விதியை மாற்றும் சித்தர்களின் ஜீவசமாதி தரிசனம்
உலகில் கடவுளை யாரும் நேரடியாக பார்க்க முடியாது. அதனால். நமது கோரிக்கைகளை கடவுளை அடைய ஒரு கருவியாக இருப்பவர்கள்தான் சித்தர்கள். இன்னும் சொல்லப் போனால், கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன்வந்து நமக்கு அளிப்பார்கள் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.
தமிழகத்தில் மிகப் பிரபலமாக உள்ள கோவில்களில் சித்தர்கள் ஜீவசமாதி அடைந்துள்ளதை அறியலாம். ஜீவசமாதிகளுக்கு சென்று வணங்கினால், நமக்கு உள்ள எல்லா தோஷங்களும் விலகி ஓடும். தீய சக்திகள் நம்மை நெருங்காது. மனம் அமைதி பெரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்வில் வெற்றி நம்மைத் தேடிவரும்.எனவே, ஜீவசமாதிகள் பெரும்பாலும், மூலவருக்கு அருகிலேயே தனிச்சன்னதி கொண்டு இருக்கும். அங்கு சென்று, மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும், நமது எல்லா செயல்களும் வெற்றி பெறுவது நிச்சயம்.
மனிதர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இறைவனிடம் மிகக் கடுமையாக பிரார்த்தனை செய்வதும், வேண்டுகோள் வைப்பதும் தவறல்ல. அதே சமயம் இறைவனிடம் ‘ இதை உடனடியாக நடத்திக் கொடு. அதிசயத்தை செய்து காட்டு ‘ என்றால் வேண்டுமென்றே இறைவன் சோதனைகளை அதிகரிப்பார். எனவே இறைவன் திருவடியை இறுக பற்றிக்கொண்டு ‘ நீ எதை வேண்டுமானாலும் செய், எப்பொழுது வேண்டுமானாலும் செய்.ஆனாலும் என்னைக் கைவிட்டு விடாதே ‘ என்ற ஒரு பரிபூரண பக்தியின் அடிப்படையில் உள்ள பூரண சரணாகதிக்கு ஒரு மனிதன் வந்துவிட வேண்டும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சித்தர்களின் ஜீவா சமாதிகளை தரிசிப்போம் நற்பலன் பெற்று பாவங்களை போக்குவோம்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment