்மதி வன்மை இல்லாதார்:
குருநலம் பேசுகின்ற கூகை மாந்தர்கள்
கும்பிக்கே இரையாவர் என்று ஆடுபாம்பே!

54. சிக்குநாறுங் கூந்தலையே செழுமை மேகமாய்ச்
செப்புவார்கள் கொங்கைதனைச் செப்புக் கொப்பதாய்
நெக்குநெக்கு உருகிப்பெண்ணை நெஞ்சில் நினைப்பார்
நிமலனை நினையார் என்று ஆடுபாம்பே!

55. நாறிவரும் எச்சில்தனை நல்லமு தென்றும்
நண்ணுஞ்சளி நாசிதனை நற்கு மிழ்என்றும்
கூறுவார்கள் புத்தியில்லாக் கூகை மாந்தர்கள்:
கோன் நிலையை அறியார் என்று ஆடுபாம்பே!

56. மயில் என்றும் குயில் என்றும் மாணிக்கம்என்றும்
மானேயென்றும் தேனேயென்றும் வான் அமுதென்றும்
ஒயிலான வன்னமயிற் கொத்தவ ளென்றும்
ஓதாமற் கடிந்துவிட்டு ஆடுபாம்பே!

57.மின்னற்கொடி யென்றுஞ்சோதி விளக்கம் என்றும்
மெல்லியென்றும் வல்லியென்றும் மேனகையென்றும்
கன்னற்கட்டி யென்றுஞ்சீனிக் கற்கண்டு என்றும்
கழறாமல் கடிந்தோம்என்று ஆடுபாம்பே!

58. பூவையென்றும் பாவையென்றும் பொன்னே யென்றும்
பூந்திருவே என்றும் என்றன் பொக்கிஷம் என்றும்
கோவையென்றுங் கோதையென்றுங் கோகிலம் என்றும்
கூறாமல்து றந்தோம்நாம் என்று ஆடுபாம்பே!

59. மலக்குடம் மீதினிலே மஞ்சள் பூச்சென்றும்
மல்கும்புழுக் கூட்டின் மேல் வண்ணத் தோல் என்றும்
சலக்குழிக் குள்ளே நாற்றஞ் சார்ந்த சேறென்றும்
தான் அறிந்து தள்ளினோம் என்று ஆடு பாம்பே!

சரீரத்தின் குணம்

60. ஊத்தைக் குழிதனிலே மண்ணை எடுத்தே
உதிரப்பு னலினிலே உண்டை சேர்த்தே
வாய்த்த குயவனார் அவர் பண்ணும் பாண்டம்
வறையோட்டுக்கும் ஆகாதென்று ஆடு பாம்பே!

61. இருவர்மண் சேர்த்திட ஒருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமையாய் இருப்பினும் அந்தச் சூளை
அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே!

62. பரியாசம் போலவே கடித்த பாம்பு
பலபேர் அறியவே மெத்த வீங்கிப்
பரியாரம் ஒருமாது பார்த்த போது
பையோடே கழன்றதென்று ஆடுபாம்பே!

63. சீயுமல முஞ்செறி செந் நீரும் நிணமும்
சேர்ந்திடுதுர் நாற்றமுடைக் குடம் அது உடைந்தால்
நாயும்நரி யும்பெரிய பேயுங் கழுகும்
நமதென்றே தின் றிடும்என்று ஆடுபாம்பே!

64. நீரில்எழும் நீர்க்குமிழி நிலைகெடல் போல
நில்லாது உடல் நீங்கிவிடும் நிச்சயம் என்றே
பாரிற்பல உயிர்களைப் படைத்த வன்தனைப்
பற்றவேநீ பற்றித் தொடர்ந்து ஆடுபாம்பே!

65. நாறுமீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்
நாளுங் கழுவினும் அதன் நாற்றம் போமோ?
கூறும் உடல் பலநதி யாடிக் கொண்டதால்
கொண்டமலம் நீங்காதென்று ஆடுபாம்பே!

66. காய்த்த மரம் அதுமிக்க கல்லடி படும்:
கன்ம வினை கொண்ட காயம் கண்டனை பெறும்:
வாய்த்த தவம் உடையவர் வாழ்பவர் என்றே
வத்துத் திருவடி தொழுது ஆடுபாம்பே!

67. பேசரிய நவவாயில் பீற்றல் துருத்தி
பெருங்காற்றுள் புகுந்ததாற் பேச்சுண் டாச்சே!
ஈசன்நிலை அறியாருக்கு இந்தத் துருத்தி
எரிமண்ணிற்கு இரையாம் என்று ஆடுபாம்பே!

68. மரப்பாவை போலவொரு மண்ணுருச் செய்து
வளமான சீவன் என்னுஞ் சூத்திரம் மாட்டித்
திரைக்குள் இருந்தசைப்போன் தீர்ந்த பொழுதே
தேகம்விழும் என்று தெளிந்து ஆடுபாம்பே!

69. தசநாடி தசவாயு சத்த தாது
சார்ந்தமரக் கப்பல் அது தத்தி விழுமே
இசைவான கப்பலினை ஏக வெள்ளத்தில்
எந்நாளும் ஒட்டத் துணிந்து ஆடுபாம்பே!

அகப்பற்று நீக்கல்

70. தாமரையின் இலையிலே தண்ணீர் தங்காத
தன்மைபோலச் சகத்தாசை தள்ளி விட்டெங்கும்
தூமணியாய் விளங்கிய சோதி பதத்தைத்
தொழுது தொழுது தொழுது ஆடும்பாம்பே!

71. கள்ளங்கொலை காமமாதி கண்டித்த வெல்லாம்
கட்டறுத்து விட்டுஞானக் கண்ணைத் திறந்து
தெள்ளிதான வெட்டவெளி சிற்சொரூபத்தைத்
தேர்ந்து பார்த்துச் சிந்தை தெளிந்து ஆடுபாம்பே!

72. சொல்லும்புளி யம்பழத்தின் தோடு போலவே
சுற்றத்திருந்தாலும் அவர் தொநதங்கள் அற்று
நில்லுமனமே நீபர நின்மலத்திலே
நின்றுணைதான் வெறும் பாழென்று ஆடுபாம்பே!

73. சேற்றில்திரி பிள்ளைபூச்சி சேற்றை நீக்கல்போல்
தேசத்தோடு ஒத்துவாழ்வார் செய்கை கண்டபின்
சாற்றுபர வெளிதனைச் சாரும் வழியே
தானடக்க வேணுமென்று ஆடுபாம்பே!

74. எண்ணெய்க்குந் தண்ணீர்க்குந் தொந்தம் இல்லாவாறுபோல்
எப்போதும் இப்புவியில் எய்த வேண்டும்:
கண்ணுக்குக் கண்ணானவொளி கண்டு கொள்ளவே
கட்டறுத்து வாழ்ந்திட நின்று ஆடுபாம்பே!

75. கக்கிவிட்ட சோறுகறி கந்த மூலங்கள்
கண்களுக்கு சுத்தமான காட்சி போலவே
சிக்கிக்கொண்ட சகத்தினைச் சீயென் றொறுத்துச்
சீர்பாதங் காணத்தெளிந்து ஆடுபாம்பே!

76. கோபம் என்னும் மதயானை கொண்ட மதத்தைக்
கூர்கொள்யுத்தி அங்குசத்தால் கொன்று விட்டோங்காண்:
தீபமென்னுஞ் சிற்சொரூபச் செய்ய பொருளைச்
சேர்ந்துறவு கொண்டோம் என்று ஆடுபாம்பே!

77. நித்தியமென்னு மலையில்நின்று கொண்டோம்யாம்:
நினைத்தபடியே முடித்து நின்மல மானோம்:
சத்தியமாய் எங்கள் கடந்தான் அழியாதே
சந்ததமும் வாழ்வோம் என்று ஆடுபாம்பே!

78. மனமென்னும் குதிரையை வாகன மாக்கி
மதியென்னும் கடிவாளம் வாயினில் பூட்டிச்
சினமென்னும் சீனியின் மேற்சீராய் ஏறித்
தெளிவிடம் சாரிவிட்டு ஆடு பாம்பே!

79. ஆசையென்னுஞ் செருப்பின் மேல் அடியை வைத்தே
ஆங்கார முட்காட்டை அறவே மிதித்தே
காசையெனுந் துர்க்குணத்தில் கனலைக் கொளுத்திக்
காலாகாலங் கடந்தோம் என்று ஆடு பாம்பே!

80. காலன் எனுங் கொடிதான கடும்ப கையைநாம்
கற்பமெனும் வாளினாலே கடிந்துவிட்டோம்:
தாலமதிற் பிறப்பினைத் தானும் கடந்தோம்
தற்பரங் கண்டோம் என்று ஆடு பாம்பே!

81. தேனில் வீழ்ந்த ஈயைப்போலச் சிந்தை குலைந்து
திகையாமல் சிற்சொரூப தெரிச னைக்கண்டு
வானிற் பறந்திடச்சூத வான்ம னிதீர்ந்து
வாயிற் போட்டேக நீ நின்று ஆடு பாம்பே!

82. தூக்கியநற் பாதங்கண்டேன் சோதியுங் கண்டேன்:
சுத்த வெளிக்குள்ளேயொரு கூத்தனைக் கண்டேன்:
தாக்கிய சிரசின் மேல் தைத்த பாதம்
சற்குருவின் பாதம் என்று ஆடு பாம்பே!

83. ஆலடிப் பொந்தினிலே வாழ்ந்த பாம்பே!
அரசடிப் பொந்தினிலே புகுந்து கொண்டாய்:
வாலடி தன்னிலே பார்த்துப் பார்த்து
வாங்கியே தூங்கிநின்று ஆடு பாம்பே!

84. நாலு தெருவினிலே நாலு கம்பம்
நடுத்தெருவினிலேயோர் பொன்னுக் கம்பம்
போலும் விளங்குபொன்னுக் கம்பத்தினுக்கே
பூமாலை சூடியேநின்று ஆடு பாம்பே!

85. ஆழிபெயர்ந்தாலும் மேரு மட்டே அலையும்
அடியோடு பெயர்ந்தாலும் அன்றிக் கால
ஊழிபெயர்ந்தாலும் மதி உண்மைப் படிக்கே
உறுதி பெயராது நின்று ஆடு பாம்பே!

86. வாயுவினை இரையாக வாங்கி உண்டே
வருடிக்கு நீரினை வாயுள் மடுத்தே
தேயுபிறை குளிர்காய்ந்து வெட்ட வெளியில்
திகைப்புறச் சேர்ந்துநின்று ஆடு பாம்பே!

87. மாசில்கதி வளையிலே மண்டலம் இட்டே
மதியான பெரும்பட மடலை விரித்தே
ஆசில்பரா பரமான ஆதி பாதத்தை
அடுத்தடுத்தே துதித்து ஆடு பாம்பே!

88. காடுமலை நதிபதி காசி முதலாய்க்
கால்கடுக்க  ஓடிற்பலன் காண லாகுமோ?
வீடுபெறும் வழிநிலை மேவிக் கொள்ளவே
வேதாந்தத் துறையில் நின்று ஆடு பாம்பே!

89. எள்ளளவும் அன்பகத்தில் இல்லா தார்முத்தி
எய்துவது தொல்லுலகில் இல்லை யெனவே
கள்ளப்புலன் கட்டறுத்துக் கால காலனைக்
கண்டு தொழுதே களித்து ஆடு பாம்பே!

90. சூரியனைக் கண்டபனி தூர ஓடல் போல்
சொந்தபந்தஞ் சிந்தபரி சுத்த தலத்தில்
ஆரியனைக் கண்டுதரி சித்தே யன்புடன்
அகலாமல் பற்றித் தொடர்ந்து ஆடு பாம்பே!

91. காந்தம்வலி இரும்பு போல் காசில் மனத்தைக்
காட்சியான வத்துவுடன் கலக்கச் சேர்த்துச்
சாந்தமுடன் தோண்டியும் தாம்பும் போலச்
சலியாமல் தொடர்ந்து நின்று ஆடு பாம்பே!

92. உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி?
உலகத்தின் மூடர்களுக் குண்டோ உணர்ச்சி?
புளியிட்ட செம்பிற்குற்றம் போமோ? அஞ்ஞானம்
போகாது மூடருக்கென்று ஆடு பாம்பே!

93. திரளான போரில்ஊசி தேடல் போல்முத்தி
சிக்காது தேசாசார தேசிகர் தம்மால்
அருளான மூலகுரு ஐயர் செயலால்
ஆனந்தங் கண்டோம் என்று ஆடுபாம்பே!

94. ஏட்டுச்சுரைக்காய் கறிக்கிங் கெய்திடாது போல்
எண்திசை திரிந்துங் கதி எய்தல் இலையே!
நாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே
நாதன்பாதம் காணார்கள் என்று ஆடுபாம்பே!

95. தன்னையறிந்து ஒழுகுவோர் தன்னை மறைப்பார்:
தன்னையறி யாதவரே தன்னைக் காட்டுவார்:
பின்னை யொரு கடவுளைப் பேண நினையார்
பேரொளியைப் பேணுவார் என்று ஆடு பாம்பே!

96. பாலிற்சுவை போலும் எங்கும் பாய்ந்த ஒளியைப்
பற்றுப்பொன் பற்றவைத்த பான்மைபோலே
காலிற்சுழு முனைநின்று கண்டு கொண்டு
களித்துக் களித்துநின்று ஆடுபாம்பே!

97. தேக்கெடுத்தே ஓடும்வானத் தேனை உண்டபின்
தேகபந்தம் கொண்டனம் இத் தேச வாழ்வினை
ஒக்காளமென்று எண்ணிமிகு ஓகையுடன் நீ
உள்ளம் தெளிந்துநின்று ஆடு பாம்பே!

98. சதுர்வேதம் ஆறுவகைச் சாத்தி ரம்பல
தந்திரம் புராணங்கலை சாற்றும் ஆகமம்
விதம்வித மானவான வேறு நூல்களும்
வீணாண நூல்களே என்று ஆடு பாம்பே!

99. சமயபேதம் பலவான சாதி பேதங்கள்
சகத்தோர்க்கே அல்லாதுசற் சாதுக் களுக்கோ?
சிமயத்தி லேறினபேர் சித்தம் மாறுமோ?
சித்தர்சித் தாந்தந்தேர்ந்து ஆடுபாம்பே?

100. பூசைசெய்த தாலேசுத்த போதம் வருமோ?
பூமிவலஞ் செய்ததனாற் புண்ணியம் உண்டோ?
ஆசையற்ற காலத்திலே ஆதி வத்துவை
அடையலாம் என்று துணிந்து ஆடு பாம்பே!

101. மூலவேர் அறிந்து கொண்டால் மூன்று உலகமும்
முன்பாகவே கண்டுநித்ய முத்தி சேரலாம்:
சாலவேர் அறிந்ததாலே தான்பயன் உண்டோ?
சகத்தைப்பொய் யென்று தெளிந்து ஆடு பாம்பே!

102. சகத்தனாதி யென்றிடாது தான் அனாதியார்:
சமைந்ததென் றுஉரைப்பார்கள் சத்தை அறியார்:
மகத்துவ நிலைகற்பவன்மை யல்லாது
மற்றும்வன்மை இல்லையேஎன்று ஆடு பாம்பே!

103. ஆயிரத்தெட் டிதழ்வீட்டில் அமர்ந்த சித்தன்
அண்டம்எல்லாம் நிறைந்திடும் அற்புதச் சித்தன்
காயமில்லாது ஓங்கிவளர் காரணச் சித்தன்
கண்ணுள்ஒளி யாயினான் என்று ஆடு பாம்பே!

104. நாற்பத்துமுக் கோணநிலை நாப்ப ணதாக
நாடும் அக்க ரச்சொரூப நாய கன் தனை
மேற்படுத்திக் கொண்டால் அந்த மேலு லகெலாம்
மெல்லடிக்குத் தொண்டேயாம் என்று ஆடு பாம்பே!

105. கண்டவர்கள் ஒருக்காலும் விண்டி டார்களே:
விண்டவர்கள் ஒருக்காலும் கண்டி டார்களே!
கொண்ட கோலம் உள்ளவர்கள் கோன் நிலை காணார்:
கூத்தாடிக்கூத் தாடியே நீ ஆடு பாம்பே!

106. ஆறுகலைக் குச்சுக்குள்ளே ஆடும் ஒருவன்
அயல்வீடு போகுமுன்னே அரண்கோ லிக்கொள்ளு?
வேறுபட்டால் அவன் தனை மீட்டல் அரிதே:
மேவிமுன் னேவிடாது கொண்டு ஆடு பாம்பே!

107. எண்ணரிய புண்ணியங்கள் எல்லாம் செய்தும்என்
ஏகன் அடி நெஞ்சமதில் எண்ணாவிடிலே?
பண்ணரிய தவப்பயன்பத்தி இல்லையேல்
பாழ்படும் என்று துணிந்து ஆடு பாம்பே!

108. எவ்வுலகுஞ் சொந்தமதாய் எய்தும் பயன்என்
எங்கள் ஆதி பாதாம்புயம் எண்ணாக் காலையில்?
இவ்வுலக வாழ்வுதானும் இன்றே அறுமென்று
எண்ணிக் கர்த்தன் அடிநினைந்து ஆடு பாம்பே!

109. மணக்கோலங் கொண்டுமிக மனம கிழிந்துமே
மக்கள் மனை கற்றத்தோடு மயங்கி நின்றாய்:
பிணக்கோலம் கண்டுபின்னுந் துறவா விட்டில்
பிறப்புக்கே துணையாம்என்று ஆடு பாம்பே!

110. பிறப்பையும் இறப்பையும் அறுத்து விடயான்
பெருமருந்து ஒன்றுசொல்வேன் பெட்புடன் கேளாய்:
திறப்புடன் மனப்பூட்டுஞ் சிந்தைக் கதவும்
திறந்திடும் வகையறிந்து ஆடு பாம்பே!

111. இறந்தவர் ஐவர் அவர் இட்டமானவர்
எய்தும் அவர் இறந்தார் என்று எல்ல வர்க்குஞ்சொல்
மறந்தவர் ஒருவர் என்றே மண்ணினில் உள்ளோர்
வகையறிந் திடவேநின்று ஆடு பாம்பே!

112. ஆகார முதலிலே பாம்ப தாக
ஆனந்த வயலிலே படம் விரித்தே
ஊகார முதலிலே யொத்து ஒடுங்கி
ஓடி வகாரத்தின் நாவைநீட்டிச்

சீகாரங் கிடந்ததோர் மந்திரத்தைச்
சித்தப் பிடாரனார் போதஞ் செய்ய
மாகாரப் பிறப்பையும் வேர் அறுத்து
மாயபந்தம் கடந்தோம் என்று ஆடு பாம்பே!

113. தந்திரம் சொல்லுவார் தம்மை அறியார்:
தனிமந்திரஞ் சொல்லுவார் பொருளை அறியார்:
மந்திரம் செபிப்பார்கள் வட்ட வீட்டினுள்
மதிலினைச் சுற்றுவார் வாயில் காணார்:

அந்தரம் சென்றுமே வேர் பிடுங்கி
அருள் என்னும் ஞானத்தால் உண்டை சேர்த்தே
இந்த மருந்தினைத் தின்பீராகில்
இனிப் பிறப்பு இல்லையென்று ஆடு பாம்பே!

114. களிமண்ணினால் ஒரு கப்பல் சேர்த்தே
கனமான பாய்மரங் காண நாட்டி
அளி புலந் தன்னையே சுக்கானாக்கி
அறிவென்னும் ஆதாரச் சீனி தூக்கி

வெளியென்னும் வட்டத்தே யுள்ளடக்கி
வேதாந்தக் கடலினை வெல்ல வோட்டித்
தெளிவுறு ஞானியார் ஒட்டுங் கப்பல்
சீர் பாதஞ் சேர்ந்தது என்று ஆடு பாம்பே!

115. உள்ளத்துக் குள்ளேயே உணர வேண்டும்:
உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும்:
மெள்ளக் கனலை எழுப்ப வேண்டும்
வீதிப் புனலிலே செலுத்த வேண்டும்:

கள்ளப் புலனைக் கடிந்து விட்டுக்
கண்ணுக்கு மூக்குமேற் காண நின்று
தெள்ளு பரஞ்சோதி தன்னைத் தேடிச்
சீர்பாதம் கண்டோம் என்று ஆடு பாம்பே!

116. ஓங்காரக் கம்பத்தின் உச்சி மேலே
உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும்:
ஆங்காரக் கோபத்தை அறுத்து விட்டே
ஆனந்த வெள்ளத்தைத் தேக்கிக் கொண்டே

சாங்காலம் இல்லாமல் தாணு வோடே
சட்ட திட்டமாய்ச் சேர்ந்து சாந்தமாகத்
தூங்காமல் தூங்கியே சுகம் அடைந்து
தொந்தோம் தொந்தோம் என்று ஆடு பாம்பே!

117. விரகக் குடத்திலே பாம்படைப்போம்:
வேதாந்த வெளியிலே விட்டே ஆட்டுவோம்:
கரணங்களைப் பிடுங்கி இரை கொடுப்போம்:
காலக் கடுவெளி நின்று ஆட்டுவிப்போம்:

துரகந் தனிலேறித் தொல் உலகெங்கும்
சுற்றி வலம் வந்த நித்ய சூட்சங் காண்டும்;
உரையற்ற மந்திரஞ் சொல்லி மீட்போம்:
ஒரு நான்கும் பெற்றோம் எனது ஆடு பாம்பே!

118. காயக் குடத்திலே நின்ற பாம்பைக்
கருணைக் கடலிலே தியங்க விட்டு
நேயச் கழுமுனை நீடு பாய்ச்சி
நித்யமான வத்துவை நிலைக்க நாடி

மாயப் பெருவெளி தன்னில் ஏறி
மாசற்ற பொருளினை வாய்க்கத்தேடி
ஆயத் துறைகடந் தப்பாற் பாழின்
ஆனந்தஞ் சேர்ந்தோம் என்று ஆடு பாம்பே!

119. மூலத் தலத்திலே நின்ற கருத்தை
முற்றுஞ் சுழுமுனை தன்னில் ஊடே
மேலத் தலத்திலே விந்து வட்டம்
வேலை வழியிலே மேவி வாழும்

பாலத் திருத்தாய்க் கருணை யதனால்
பரகதி ஞான சொரூபமாகி
ஆலச் சயனத்து மாலுடன் நின்றே
ஆனந்தஞ் சேர்ந்தோம் என்று ஆடு பாம்பே!

120. புலன் ஐந்து வீதியில் வையாளி பாயும்
புரவி யெனும் மனத்தை ஒருமைப் படுத்தி
மலபந்த வுலகங் கடந்ததாலே
மன்னுகுரு பாதத்தின் நிலையை நாடித்

தலம் ஐந்து பூலோகங் கடந்ததாலே
சந்திர மண்டிலமுங் கடந்த தாகும்:
அலமந்து பூலோகக் கடலை நீக்கி
ஆனந்த மாகிநின்று ஆடு பாம்பே!

121. குருவென்னும் ஆசானின் உருவெடுத்துக்
குறியான ஞானந்துப் பாக்கி யாக்கி
அருளென்னும் அருளையே உண்டையாக்கி
ஆனந்த மாகவே அதைக் கடந்தே

மருளென்னும் மாதர்மன நெறியைத்தொட்டு
வாங்காமல் எரிந்திட நெட்டை யிட்டுப்
பருவளைக் குள்ளேயே பட்ட தென்றே
பற்றானைப் பற்றிநின்று ஆடு பாம்பே!

122. கன்னான் குகையிலே கான்மறிப்போம்:
கருமான் உலையிலே தீயை மூட்டுவோம்:
சொன்னார் தலையிலே பொன்னை ஆக்குவோம்:
சுருதி யருங்கலவி ஒப்பஞ் செய்வோம்:
மின்னார்கள் பாசத்தை விட்டே எரிப்போம்:
மெய்ப்பொருள் குறிகண்டு விருப்பை அடைவோம்:
பன்னாதே பன்னாதே சும்மா விருந்து
பராபரஞ் சேர்ந்தோம் என்று ஆடு பாம்பே!

123. சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்:
சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்:
வீதிப் பிரிவினிலே விளையாடிடுவோம்:
வேண்டாத மனையினில் உறவு செய்வோம்:

சோதித் துலாவியே தூங்கி விடுவோம்
சுகமான பெண்ணையே சுகித்திருப்போம்:
ஆதிப் பிரமர்கள் ஐந்து பேரும்
அறியார்கள் இதையென்று ஆடு பாம்பே!

124. நெட்டெழுத்து அதனிலே நிலைபி டித்து
நீங்கர் எழுத்திலே வாலை முறுக்கி
விட்டுஅவ் எழுத்திலே படம்விரித்து
விண்ணின் வழியிலே மேவி யாடிப்

பட்ட எழுத்தையும் பதிந்தி ருப்போம்
பன்னிரண் டாமெழுத்தில் பன்னிக் கூடித்
திட்டமுடன் எமக்கருள் தேசிக னார் தம்
சீர்பாதஞ் சேர்ந்தோம் என்று ஆடு பாம்பே!

125. ஊசித்துளைக் குடத்தினில் பாம்பை அடைப்போம்:
உலகெலாம் சுற்றியே உலாவி வருவோம்:
மாசுள்ள பிறவியை மறந்தி ருப்போம்:
மனமொத்த வெளியிலே விட்டே ஆட்டுவோம்:

மாசுப் புலன்களை இரைகொ டுப்போம்:
மனமுற்ற உச்சியில் ஏறி ஆடுவோம்:
பேசும் எழுத்தையும் விழுங்கி விடுவோம்:
பிறப்பு இறப்பு அற்றோம்என்று ஆடு பாம்பே!

126. ஆணிக் குடத்திலே பாம்ப டைப்போம்:
அக்கினிக் கோட்டைமேல் ஏறிப் பார்ப்போம்:
மாணிக்கத் தூணின்மேல் விட்டே ஆட்டுவோம்:
மனம்வாக்குக் காயத்தை இரைகொடுப்போம்:

நாணிக் கயிற்றையும் அறுத்து விடுவோம்:
நமனற்ற நாதன் பதம் நாடியே நிற்போம்:
ஏணிப் படிவழிகண்டு ஏறி விடுவோம்:
யாரும்இதை அறியார்என்று ஆடு பாம்பே!

127. வடக்குங் கிழக்குமாக நூலை இழைப்போம்:
மற்றுஞ் சுழலிலே பாவு பூட்டுவோம்:
நடக்கும் வழியினிலே உண்டை சேர்ப்போம்:
நடவா வழியினிலே புடையை நெய்வோம்:
குடக்குக் கரையினிலே கோலைப் போடுவோம்:
கொய்ததை எங்குமே விற்று விடுவோம்:
அடக்கியே ஏகத்துள்ளே வைக்கவும் வல்லோம்:
ஆதிபதங் கண்டோம் என்று ஆடு பாம்பே!

128. சூத்திரக் குடத்திலே பாம்பை அடைப்போம்:
சுழுமுனைக் குள்ளேயே சுகித்திருப்போம்:
பாத்திரங் கொண்டுமே பலிஇ ரப்போம்:
பத்தெட்டு மூன்று படிக டந்தோம்:
ஊத்தைச் சடத்தினைப் புடமே இடுவோம்:
உளவன் எமக்குநல் உறுதி சொல்லப்
பார்த்துரை இதன்மெய் பலிக்க எண்ணிப்
பதனம் பதனம்என்று ஆடு பாம்பே!

129. மவ்வக் குடத்திலே பாம்ப டைப்போம்:
மணிவட்ட வாசியை வாரி உண்போம்:
வவ்வக் குடங்களைத் தள்ளி விடுவோம்:
வக்கிர சொப்பனந் தாண்டி விடுவோம்:
பவ்வ வெளியிலே விட்டே ஆட்டுவோம்:
பஞ்ச கருவியைப் பலிகொ டுப்போம்:
சிவ்வுரு வாகியே நின்றோம் என்றே
சீர்பாதம் கண்டுதெளிந்து ஆடு பாம்பே!

சுப்பிரமணியர் ஞானம்

காப்பு

ஒழியாத சுழுமுனையி லொடுங்கி நல்ல உற்றகலை வாசிசிவ யோகத் தேகி
வழியான துறையறிந்து மவுனங் கொண்டு மகத்தான அண்ட வரை முடிமேற் சென்று
தெளிவான ஓங்கார வடிவேல் கொண்டு தெளிந்துமன அறிவாலே தன்னைக் கண்டு
வெளியான பரவெளியில் வாச மாகி வேதாந்த சத்திசிவ ஆகி காப்பே.

நூல்

1. ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம் அருவுருவாய் நின்றபர சிவமு மாகிச்
சோதியென்ற சிவனிடமாய்ச் சத்தி யாகித் தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி
நீதியென்ற அறிவதனால் தானாய் நின்று நிறைந்தபரி பூரணநிட் களமு மாகிச்
சாதியென்ற சத்திசிவ மருள்தன் னாலே சண்முகனுங் கணபதியுந் தா முண்டாச்சே.

2. உண்டான சத்திசிவம் ஏக  மாகி உளங்கனிந்து பூரணமாய் நிற்கும் போது
குண்டான மாங்கனியைக் கையில் வாங்கிக் குமரனுடன் கணபதியைக் குணமாய்ப் பார்த்து
நன்றாகக் கிரிவலமாய் வந்த போக்கு நல்லகனி தானீவோம் என்று சொன்னார்:
பயன்றான கனியறிந்து குமரன் றானும் பாய்ந்துமயி லேறிகிரி வலஞ்சென்றானே.

3. சென்றபின்பு கணபதியும் ஆலோ சித்துத் தீர்க்கமுள்ள மேருகிரி நீர்தா மென்று
கண்டவுடன் சிவனுமையாள் பாதந் தன்னைக் கருத்துடனே சுற்றிவந்து கனியை வாங்கிக்
கொண்டந்த சிவனுமையைத் தியானஞ் செய்து குறியறிந்து நெறி தமக்குள் திருவைப் போற்றித்
தின்றுருசி கண்டறிந்து நிற்கும் போது தீர்க்கமுள்ள கணபதியை வாவென் றாரே.

4. வாவென்றே எடுத்தணைத்தங் கருட்பாலீந்து மகத்தான ஐவருக்கும் பீடமாகி
ஆவென்று மூலமதற் கரசாய் நின்றே ஐந்தெழுத்திற் குயிரான ஆதி யாகிக்
கூவென்ற சத்துசித்த சுத்த மாகிக் குவிந்தெழுந்த வாதிகுரு தேசி யாகிப்
பூவென்ற வாயிரத்தெண் மலருக் குள்ளே பொருந்திமன அறிவாலே யிருந்து வாழே.

5. இருந்துவா ழென்றுரைத்த வேளை தன்னில் ஏகாந்த மயில்வீர னெதிரில் வந்தே
அருந்தவமாய் நின்றநிலை தன்னைப் பார்த்தே அருமையுள்ள கண்மணியே வா வென் றேதான்
வருந்தியே மாங்கனியொன் றீந்து. நல்ல மகத்தான அண்டரண்ட வரைகள் சுற்றித்
திருந்தியே தீர்க்காயுள் பெற்று வாழ்ந்து தீர்க்கமுடன் மலைக்கரசா யிருந்து வாழே.

6. வாழென்று சொன்னவுடன் மயில்வீ ரன்தான் மகத்தான சிவசத்திபத மேற்கொண்டே
ஆவென்று மயிலேறிக் கயிலா சத்தை ஆவலுடன் சுற்றிவரும் போதி லேதான்
சூழென்றே இமயகிரி வடபா கத்திற் சுத்த சித்த மானதபோதனர்கள் கண்டு
தாள்பணிந்து வணக்கமதாய் நிற்கும் போது தபோதனர்கள் ரிடிகளுமே தாம்வந் தாரே.

7. வந்தவரைத் தான்பார்த்து வரையில் நிற்க மகத்தான சற்குருவென் றடிபணிந்தே
இந்தமலைச் சாரலிலே வெகுநா ளாக இன்பமுடன் தவஞ்செய்து வாழ்ந்தோமையா!
அந்தரமாய் ராட்சதர்கள் அண்டி வந்தே அலங்கோலஞ் செய்துமே துரத்துகின்றார்!
சுந்தரமாயிருந்து தவங் காவாய்! என்று சுத்த சித்தமாய்த் தவத்தைக் தொடங்கி னாரே.

8. தொடங்கிமன மடங்கிநிலை தன்னைக் காத்துச் சுத்தமுடன் நின்றுவிளை யாடும் போதில்
அடங்கிமன மடங்காத அசுரர் தாமும் அஞ்சாமல் அழும்புசெய்யு மகத்தைப் பார்த்துத்
திடங்கொண்டு மயிலேறிச் செவ்வேல் கொண்டு சிவந்துவரும் அசுரர்கிளை மாளவென்று
படங்குவித்து வேல்முனையைத் தியானம் பண்ணிப் பாயவிட அசுரர்கிளை பறந்து போச்சே!

9. பறந்துபோய்ப் பலவிதமாய் ரூபங் கொண்டு பந்திபந்தி யாங் அசுரர் பறந்து வந்தார்;
சிறந்துவந்த சேனைகளை நன்றாய்ப் பார்த்துத் தீர்க்கமுள்ள மயிலேறித் தெளிந்து நின்றே
அறந்தழைக்க வேணுமென்று தூல சூட்சம் அரூபமெனுங் காரணமாய் ரூபங் கொண்டு
நிரந்தரமாய் வந்தபொலா அசுரர் தம்மை நிர்த்தூளி செய்துதவம் நிலைகொண்டானே.

10. நிலைகொண்டு நின்றசெயங் கொண்டு சிந்தை நேர்மையுடன் தவஞ்செய்யு முனிவர் கண்டு
கலைகொண்டு மனந்தெளிந்து மகிழ்ச்சி யாகிக் கானமயில் வீரனடி கருதிப் போற்றித்
தலைகொண்டு தாள்பணிந்தே அருட்கண் பெற்றுத் தபோதனரும் ரிடிகளுமே தாம் பணிந்து
சிலைகொண்டு நின்றவடி வேலன் தன்னைத் தெரிசித்தே அவரவர்கள் பதிசென் றாரே.

11. பதிதேடி யவரர்கள் செல்லும் போது பத்தியுள்ள அகத்தியமா முனிவன் வந்து
விதியறிந்தே அசுரர்கிளை மாள வென்று வெற்றியுள்ள வடிவேலைத் தியானம் பண்ணிக்
கெதியறிந்து தூலமுடன் சூட்சமாகிக் கிருபையுள்ள காரணமாம் ரூபங் கொண்டு
சதியறிந்து சங்காரஞ் செய்தா யையா சண்முகமே என்குருவே! சரணந்தானே

12. சரணமென்றே அகத்தியமா முனியைப் பார்த்துச் சண்முகமாய் நின்றவடி வேலன் தானும்
திரணமதாய்த் தானறிந்து, நீ யார்? என்னைத் திருவடியைப் பூசை செய்யுஞ் சேயன் என்றார்:
கரணமந்தக் கரணமதாய் வந்த தேதோ? கருணையுடன் வா என்று கடாட்சம் நல்கி
தருணமறிந் துதவுவது தருமமென்று சங்கையுடன் தான் வந்த வகைசொல்வாயே?

13. சொல்லென்று மயில்வீ ரன் கேட்க வந்த சோதிமய மான அகத்தியர் தாம் சொல்வார்:
சல்லென்று வந்தபொலா அசுரர் தம்மைச் சண்முகமாய் நின்றவடி வேலுங்கொண்டு
செல்லென்று சங்காரஞ் செய்தா யந்தத் திருவுருவாய் நின்றகா ரணத்தைக் காட்டி
உள்ளென்ற ஆகார தூல சூட்சம் உண்மையென் றகாரணமு ரை செய்வாயே.

14. உரைசெய்வா யென்றுசொன்ன வுறுதி கேட்டே உண்மையென்று மயில்வீரன் உறுதியாகி
நிரைசெய்தே எக்கியங்கள் தாமுண் டாக்கி நேமமுடன் அகத்தியமா முனிவா என்றே
அரையறிந்தே அருகிருத்தி ஓம் குண்டம் ஆதியென்ற மந்திரத்தி லங்கி யாக்கிப்
புரையறிந்து மந்திரங்கள் செபிக்கும்போது பூரணமாய்க் கும்பமதில் தானுண் டாச்சே.

15. உண்டான பூரணமாய்க் கும்பம் வாங்கி உண்மையென்ற மாமுனிக்கே அபிடே கித்து
நன்றான நவக்கிரக மொன்ப துக்கும் நலமான அனுக்கிரக நிலையுங் காட்டிக்
குன்றான அனுக்கிர வாசல் காணக் குவிந்துமன அறிவதனால் விண்ணென் றூணே.

16. விண்ணென்று விசையுடனே முனைநா வுள்ளே மெய்ஞ்ஞான வாசலது திறக்கு மப்போ
கன்னென்ற கபாடவழிக் குள்ளே நின்று கலையறிந்து வாசியினால் கமலம் நோக்கி
உன்னென்று மூலமதில் வங்கென பூரி உறுதியென்ற சமாதியிலே சிங்கென் ரேசி
என்றென்று மிப்படியே கொண்டு நின்றால் ஏகமுள்ள தசதீட்சை யுண்மை கேளே.

17. உண்மையுடன் சுழுமுனையில் விண்ணென் றூணி உறுதியுடன் ஆராத தீட்சை கேளு.
நன்மையுடன் ஓங்- ரீங்- அங் -உங்கெண் றோதி நாட்டமுடன் பதினாறாம் உருவே செய்தால்
தண்மையுடன் கணபதியும் பிரகா சிப்பார் தானமென்ற சுழுமுனையில் தன்னைப் பார்த்து
நுண்மையுடன் ஓம்நமசி வாய மென்றால் நோக்குமுன்னே பிரமந்தரி சனமுமாமே.

18. ஆமப்பா நமசிவா யநம வென்றே அதன்பின்வய நமசிவய நமசி யென்று
தாமப்பா தலைகாலால் மாறிக் கொண்டு சங்கையுடன் கால்தலையால் மாறிக் கொள்ளு
ஆமப்பா நமசிவய சிவயநம வென்றும் அதன்பிறகு சிவயநம சிவநம வென்றும்;
ஓமப்பா நமசிவய வென்று மாற உண்மையென்ற ஆதாரஞ் சித்தி யாமே.

19. சித்தமுட னைந்தெழுத்தை மைந்தா! நீயும் செம்மையுடன் தலைகால்கால் தலையாய் மாறச்
சுத்தமுடன் ஆதரதே வதைகள் வந்து சொன்னபடி யிருதயத்தில் சுகமாய் நின்று
பத்தியுட னிப்படியே தியானம் பண்ணிப் பதிவாக விபூதியையுந் தளமாய்ப் பூசி
நித்தியமு மிப்படியே செய்து நின்றால் நிலையில்லாத் தூலசடம் நிலைக்கும் பாரே.

20. பாரப்பா கலையறிந்து நிலையில் நின்று பத்தியுட னாதர சூட்சங் கேளு;
நேரப்பா ஓம்கிலிஅங் கென்றென் றோது நிலையறிந்தே அங்கிலிநங்  கென்றென் றோது
காரப்பா வங்கிலிசிங் கென்றென் றோது கருணையுடன் சிங்கிலிவங் கென்றென்றோது
சாரப்பா வங்கிலியங் கென்றென் றோது சலுதியாம் அங்கிலி மங் கென்றென் றோதே.

21. ஓதியபின் வங்கிலிசிங் கென்றென் றோது உண்மையுடன் அங்கிலிசிங் கென்றேன் றோது
நீதியுடன் அங்கிலிமங் கென்றென் றோது நிலையறிந்து மங்கிலிரீங் கென்றென் றோதே
ஆதியுடன் ரீங்கிலிஓ  மென்றென்றோது அப்பனே தலைகாலாய் மாறி யோது
சோதியுடன் சுழுமுனையில் மனக்கண் சார்த்திக் சுத்தமுடன் விபூதியைநீ தரித்துக் கொள்ளே.

22. கொள்ளப்பா விபூதியைநீ தரித்துக் கொண்டு கூர்மையுடன் கால்தலையாய் மாறிக் கொண்டு
சொல்லப்பா ஓங்கிலிரீங் கென்றென் றோது சுத்தமுடன் ரீங்கிலிமங் கென்றென் றோது
வில்லப்பா மங்கிலிசிங் கென்றென் றோது விவரமதாய்த் தோற்றுமடா செய்கை யாவும்;
உள்ளப்பா மங்கிலிங் கென்றென் றோது உத்தமனே சிங்கிலி மங் கென்றென் றோதே

23. ஓதியபின் வங்கிலிசிங் கென்றென் றோது வுத்தமனே சிங்கிலிமங் கென்றென் றோது
நீதியுடன் மங்கிலிநங் கென்றென் றோது நிலையறிந்து நங்கிலியங் கென்றென் றோதே
சோதியுடன் மங்கிலிஓ மென்றென் றோது சுத்தமுடன் ஈராறு தவமுஞ் சித்தி
வீதியென்ற ஆதார மேலா தாரம் விண்ணடங்கிக் கண்ணடங்கி மேவி நில்லே.

24. நில்லப்பா கண்ணடங்கி விண்ணென் றூணி நிலையறிந்து பிராணாயஞ் செய்தால் மைந்தா!
கல்லப்பா தேகமது கால னேது? காலனென்னும் வியாதியெல்லாங் காணா தோடும்
உள்ளப்பா வாசியது முறுதி யாகும் ஓதுகின்ற மந்திரமுஞ் சித்தி யாகும்;
சொல்லப்பா தூலமுடன் சூட்சஞ் சொன்னேன் துலங்கிநின்ற தூலத்தின் சுருங்கங் கேளே.

25. சுருக்கமுடன் ஆதார தூல சூட்சஞ் சொன்னபடி பிராணாயஞ் செய்து கொண்டே
உருக்கமுடன் செபதபங்கள் பூசையாலும் உண்மையா யுனக்குள்ளே கண்டு தேறிப்
பெருக்கமுடன் தானிருந்து சீவான் மாவே பிரணவமாய் நின்றபரம் நீரு மாகி
நெருங்கியந்த அண்டவெளிக் குள்ளே சென்று நேமமுடன் பிராணாயம் நினைவாய்ச் செய்யே.

26. செய்யப்பா பிராணாயம் நினைவாய்ச் செய்யச் சிவசிவா கருமானஞ் செப்பக் கேளு;
பொய்யப்பா போகாது பிராண வாயு பொருந்திநின்று விளையாடும் புதுமை கேளு:
பையப்பா சுழுமுனையில் விண்ணென் றூணிப் பதியாக மூலமதில் வங்கென் பூரி
மெய்யப்பா சுழுனையில்சிங் கென்று ரேசி வேகமுடன் கண்டம் அங் கென்று கும்பே.

27. அங்கென்று கண்டமதில் கும்பித் தேதான் அசையாது வாசிதிரு வாசிதானும்
செங்கமல மானசுழி பிண்டத் தேறும் திரும்பியந்தப் பிண்டமதில் சென்று வாழும்
சங்கையுடன் தன்னகத்தில் தானே தானாய்த் தன்மையுடன் நின்றுவிளை யாடும் வாசி
மங்களமாய்ச் சுழுனையிலே விண்ணென் றூணி மார்க்கமுடன் இகபரமா யிருந்து காணே.

28. காணவே சத்தியவள் தியானம் கேளு கருவாகச் சொல்லுகிறேன் கருத்தாய்க் கேளு;
பூணவே யுரைத்திடுவாய் அங்சிங் கென்று புத்தியுடன் பதினாறு வுருவே செய்து
தோணவே விபூதிதூ ளிதமே பூசிச் சுத்தமுடன் பராசக்தி நிர்த்தஞ் செய்வாள்;
ஊனவே யிப்படியே தியானம் பண்ணி உண்மையுடன் பிராணாய வுறுதி பாரே.

29. உறுதியுள்ள அகத்தியமா முனியே! கேளாய்; உண்மையுள்ள சத்தியைநீ தியானம் பண்ணிப்
பருதிமதி சுடரொளிபோல பஞ்ச கர்த்தாள் பதியறிந்து பிராணாயம் பதிவாய்ச் செய்து
சுருதிபொரு ளானதொரு பொதிகை மேவிச் சுகசீவ பிராணகலை வாசியேறிக்
கருதிமன மொன்றாகிச் சுழியில் நின்று கலக்கமற்ற அமிர்தபானங் கைக் கொள்ளே!

30. பானமென்ற மதியமிர்த பானங் கொள்ளப் பரபிரம மானசுழி வழியுங் காட்டித்
தானமென்ற ஆதார மேலா தாரந் தனையறியும் பிராணாயச் சங்கை சொல்லி
ஞானமென்ற நிலைகாட்டி மூலங்காட்டி நாதாந்த ஆறுமுக நிலையங் காட்டி
மோனமென்ற வடிவேலின் முனையுங் காட்டி முனையறிந்து கலைநிறுத்தி முடிமேல் நில்லே

31. நில்லப்பா சதுரகிரி முடியிற் சென்று நிலையான பொதிகையிலே வாசமாகி
உள்ளப்பா தானாகி விண்ணென் றூணி உன்மனத்தில் நினைத்ததொரு மந்த்ரந் தன்னைச்
சொல்லப்பா தியானமுடன் செபிக்கும் போது சுத்தமுடன் சித்திக்கும் சும்மா நின்று
செல்லப்பா அட்டாங்க யோகத் தேகிச் சிவாயகுரு பாதமதில் தெளிவாய் நில்லே.

32. தெளிவான தெளிவதனால் தன்னைக் கண்டு தீர்க்கமுட னிருந்துதவஞ் செய்ய வென்றும்
அழியாத அனுக்கிரக வரமு மீந்தே ஆர்வமுடன் மயில்வீரன் வடிவேல் கொண்டே
அழியாத அண்டவரை முடிமேற் சென்றே அட்டகிரி பாவதத்திற் கரசுமாகி
ஒழிவாகி அண்டவெளி யெங்குந் தானாய் ஓங்கார வடிவேலை யுவந்தான் முற்றே.