சித்தர்களின் பட்டியல்

 

 சித்தர்களின் பட்டியல்

       

1        அக்கா சுவாமிகள்

2        அருணகிரிநாதர்

3        அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள்

4        அழகண்ண சித்தர்

5        அழகர் சுவாமிகள்

6        இராமதேவர்

7        உரோமரிசி

8        ஒடுக்கத்தூர் சுவாமிகள்

9        கண்ணப்ப நாயனார்

10        கதிர்வேல் சுவாமிகள்

11        கம்பர்

12        கம்பளி ஞானதேசிக சுவாமிகள்

13        கமல முனி

14        கன்னிச் சித்தர்

15        காகபுசுண்டர்

16        காசிபர்

17        காடுவெளி சித்தர்

18        குகை நாச்சியார் மகான்

19        குதம்ப்பைச் சித்தர்

20        குமரகுருபரர்

21        குமாரசாமி சித்தர் சுவாமிகள்

22        குரு பாபா ராம்தேவ்

23        குழந்தையானந்த சுவாமிகள்

24        கோட்டூர் சுவாமிகள்

25        கௌதமர்

26        சக்திவேல் பரமானந்த குரு

27        சதாசிவப் பிரம்மேந்திரர்

28        சதுர்முக சுரேஸ்வர சித்தர்,

29        சந்திரானந்தர்

30        சாந்த நந்த சுவாமிகள்

31        சித்தானந்த சுவாமிகள்

32        சிவஞான பாலசித்தர்

33        சிவஞான பாலைய சுவாமிகள்

34        சிவப்பிரகாச அடிகள்

35        சிறுதொண்டை நாயனார்

36        சுந்தரர்

37        சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள்

38        சுப்பிரமணிய சித்தர்

39        சென்னிமலை சித்தர்

40        சேக்கிழார் பெருமான்

41        சேடயோகியார்

42        ஞானகுரு குள்ளச்சாமிகள்

43        ஞானானந்த சுவாமிகள்

44        தகப்பன் மகன் சமாதி

45        தம்பிக்கலையான் சித்தர்

46        தயானந்த சுவாமிகள்

47        தன்வந்தரி

48        தஷிணாமூர்த்தி சுவாமிகள்

49        திரிபலாதர சுரேஸ்வர சித்தர்,

50        திரி மதுர நீற்று முனீஸ்வரர்

51        திருமூலம் நோக்க சித்தர்

52        நடன கோபால நாயகி சுவாமிகள்

53        நந்தி சித்தர்

54        நாகலிங்க சுவாமிகள்

55        நாரதர்

56        நாராயண சாமி அய்யா

57        பகவந்த சுவாமிகள்

58        பஞ்சமுக சுரேஸ்வர சித்தர்

59        பட்டினத்தார்

60        பதஞ்சலி சித்தர்

61        பரமஹம்ச யோகானந்தர்

62        பரமாச்சாரியார்

63        பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள்

64        பாம்பன் சுவாமிகள்

65        புண்ணாக்கீசர்

66        புலத்தியர்

67        பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி

68        பெரியாழ்வார் சுவாமிகள்

69        போதேந்திர சுவாமிகள்

70        மகான் படே சுவாமிகள்

71        மண்ணுருட்டி சுவாமிகள்

72        மாயம்மா

73        மார்க்கண்டேயர்

74        முத்து வடுகநாதர்

75        மெய்வரத் தம்பிரான் சுவாமிகள்

76        மௌன சாமி சித்தர்

77        யுக்தேஸ்வரர்

78        யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்)

79        ரமண மகரிஷி

80        ராகவேந்திரர்

81        ராணி சென்னம்மாள்

82        ராமகிருஷ்ணர், சாரதாதேவியார்

83        ராமானுஜர்

84        ரெட்டியபட்டி சாமிகள்

85        லஷ்மண சுவாமிகள்

86        வரதர்

87        வல்லநாட்டு மகாசித்தர்

88        வள்ளலார்

89        வன்மீக நாதர்

90        வான்மீகி

91        விசுவாமித்திரர்

92        வேதாந்த சுவாமிகள்

93        ஜட்ஜ் சுவாமிகள்

94        ஜமதக்கினி

95        ஷீரடி சாயிபாபா

96        ஸ்கந்த பதுமபலாதி சித்தர்,

97        ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள்

98        அகத்தியர்

99        அகத்தியர்

100        அகப்பேய் சித்தர்

101        அழுகண்ணச் சித்தர்

102        அறிவானந்தர்

103        இடைக்காட்டுச் சித்தர்

104        இடைக்காட்டு சித்தர்

105        இராமதேவ சித்தர்

106        இராமலிங்க சுவாமிகள்

107        இராம தேவர்

108        உரோமரிஷி

109        எனாதிச் சித்தர்

110        கடுவெளிச் சித்தர்

111        கணபதி தாசர்

112        கமல முனி

113        கருவூர்சித்தர்

114        கருவூரார்

115        காக புசுண்டர்

116        காரைச் சித்தர்

117        காளங்கி நாதர்

118        காளங்கி நாதர்

119        காளைச் சித்தர்

120        குடைச் சித்தர்

121        குதம்பைச் சித்தர்

122        கைலயக் கம்பளிச் சட்டை முனி

123        கொங்கணர்

124        கொங்கண சித்தர்

125        கோரக்கர்

126        கோரக்கர்

127        சட்டைமுனி

128        சட்டை முனி்

129        சண்டேசர்

130        சிவவாக்கியர்

131        சிவவாக்கியர்

132        சுந்தரானந்தர்

133        சூரியானந்தர்

134        சூரியானந்தர்

135        சோதி முனி

136        டமரகர்

137        தன்வந்திரி

138        திருமூலர்

139        திருமூலர்

140        தேரையர்

141        தேரையர்

142        நந்தீசர்

143        பட்டினத்தார்

144        பத்திரகிரியார்

145        பதஞ்சலியார்

146        பாம்பாட்டி சித்தர்

147        பாம்பாட்டி சித்தர்

148        பீரு முகமது

149        புண்ணாக்கீசர்

150        புலத்தியர்

151        புலிக் கையீசர்

152        புலிப்பாணி

153        புலிப்பாணி

154        பூகண்டம்

155        பூரணானந்தர்

156        பூனைக் கண்ணர்

157        போகர்

158        மச்சமுனி

159        மச்ச முனி

160        மதுரை வாலைச் சாமி

161        வரரிஷி

162        வல்லப சித்தர்

163        வாம தேவர்

164        வாலைகுருசுவாமி

165        வான்மீகர்

166        வியாசர்

167        கடையிற் சுவாமிகள்

168        சித்தானைக்குட்டி சுவாமிகள்

169        சிவயோக சுவாமி

170        சிவாச் சித்தர்

171        செல்லப்பா சுவாமி்

172        பரமகுரு சுவாமிகள்

173        பெரியானைக்குட்டி சுவாமிகள்

174        யாழ்ப்பாணத்துச் சுவாமி

சூரியானந்தர்

சூரியானந்தர் ஒரு சித்தர். 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவரால் பாடப்பட்டவை இரண்டு நூல்கள். சூரியானந்தர் பதின்மூன்று, சூரியானந்தர் இருபத்தைந்து என்பன அவை. இரண்டும் இரசவாதம் பற்றிக் கூறுகின்றன. உடல் உறுப்புகளால் செய்யப்படும் பயிற்சிகளை இவர் ‘தீட்சை’ என்கிறார். உடலின் உள்ளுறுப்புகளைத் தூய்மை செய்வதை இவர் ‘சவுக்காரம்’ என்று குறிப்பிடுகிறார். பாடல் எடுத்துக்காட்டு சொல்வது என்ன ரேசகத்தை வெளிவிடாதே துடியான பூரகத்தைப் பின்னிடாதே வெல்வது என்ன கும்பகத்தை அடிவிடாதே மேலேற்று மாத்திரையை மறந்திடாதே செல்வது என்ன கற்பகத்தை மறந்திடாதே செந்தூரம் சேர்க்கையிலே சிதறிடாதே கொல்வது என்ன அமுர்து அயிலே பறக்கும் இந்த குளிகைக்குச் சாரணை செய் குணமும் மாற்றே


சூத்திரம்

1. சீர்கொண்ட அருமறையின் பொருளாய் நின்ற
தெட்சிணா மூர்த்தியுடைய பாதங் காப்பு:
பேர்கொண்ட சூத்திரமே பதின்மூன் றுக்குள்
பிரித்துவைப்பேன் பூவழலை பெருமை யெல்லாம்
நீர்கொண்ட வூசரத்தின் மகிமை தன்னை
நிசமாகச் சொல்லாமல் மறந்து விட்டார்
ஆர்கொண்ட வேணியனா ருமக்குச் சொன்னார்
ஆத்தாளு மடியேனுக் கறைந்திட்டாளே.

2. அறைந்திட்ட வகையேது வுப்பே ஆதி
ஆகாச விந்துவினால் செனித்த பிண்டம்
மறைந்திட்ட வுப்பதுவே காரங் காரம்
மண்ணான வுப்பதுவே சாரஞ் சாரம்
கறைந்திட்ட வூசருக்குக் கேற்ற வுப்பைக்
காணாமற் போனதினாற் கலக்க மாச்சு
இறைந்திட்ட மலசலமாய்க் காணலாகும்
இந்தவிரண் டோரிடத்தி லிருக்கும் பாரே.

3. இருக்கின்ற வுப்பினுக்கு மூலா தாரம்
இந்துவொன் றிரவியொன்று வன்னி யொன்று
பெருக்கின்ற வீசனுக்குச் சூட்ச முந்தான்
பிருதிவியே தூலமெனப் பேச லாகும்
கருக்கொண்ட யோனியிலே நாலு பேதம்
கருதையிலே யெழுதோற்றங் காண லாகும்
உருக்கொண்ட சீவசெந்தும் அனேக முண்டாம்
உற்றுப்பா ரண்டபிண்ட முண்மை தானே.

4. தானாக நின்றதுவே பாரு மாச்சு
சகலசித்துப் பிரகிருதி யுயிரு மாச்சு
வானாகி நின்றதுவே சாட்சி யாகும்
மன்னுயிரெல் லாஞ்சோதி மயமுமாச்சு
ஊனாகப் பிறந்தசடம் பிறவா முத்திக்
குதவியல்லோ பிரகிருதி யோனி யோனி
கோனாக நின்றகுரு வுபதே சத்தாற்
குருபுகுந்தே யுப்பெடுத்துக் கொள்ளுவாயே.

5. கொள்ளுவார் முப்பூவின் முதலா மங்கம்
கூர்ந்துபா ரூசரத்தைக் கொள்கிக் கொண்டு
விள்ளுவார் யோனியின் படிவி டாமல்
மேலேற்ற மேலுதவி மேவிற் றானால்
துள்ளுவா ரிந்துப்புச் சிவமு மாச்சு
துருசுப்புப் பணவிடையாற் றொந்த மேற்றித்
தள்ளுவார் பிரளயமோர் கோடி காலம்
சகலசித்தும் மூலவுப்புத் தன்னி லாச்சே.

6. ஆச்சப்பா மூலவுப்புக் கஞ்சு தீட்சை
ஆதியுப்புக் கப்படியே தீட்சை யாகும்?
மூச்சப்பா தசதீட்சை யார்தான் செய்வார்?
மூலகுரு செய்வார்பின் னார்தான் செய்தார்?
ஏச்சப்பா கொங்கணவர் தீட்சை மார்க்கம்
ஏற்றிவிட்டார் முப்பத்தி ரண்டா மென்று
பேச்சப்பா பேசினதி லாவ துண்டோ
பிண்டவுப்புக் கேழுவிதம் பேச லாமே.

7. பேசுகின்ற வுப்பினுக்கு மேலே அங்கம்
பெருமையுள்ள சித்தர்கள் தாம் செய்யும் மார்க்கம்
வீசுகின்ற சூதத்தின் துறைக ளெல்லாம்
மிஞ்சவில்லை மூன்று நாலஞ்சா னாலும்
பாசையினாற் சொன்னார்கள் வெளிதோன் றாது
பாலனுக்குந் தோன்றுமிந்த நூலை பார்த்தால்
கூசல்மிஞ்சிப் போடுதென்று என்றன் நூலைக்
குகைக்குள் மறைத் திட்டதனாற் கூறொண் ணாதே.

8. ஒண்ணான நூலாகு மிருநூற் றைந்தில்
ஓதிவைத்த கருத்தெரியு மிருபத் தைந்திற்
கண்ணாகு மிந்த நூல் பதின்மூன் றுக்குள்
கருவையொரு கற்பமுறை காட்டி வைத்தேன்
வண்ணானை யறியாத பேருக் கெல்லாம்
வாதியென்ற பேரேது வாத மேது?
பெண்ணாணின் சுரோணிதமும் விந்துங் கண்டால்
பேரான பூரணத்தின் பெருமை தானே.

9. பெருமையென்ற காயசித்தி பண்ணா விட்டாற்
பேரான அடியோடு முடியும் போச்சு
அருமையென்ற குண்டலிக்குள் வராகி பூசை
அப்பனே கண்டமதி லங்கெண் றூணு
புருவமையத் துள்ளேவும் மென்று கும்பி
போதமென்ற மவுன வித்தை கைக்குள் ளாச்சு
தருமவித்தை பிரகிருதி மூச்சா டாது
சகத்திரத்தெண் மலர்ப்பதத்திற் சார்ந்து நில்லே.

10. நில்லாத மூலிகையாற் காய சித்தி
நிட்டைமவு னத்தாலே யோக சித்தி
கொல்லாத மூலமதில் அபான சுத்தி
கூடாம லிருந்துவிட்டா லேது முத்தி?
சொல்லாத வீசனுப்பு மதிசூ தத்திற்
சூட்டினேன் வெள்ளை யென்ற சூடன் வித்தை
எல்லாரு மிருந்தவிதம் பாட மாட்டார்
இதமான சூதகத்தின் வெடியுப் பாச்சே.

11. உப்பான வெடியுப்புச் செயநீ ராலே
ஒருகோடி வித்தையெல்லா மாட லாகும்
அப்பான கல்லுப்பு நீரி னாலே
ஆடலாந் துருசினுடை அங்க மெல்லாம்
செப்பாத யோனிருது செந்நீர் மட்டாற்
சிவன் வேறு தானுண்டேயிவனல் லாமல்
தப்பாமற் செய்தென்ன சவுக்கா ரந்தான்
சட்டிமுதற் பவுரணையுந் தாக்கிப் பாரே.

12. தாக்கிப்பா ராகாசஞ் சருவ சாட்சி
சதாநித்தம் அந்தரமே சாடி நின்றால்
நோக்கிப்பார் வாயுலயப் படுவ தற்கு
நூதனமாய் வன்னியதிற் கூட வேணும்
மூக்கிற்றா னோடுவது பிராண வாயு
மூலமெனும் வளையமது நகாரந் தன்னைத்
தூக்கித்தான் விட்டவர்க்கு யோக மெய்தும்
சூரிய னந்தனிவை சொல்லும் நூலே.

13. சொல்வதென்ன ரேசகத்தை வெளிவி டாதே
துடியான பூரகத்தைப் பின்னி டாதே
வெல்வதென்ன கும்பகத்தை யடிவி டாதே
மேலேற்று மாத்திரையை மறந்தி டாதே
செல்வதென்ன கற்பத்தை மறந்தி டாதே
செந்தூரஞ் சேர்க்கையிலே சிதறி டாதே
கொல்வதென்ன அமூதயலேபிறக்கு மிந்தக்
குளிகைக்குச் சாரணைசெய் குணமு முற்றே.

1 எண்ணா யிரத்து லிருநூறு மந்திரம்
அண்ணார் சொன்னாரடியே னறிந்தேன்
சொன்னார் சிவப்புச் சோர்பச்சை ரூபம்
வண்ணா னறிவான் வகாரத் திரையமே

என்று திருமூலர் திருமந்திரத்திற் சொல்லப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ பாஸ்கர ராயர்

 

பாஸ்கர ராயர் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள பாகா என்னும் ஊரில் கி.பி., 1690ல் பிறந்தார். தந்தையின் பெயர் கம்பீர ராயர். தாயாரின் பெயர் கோனாம்பிகா. விச்வாமித்ர கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்த காலம் 1690 முதல் 1785 வரை இருக்கலாம் என்று உத்தேசமாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். தந்தை கம்பீரராயர் பெரிய பண்டிதர். ஒழுக்க சீலர். சாஸ்திரங்களையும், புராணங்களையும் கரை கண்டவர். அவர் தமது திருக்குமாரனுக்கு இளவயதிலேயே சரஸ்வதி உபாசனை செய்து வைத்தார். பின்னர், காசிப் பட்டணத்திற்கு அவரை அழைத்துச் சென்று நரசிம்மானந்த நாதர் என்னும் பெரியாரிடம் வித்தியாப்பியாசத்திற்காக விட்டுவைத்தார். அவரிடம் தமது ஏழாவது வயதிற்குள்ளேயே சகல வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தார். மகா வித்வானான சபேச்வரர் என்ற அரசரின் நன்மதிப்பைப் பெற்றார். பின்னர் கங்காதர வாஜ்பேயீ என்பவரிடம் கௌடதர்க்க சாஸ்திரத்தைப் பயின்றார். அதிகமாகப் பழக்கத்திலில்லாத அதர்வண வேதத்தை முறையாகக் கற்றுக் கொண்டு பிறகு அதை சொல்லித் தந்தார். தேவி பாகவதத்தைப் பிரவசனம் செய்து அதன் புகழை ஓங்கச் செய்தார். பாஸ்கர ராயர் ஆனந்தி என்ற பெண்ணை மணந்து கொண்டார். தங்களுக்குப் பிறந்த குழந்தைக்கு பாண்டுரங்கன் என்று பெயரிட்டார்.

இவருக்கு வித்யையை <உபதேசம் செய்து, பாஸுராநந்த நாதர் என்று தீட்சா நாமம் அளித்தவர் சிவதத்த சுக்லர் என்ற மகான். பின்னர் பாஸ்கரராயர் தம் மனைவி ஆனந்திக்கு வித்யையை உபதேசம் செய்து பத்மாவதி அம்பிகா என்ற தீட்சா நாமத்தை அளித்தார். கூர்ஜர தேசத்திற்குச் சென்று வல்லபாசாரிய மதத்தைச் சார்ந்த வித்வான் ஒருவரை வாதத்தில் வென்றார். அடுத்து மத்வ மதத்தைச் சார்ந்த பண்டிதர் ஒருவரையும் வெற்றி கண்டு, அவரது <உறவினர் பெண் பார்வதியை இரண்டாம் தாரமாக மணந்து கொண்டார். காசியில் தங்கியிருந்தபோது இவர் பெரியதொரு சோமயாகம் செய்ததாகத் தெரிகிறது. பின்னர் சந்திரசேனன் என்ற மன்னனின் வேண்டுகோளுக்கிணங்கி, கிருஷ்ணா நதிக்கரையில் சில காலம் வாழ்ந்து வந்தார். அதற்குப் பிறகு தஞ்சை மன்னர் இவரை அன்புடன் அழைக்கவே, தமிழகத்திற்கு வந்து குடியேறினார். இவரது குருவான கங்காதர வாஜ்பேயீ, அப்போது காவிரியின் தென்கரையில் <உள்ள திருவாலங்காட்டில் வசித்து வந்ததால் அவர் அருகிலேயே வாசம் செய்ய பாஸ்கரராயர் விரும்பியிருக்க வேண்டும். அதற்கிணங்க தஞ்சை மன்னரும், திருவாலங்காட்டுக்கு வடகரையில் உள்ள செழிப்பான கிராமத்தை மகானுக்கு அளித்திருக்கிறார். அது பின்னர் பாஸ்கரராஜபுரமாக மாறியிருக்கிறது.

பாஸ்கரராஜபுரத்தில் வெகுகாலம் வசித்து, அம்பாளின் உபாசனையில் திளைத்து, தமது இறுதிக்காலத்தை மத்யார்ஜுனம் என்ற திருவிடைமருதூரில் கழித்த பாஸ்கரராயர், அங்கு தமது 95-வது வயதில் தேவி சரணங்களை சென்றடைந்தார். அவர் காலத்திற்குப் பிறகு, அவரது துணைவியார் பாஸ்கரராஜபுரத்தில் பாஸ்கரேச்வர் ஆலயத்தை நிர்மாணித்திருக்கிறார். இந்த ஆலயம் கும்பகோணம் - மயிலாடுதுறை வழியில் உள்ள  திருவாலங்காடு அருகே அமைந்துள்ளது. ஸ்ரீவித்யை உபாசகர்களில் தலைசிறந்தவரான பாஸ்கரராயர் அம்பாளின் வரப்பிரசாதத்தைப் பூர்ணமாகப் பெற்றிருக்கிறார். நமது சநாதன வைதீக மார்க்கத்தில் அசையாத பற்றுக் கொண்டிருந்தவர். குப்தவதீ என்னும் தமது சப்தசதீ வியாக்கியானத்தில் ஆதிசங்கர பகவானை வெகுவாகத் தோத்திரம் செய்துள்ளார். பாஸ்கரராயர் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் பல எழுதியுள்ளார் என்றும், அவற்றில் பெரும்பகுதி தற்போது கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார்கள். வேதாந்தம், மீமாம்ஸை, வியாகரணம், நியாயம், சந்தஸ், காவியம், சுருதி, ஸ்மிருதி, புராணம், தோத்திரங்கள், மந்திர சாஸ்திரம் முதலிய துறைகளில் இவர் இயற்றியுள்ள நூல்களை ஆராய்ந்தோர், இம்மகானுக்குத் தெரியாத வித்தையோ, சாஸ்திரமோ இல்லை என்று தீர்மானமாகச் சொல்கிறார்கள். மந்திர சாஸ்திர ரகசிய நுணுக்கங்கள் பற்றி அவர் அறியாதது ஒன்றுமேயில்லை. மந்திர சாஸ்திரத்திலேயே பதினேழு நுண்ணிய ஆராய்ச்சி நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

இவற்றில் ஒன்றுதான் சௌபாக்ய பாஸ்கரம் என்ற லலிதா சகஸர நாமம் விளக்க உரை நூல். இவர் லலிதா சகஸ்ரநாமத்திற்கு விளக்க உரை எழுதியதற்கு ஒரு சிறப்பு காரணம் உண்டு. ஒரு முறை இவர் திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மன் முன் நின்று லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்து கொண்டிருந்தார். இவர் பாராயணம் செய்ததை கேட்டு மகிழ்ந்த அம்பாள், இவர் முன் தோன்றி, இவருக்கு ஆசிர்வாதம் தந்து இதற்கு விளக்கவுரை எழுதும் படி கூறினாள். அம்மன் கூறியதை சிரமேற்கொண்ட பாஸ்கரராயர் திருக்கோடிக்காவல் என்ற கோயிலில் லலிதா சகஸ்ர நாமத்தின் விளக்க உரையை அரங்கேற்றி அதற்கு "சௌபாக்ய பாஸ்கரம் என்ற நாமம் சூட்டினார். அவர் இந்த பாஷ்யத்தைப் பன்னிரெண்டு பாகங்களாப் பிரித்து ஒவ்வொரு பாகத்திற்கும் சூரியனுடைய பன்னிரண்டு கலைகளின் பெயர்களை வரிசையாகக் குறிப்பிட்டிருக்கிறார். தமது பாஷ்யத்தின் முன்னுரை சுலோகம் ஒன்றில் பாஸ்கரராயர், கிழக்கில் பிரம்ம புத்திரா நதி ஓடும் காமரூபம் என்ற அஸ்ஸாம், மேற்கில் சிந்து நதி ஓடும் காந்தார தேசம், தெற்கில் ராமரால் கட்டப்பட்ட சேது, வடக்கில் பனி மூடிய கேதாரம், இவற்றுக்கு இடையே உள்ள பிரதேசத்தில் வாழும் வித்வான்களுக்கு இந்த எனது லலிதா சகஸ்ரநாம வியாக்யானம் மகிழ்ச்சியைத் தரட்டும் என்று கூறியுள்ளார்.

பாரதம் பெற்றெடுத்த மாமேதைகளில் ஒருவர் பாஸ்கரராயர். அவரது மகிமைகளை அறியும்போது, ஆதிசங்கர பகவத்பாதருக்கும், அப்பய்ய தீட்சிதருக்கும் அடுத்தபடியாக இந்த மகானை மதிப்பிடத் தோன்றும். வித்யையின் உட்பொருளையும், மந்திர சாஸ்திர ரகஸ்யங்களையும் மிக ஆழமாக அறிந்திருந்த இவருக்கு அடுத்தபடியாகச் சொல்ல வேண்டுமானால் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான நாதஜோதி முத்து சுவாமி தீட்சிதரைத்தான் குறிப்பிட வேண்டும். காசியிலிருந்தபோதே பாஸ்கரராயர் வாமாசர சம்பிரதாயப்படி தேவி உ<பாசனை செய்து வந்திருக்கிறார். இதை அங்குள்ள பண்டிதர்கள் ஆட்சேபித்திருக்கிறார்கள். அவரை அவமானப்படுத்த எண்ணம் கொண்டு, அவர் செய்த மகா யாகத்திற்குச் சென்று, மந்திர சாஸ்திர சம்பந்தமான கேள்விகளை சரளமாகக் கேட்டு அவரை மடக்கப் பார்த்தனர். ஆனால், அவர்களது முயற்சி பலிக்கவில்லை. எல்லா கேள்விகளுக்கும் பாஸ்கரராயர் சரியாக பதில் சொன்னார். அப்போது அங்கு இருந்த குங்குமானந்த ஸ்வாமி என்ற மகான், பண்டிதர்களை நோக்கி, பாஸ்கரராயரின் தோளில் அம்பாள் அமர்ந்து விடையளித்து வருவதால் நீங்கள் தோற்பது நிச்சயம், பேசாமல் இருங்கள் என்று எச்சரித்தார். அப்போது நாராயண பட்டர் என்ற பண்டிதர், பாஸ்கரராயரின் தோளில் அம்பாள் பிரசன்னமாயிருப்பதைத் தரிசனம் பண்ணவேண்டும் என்று விரும்பவே பாஸ்கரராயர் காலையில் அம்பிகைக்குச் செய்த அபிஷேக நீரால் நாராயண பட்டரின் கண்களைத் துடைத்தார் குங்கும சுவாமி. அடுத்த கணம் பட்டரின் கண்களுக்கு, பாஸ்கரராயரின் தோளின் மீது அமர்ந்திருந்த பராசக்தி தரிசனம் அருளினாள். நாராயண பட்டர் பரவசத்தில் மூழ்கி, கண்ணீர் உகுத்தபடி, மகானின் காலில் விழுந்து வணங்கினார். இதர பண்டிதர்களும் அறியாமையால் செய்த தங்கள் தவற்றுக்கு பாஸ்கரராயரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள்.

பாஸ்கர ராயரின் வாழ்க்கையில் மற்றொரு நிகழ்ச்சியும் கூறப்படுவது உண்டு. அவர் திருவிடைமருதூர் மகாதானத் திண்ணையிலுள்ள தூணில் சாய்ந்து கொண்டு <உட்கார்ந்திருப்பது வழக்கம். அப்போது தினமும் வேப்பத்தூரிலிருந்து ஒரு சந்நியாசி அந்த இல்லத்தைக் கடந்து கொண்டு மகாலிங்கசுவாமி தரிசனத்திற்குப் போவார். ஆனால், பாஸ்கர ராயர் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செய்யமாட்டார். இது அவ்வூர் மக்களுக்கு சற்று வியப்பை ஊட்டியது. சிலர் ஆத்திரமடைந்தார்கள். ஒருநாள் கோயிலில் பாஸ்கர ராயரும் அந்த சந்நியாசியும் சந்தித்துக் கொண்டனர். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சிலர், துறவியிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதற்கு பாஸ்கரராயரிடம் விளக்கம் கேட்டனர். அப்போது பாஸ்கரராயர், இல்லறத் தர்மத்தின்படி தாம் சந்நியாசிக்கு நமஸ்காரம் செய்திருந்தால், அவரது தலை சுக்கு நூறாக உடைந்திருக்கும் என்றும், அவரது உயிரை காப்பாற்றுவதற்காகவே அவ்வாறு செய்ததாகவும் கூறினார். பின்னர் அதை நிரூபிப்பதற்காக அத்துறவியின் தண்டம், கமண்டலம், காஷாய வஸ்திரம் முதலியவற்றை ஓரிடத்தில் வைத்து அவற்றிற்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து எழுந்தார். அடுத்த கணம் அவை மூன்றும் சுக்கு நூறாக உடைந்து சிதறின. அதைக் கண்டதும் அத்துறவி பாஸ்கரராயரின் மகிமையை உணர்ந்தார். பொது மக்களும் அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர்.

வால்மீகர்

இராமாயணம்  பாடிய  வால்மீகர்  வேறு.  தென்னாட்டில்  சித்தராக விளங்கியவர் வேறு.

தேற்றமுடன் வால்மீகர் என்ற சித்து
தெளிவாக மார்க்கமது சொல்வேன் பாரீர்
மாற்றமயம் நீக்கியல்லோ வையத்தில்
வளமையுடன் வெகுகாலம் இருந்த சித்து
ஆற்றலுடன் வால்மீகி ராமாயணத்தை
அவனிதனில் மாந்தருக்குச் செய்திட்டாரே.
போகர் ஏழாயிரம் - 5834

இவர்  புரட்டாசி  மாதம்  அனுஷ  நட்சத்திரத்தில் பிறந்தவர். வேடர் குலத்தவர். இவரது சமாதி எட்டிக்குடியில் உள்ளது.

 சூத்திர ஞானம்

1. இருள் வெளியாய் நின்றசிவ பாதம் போற்றி
எழுத்ததனின் விவரத்தை விரித்துச் சொல்வேன்;
அருவுருவாய் நின்றதுவே எழுத்த தாகும்
ஆதியந்தம் அண்டபிண்ட மதுவே யாகும்;
திருவுருவாய் ரவிமதியாய் நின்ற ரூபம்
சிவசத்தி திருமாலின் ரூப மாகும்;
வருமுருவே சிவசத்தி வடிவ மாகும்;
வந்ததிலும் போனதிலும் மனத்தை வையே.

2. வந்ததுவும் போனதுவும் வாசியாகும்;
வானில்வரும் ரவிமதியும் வாசியாகும்;
சிந்தைதெளிந் திருப்பவனா ரவனே சித்தன்;
செகமெலாஞ் சிவமென்றே யறிந்தோன் கித்தன்
நந்தியென்ற வாகனமே தூல தேகம்:
நான்முகனே கண்மூக்குச் செவுநாகாகும்;
தந்திமுகன் சிவசத்தி திருமூச் சாகும்;
தந்தைதாய் ரவிமதியென் றறிந்து கொள்ளே.

3. அறிந்து கொள்ளு பூரகமே சரியை மார்க்கமே
அடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம்;
பிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம்;
பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம்;
மறிந்துடலில் புகுகின்ற பிராண வாயு
மகத்தான சிவசத்தி அடங்கும் வீடு;
சிறந்துமனத் தெளிவாகிச் சேர்ந்தோன் சித்தன்
சிவசிவா அவனவனென் றுரைக்க லாமே.

4. ஆமப்பா வுலகத்தில் பெருநூல் பார்த்தோர்
அவரவர் கண்டதையெல்லாம் சரிதை யென்பார்;
ஓமப்பா கல்செம்பைத் தெய்வ மன்றே
உருகுவார் பூசிப்பார் கிரியை யென்பார்
வாமப்பா யோகமென்று கனிகாய் தின்று
வாய்பேசா வூமையைப்போல திரிகுவார்கள்;
காமப்பா ஞானமென விண்டு மேலும்
காக்கைபித்தன் மிருகம்போல் சுற்றுவாரே.

5. சுற்றுவார் பெருநூலைப் பார்த்துப் பார்த்துத்
தூடிப்பா ருலகத்தில் சிற்சில் லோர்கள்!
தெற்றுவா ரவர்பிழைக்க அனேக வேடம்
தேகத்தி லணிந்துகொண்டு திரிகு வார்கள்:
பற்றுவார் குருக்களென்பார் சீட ரென்பார்
பையவே தீட்சைவைப்பார் தீமை யென்பார்.
கத்துவார் திரிமூர்த்தி தாமே யென்று
காரணத்தை யறியாத கசடர் தானே;

6. தானென்ற வுலகத்தில் சிற்சில் லோர்கள்
சடைபுலித்தோல் காசாயம் தவா டம் பூண்டு
ஊனென்ற வுடம்பெல்லாம் சாம்பல் பூசி
உலகத்தில் யோகியென்பார் ஞானியென்பார்;
தேனென்ற சிவபூசை தீட்சை யென்பார்;
திருமாலைக் கண்ணாலே கண்டோ மென்பார்;
கானென்ற காட்டுக்கு ளலைவார் கோடி
காரணத்தை யறியாமல் கதறுவாரே.

7. கதறுகின்ற போகளையா கோடா கோடி;
காரணத்தைக் கண்டவர்கள் கொஞ்சம் கொஞ்சம்
பதறுகின்ற பேர்களெல்லாம் பராப ரத்தைப்
பற்றிநின்று பார்த்தவர்கள் சுருக்க மப்பா!
உதறுகின்ற பேர்களெல்லா முலகத் துள்ளே
உதித்தகலை தம்முள்ளே யறிய மாட்டார்;
சிதறுகின்ற பேர்களைப்போல சிதறி டாமல்
சிவசத்தி வரும்போதே தன்னில்நில்லே.

8. நில்லென்ற பெரியோர்கள் பாடை யாலே
நீடுலகம் தன்னுள்ளே நாலுவேதம்
வல்லமையாய்ச் சாத்திரங்க ளிருமூன் றாக
வயிறுபிழை புராணங்கள் பதினெட் டாகக்
கல்லுகளைக் கரைப்பதுபோல் வேதாந் தங்கள்
கட்டினா ரவரவர்கள் பாடையாலே;
தொல்லுலகில் நாற்சாதி யனேகஞ் சாதி
தொடுத்தார்க ளவரவர்கள் பிழைக்கத்தானே.

9. தானென்ற வுலகத்தி லில்லா விட்டால்
தன்பெருமை யாலழிந்து சகத்தில் வீழ்வார்;
ஊனென்ற வுடம்பெடுத்தா லெல்லாம் வேணும்;
உலகத்தி லவரவர்கள் பாடை வேணும்
மானென்ற சிவகாமி சிவனுங் கூடி
மாமுனிவர் முகம் பார்த்து மறைநூல் சொன்னார்;
தேனென்ற சிவகாமி யருளினாலே
திரட்டினார் வெகுகோடி தேச பாடை.

10. தேசத்தின் பாடைதனை யறிந்தி டாமல்
தெளிவாகத் தாமுரைப்பார் பாடை பார்த்தோர்;
ஆசிப்பா ருலகத்தில் கண்டதெல்லாம்;
ஆச்சரியந் தனைக்கண்டு மறந்து போவார்
வாசிதனை யறியாத சண்டி மாண்பர்
வார்த்தையினால் மருட்டிவைப்பார் வகையி லாமல்;
நாசிநுனி யதனடுவில் சிவத்தைக் கண்டோர்
நான்முகனும் திருமாலும் சிவனுந் தாமே.

11. சிவசிவா பதினெண்பேர் பாடற் கெல்லாம்
திறவுகோல் வால்மீகன் பதினாறாகும்;
சிவம்பெத்த சித்தரேல்லா மென்னூல் பார்த்துச்
சிவனோடே கோள் சொன்னார் சினந்தான் நாதன்;
அவமாகிப் போகாமல் சிவனுத் தார
அருளினால் திறந்துசொன் னேன் உலகுக் காக;
நவமான நவக்கிரகந் தன்னுள் ளேயே
நாக்குவாய் செவிமூக்கு மத்திக் கப்பால்.

12. நாக்குவாய் செவிமூக்கு மத்திக் கப்பால்
நடுவீதி குய்யமுதல் உச்சி தொட்டுத்
தாக்குவாய் அங்கென்றே அதிலே முட்டுத்
தாயாரைப் பூசித்து வேதம் ஓது;
வாக்குவாய் அசையாமல் மவுனங் கொண்டு
வாசிவரு மிடத்தில் மனம் வைத்துக் காத்து
நீக்குவாய் வாசியொடு மனந்தான் புக்கு
நினைவதனி லடங்கிவரும் வரிசை காணே:

13. காணரிதே யெவராலு மிருசு வாசம்:
காண்பவனே சிவசித்த னவனே யாகும்;
பூணரிதிவ் வுலகத்தி லிந்நூல் கிட்டில்
பூலோக சித்தனென வுரைக்க லாகும்.
காணரிது சிவசக்தி திருமூச் சாகும்;
காட்டாதே மூடருக்மே யிந்நூல் தன்னை;
தோணரிது விழிமயக்கம் சும்மாப்போமே
சொல்லரிய சூட்சுமத்தைச் சொன்னே னப்பா!

14. சூட்சமிந்நூல் சொல்லுகிறேன் வாசி காண;
சூட்சாதி சூட்சத்தைத் துறக்கப் போகா;
சாட்சியில்லை துணையில்லை கேள்வி யில்லை;
சந்தேக மொன்றுமில்லை விழியைக் காணக்
காட்சியென்ன கற்பகத்தில் வசிக்கு மாப்போல்
காரணத்தைக் கண்ணாலே கண்டி ருக்க
ஆட்சிதரு முமையாளப் படியே கண்டேன்;
ஆனந்தத் திருக்கூத்தின் நடக்கை காப்பே.

15. காப்பதற்குப் பத்தியத்தைச் சொல்லக் கேளு;
காய்கனிகள் பஞ்சரசம் பரமான் னங்கள்
ஏற்கையுட னுண்டுகொண்டு சிவத்தைக் காத்தே
என்மகனே சித்தருடைக் குருநூல் பாராய்;
ஆத்துமத்துக் கழிவில்லா திருக்க வேணும்;
அவரவர்கள் நித்யகர்மம் நடக்க வேணும்;
தீர்க்கமுட னின்றவர்க்கு வாசி சித்தி
சிறப்புடனே பதினாறும் பலிக்குந் தானே.

16. தானவனா யிருக்கவென்றால் வாசி வேணும்;
தனக்குள்ளே தானிற்க இடமும் வேணும்;
வானவனாய் நின்றவர் கட் கெல்லாஞ் சித்தி
வானக்குள் மனமிருக்க மதிபோல் காணும்
தேனவனாஞ் சித்தருக்குத் தெவிட்டா மூலி
சிரசப்பா வுடலுக்குப் பதியே யாகும்
கோனவனா யிருக்கவென்று குறியைச் சொன்னேன்
குவலயத்தில் பதினாறுங் குறுகத் தானே.

போகர்

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு!!



போகர் பற்றி சிந்திக்கும் பொழுது பாமரருக்கும் கூட பளிச்சென்று புலப்படும் ஒரு பெயர் இது. போகன் தமிழ் குடும்பத்தில் விஸ்வகர்மா மரபில் வந்த மகா சித்தன். தனது தாயின் தொண்ணூற்று மூன்றாவது வயதில் இருபத்தி ஓராவது குழந்தையாக 7923 ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்தவர். 

தனது பதினான்காம் பிராயத்தில் பிறப்பால் சீனரான தனது குருவான காலாங்கி நாதரால் ஆட்கொள்ளப்பட்டவர். வித்தகர்களை கொண்ட படைப்பாளிகளைக் கொண்ட பெரிய குடும்பத்தில் அவதரித்த கருணை கடல். 
நந்தியாகவும் சுப்பிரமணியராகவும் கிருஷ்ணராகவும் கடைசியாக போகனாகவும் இந்த பூவுலகில் பிறந்து 18 சித்தர்களில் ஒருவராக இருந்து மக்களுடன் மக்களாக வாழ்ந்து இந்த கலியுகத்தை முடிக்க வல்ல ஏக சித்தர் இவர் ஒருவரே இவரைப் பற்றி விரிவாகவும் பல அரிய தகவலுடன் இப்பதிவில் காண்போம்

தமிழனின் புகழ் உலகம் முழுவதும் பரவவேண்டும் உலகத்தின் முதல் இனமும் முதல்மொழியும் முதல் அறிவியல் விஞ்சானியும் முதல் மருந்துவனும் முதல் ஆன்மீகவாதியும் தமிழனே. இப்படி தமிழனின்
புகழை மறந்து நாத்திகம் பேசியும் மதமாற்றம் செய்தும் தமிழனின் பெருமை மறைக்கபட்டுவிட்டது. 

சித்தர் பரம்பரை திருக்கயிலாய பரம்பரையின், நந்தி நாதன் வழி வந்த, திருமூல நாதன், இவர்வழி தோன்றிய காலாங்கி நாதன்,  இவருடைய ஏக வாரிசு போகர் 

இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 3,000 ஆண்டுகள் முன்னாடி பிறந்தவர் போகர் என்ற மாபெரும் சித்தர். பழனியில் இருக்கும் நவபாஷாண சிலையை செய்தவரும் இவர்தான். இவரை பற்றிய தகவல் மிக ஆச்சரியத்தை கொடுக்கும்.

மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்பமுறை, யோகாப்பியாசம் என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் உண்டு என்றால் அவர், போகர்தான்.

அகத்தியர், இவரைத்தான் முதல் சித்தன் என்று ஒரு பாட்டின் மூலம், கூறுகிறார். சமயத்தில் உதவியவர்களைப் பார்த்து 'கடவுளைப் போல உதவினீர்கள்... என் வரையில் நீங்களே கடவுள்' என்று சொல்வோம், அல்லவா...! அப்படித்தான், போகரின் செயல்திறத்தைப் பார்த்து இவரே முதல் சித்தன் என்று அகத்தியர் கூறியதும். உண்மையில், முதல் சித்தன் அந்த ஆதிசிவன்தான். அவனே மதுரையம்பதியில் சுந்தரானந்தனாக வந்து அருளிச் சென்றான்.

போகரைப்பார்த்து வியப்பதற்கு ஏராளமான காரண காரியங்கள் உள்ளன. பொதுவில் சித்தர் எனப்படுபவர்கள், இந்த உலகம் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளை புறந்தள்ளியவர்கள்.

ஆலயம் செல்லுதல், விக்ரகங்களை பூஜித்தல், ஆசார சடங்குகளில் நாட்டம் கொள்ளுதல் என்பதெல்லாம் விடுத்து, தங்களுக்குள்ளேயே இறைவனைக் கண்டு இன்புற்றவர்கள்.

ஆனால் இதில், போகர் பெரிதும் வேறுபட்டே தெரிகிறார். பல சித்தர்கள் போல், இவரும் ஒரு சிவத் தொண்டரே. அதே சமயம், அன்னை உமையை தியானித்து அவளருளையும் பெற்றவர். அவளது உபதேசம் கேட்டு பழனி மலைக்குச் சென்று தவம் செய்து முருகனை தண்டாயுத பாணியாகவே தரிசனம் செய்தவர்.

உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக, தான் தரிசித்த தண்டாயுபாணிக்கு நவபாஷாணத்தால் சிலை எடுத்தவர். பாஷாணங்களைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதம்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம்.

அவைகளை உரிய முறையில் சேர்ந்துப் பிசைந்தால்தான் உறுதியான, ஒரு பொதுவான பாஷாணம் உருவாகும். இதை நயனங்களால் பார்த்தாலேகூட போதும். அதிலிருந்து வெளிப்படும் நுட்பமான கதிர்வீச்சு, கண்வழியாக உடம்பின் உள்ளும், உடம்பின் புறத்திலும் படிந்து, நலம் ஏற்படும். இதன்மேல் பட்டு வழியும் பொருள் எதுவாயினும் அதுவும் மருத்துவ குணம் கொண்டு தீராத வியாதியை எல்லாம் தீர்த்து வைக்கும்.

உயர்வான பாஷாணங்கள் ஒன்பதை தேர்வு செய்து அதைக் கொண்டு போகர் செய்ததுதான் பழனிமுருகனின் மூலத் திரு உருவம். அவ்வாறு செய்ததோடல்லாமல், அவ்வுருவத்திற்கு ஏற்ற வழிபாட்டு முறையை ஒரு புதிய சித்தாகமமாகவே உருவாக்கி அதையும் நடைமுறைப்படுத்தியவர் போகர்.
மனிதப் பிறப்பானது கோள்களால் நிர்வகிக்கப்படுவதை உணர்ந்து அந்தக் கோள்களின் குணங்களைக் கொண்ட ஒன்பது பாஷாணத்தை தேர்வுசெய்து அதிலிருந்து தண்டாயுத பாணியை செய்து, கோள்களை ஓர் உருவுக்குள் அடக்கிப் பூட்டியவர் போகர் என்றும் கூறுவர்.

தண்டாயுத பாணியை எவர் வந்து தரிசித்து வணங்கினாலும் நவ கோள்களையும் ஒருசேர வணங்கிய ஒரு வாய்ப்பும் அவர்களுக்கு உண்டாவது, இதனுள் அடங்கிக் கிடக்கும் இன்னொரு நுட்பம்.

இப்படி பழனியம்பதியில் முருக வழிபாட்டிற்கு களம் அமைத்த போகரின் வாழ்க்கையும் ஒரு வகையில் நவரசங்களால் ஆனதுதான். 
ஆனால்,நவசித்தர்களில் ஒருவரான காலாங்கி நாதரின் மாணவர் இவர் என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒரு செய்தி. அதை இவரது, அரிய நூல்களுள் ஒன்றான 'போகர் ஏழாயிரம்' எனும் நூலின் வழி அறியலாம்.
பதினெண் சித்தர் வரிசை தோன்றுவதற்கு முன்பு, நவசித்தர்களே பிரதானமாகக் கருதப்பட்டனர். மேருமலைதான் இவர்களின் யோகஸ்தலம். மேருவும் இமயமும் உலகப் பற்றில்லாத சித்த புருஷர்கள் பெருமளவு சஞ்சாரம் செய்யும் ஒரு திறந்தவெளியாகவே விளங்கியது.

இங்கேதான் நவநாத சித்தர்கள் வசித்து வந்தனர். அவர்களுள் ஒருவர், காலாங்கிநாதர். காலாங்கி நாதர், போகர் வந்த சமயம் மகாசமாதியில் இருந்தார்.

போகர், சமாதியில் உள்ள காலாங்கி நாதரை வணங்கி, அவ்விரு மலைகளிலும் பல தாது வகைகளை தேடிக்கண்டு பிடித்தார். அதைக் கொண்டு பல காய கற்பங்களை செய்து, தானே உண்டு பார்த்து அதன் பயனையும் உடனே அடைந்தார். இதனால் அவரது தேகம் மிகவும் திடமாகியது. மேலும், வானவெளியில் பறப்பது, நீர்மேல் நடப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் மிக மிகச் சாதாரணமாகியது. இதனால் போகருக்குள் கர்வம் துளிர்த்துவிட்டது.
துரோணருக்கு ஓர் ஏகலைவன் போல தானும் குருவை வணங்கி அந்த அருளாலேயே பல தாதுக்களை கண்டறிந்து விட்ட ஒருவன்; உண்மையில் காலாங்கி நாதருக்கு சீடர்கள் இருந்திருந்தால், அவர்கள் கூட இப்படி எல்லாம் அறிந்திருக்க மாட்டார்கள்; என்றெல்லாம் நினைக்கத் தொடங்கிவிட்டார்.
இதனால், அந்த மலைத் தலத்தில் பணிவாக பார்த்துப் பார்த்து நடந்தவர், நிமிர்ந்து நெஞ்சு நிமிர்த்தி நடக்க ஆரம்பித்தார். மேருவிலும் இமயத்திலும் சூட்சம வடிவில் பலநூறு சித்த புருஷர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களில் பலரது தவம், போகரின் கர்வமான நடையால் கலைந்தது. அவர்கள் கண்விழித்ததோடு போகருக்கும் காட்சியளித்தனர்.

திடுக்கிட்ட போகரிடம், நாங்கள் காலாங்கி நாதரின் மாணவர்கள். பலப்பல யுகங்களாக எங்களை மறந்து தவம் செய்தபடி இருக்கிறோம் என்றார்கள். அத்தனை யுகங்களும் சில நாட்கள் கடந்தது போலத்தான் இருக்கிறது என்று அவர்கள் கூற, போகருக்கு அது ஆச்சரிய அதிர்ச்சியாகியது.
அப்படியானால் அவர்கள் தவத்தை எவ்வளவு பெரிய விஷயமாக கொண்டிருக்க வேண்டும் என்றும் தோன்றியது. அந்த நொடி, தான் கற்ற தாதுவித்தை எல்லாம் மிக அற்பமானது என்கிற எண்ணம் ஏற்பட்டு அவரது கர்வமும் அடங்கியது. அதை அறிந்த அந்த சித்தபுருஷர்கள், போகருக்கு பல சித்த ரகசியங்களை போதித்தார்கள்.

ஒரு சித்தர், போகர்மீது பெரும்கனிவு கொண்டு, 'அமிர்தமணிப்பழம்' என்னும் தேவக்கனி மரம் ஒன்றை அந்த வெளியில் காட்டி, அதன் பழங்களை உண்ணச் சொன்னார். அதை உண்டால் ஆயுள்முழுக்க பசிக்காது, நரைக்காது, முதுமை உண்டாகாது. இதில் உள்ள பழத்தை உண்டுவிட்டே இங்குள்ளோர் காலத்தை வென்று தவம் செய்கின்றனர் என்று கூறிட,போகர் அந்தக் கனிகளை உண்டு உடம்பின் பிணியாகிய 'பசி, தாகம், மூப்பு' என்கிற மூன்றிலிருந்தும் விடுதலை பெற்றார்.

இப்படி படிப்படியாக முன்னேறிய போகருக்குள் சில விசித்திரமான எண்ணங்களும் ஏற்பட்டன. அவை முழுக்க முழுக்க மனித சமுதாயம் தொடர்பானவையே..

ஒரு உயிர் எதனால் மனிதப் பிறப்பெடுக்கிறது? அப்படிப் பிறக்கும்போது அது எதன் அடிப்படையில் ஏழையின் வயிற்றிலும், பணக்காரனின் வயிற்றிலும் பிறக்கிறது? இறப்புக்குப்பின் கொண்டு செல்வது எதுவும் இல்லை என்று தெரிந்தும் வாழும் நாளில் மனிதன் ஏன் ஆசையின் பிடியிலேயே சிக்கிக் கிடக்கிறான்? எவ்வளவு முயன்றும் அவனால் மரணத்தை ஏன் வெற்றி கொள்ள முடியவில்லை?

இப்படிப் பலவித கேள்விகள் போகரை ஆட்டிப்படைத்தன. மொத்தத்தில் மனித சமூகமே வாழத் தெரியாமல் வாழ்ந்து விதியின் கைப்பாவையாக இழுத்துச் செல்லப்படுவது போல உணர்ந்தவர், மனித சமூகத்தை காப்பாற்றியே தீர வேண்டும் என்று எண்ணம் கொண்டார்.

இதனால், தானறிந்த மருத்துவ மூலிகை ரகசியங்களை நூலாக எழுதினார் அவைதான் 'போகர் ஏழாயிரம்', போகர் நிகண்டு, 17000 சூத்திரம், 700 யோகம் போன்றவை.

இவர் உள்ளத்தில் மனித சமூகத்தை நோயின்றி வாழவைக்கும், அரிய குறிப்புகள் தோன்றின.

அதேசமயம், இவருக்கு எதிர்ப்பும் தோன்றியது. பல சித்த புருஷர்கள் இவரை பெரிதும் எதிர்த்தனர்.

சித்த ரகசியங்களை எழுதிவைப்பது ஆபத்து என்றனர். மனிதன் அனுபவிக்க வேண்டிய கர்மங்களை முற்றாக நீக்க முயற்சிப்பது இயற்கைக்கே ஊறு விளைவிக்கும் என்றெல்லாம் புகார்கள் கூறினர். போகர் அவற்றை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. சஞ்சீவி மூலிகை, ஒருவர் கையிலும் அகப்படாதபடி விலகி ஓடும் இயல்பு உடையது. இதை அறிந்த போகர், அதை ஒரு மந்திரத்தால் கட்டி பின்பு அதை கைப்பற்றி காட்டினார்.

அந்த மந்திரம், தம்பணா மந்திரம் எனப்படுகிறது. இன்றும் காடுகளில் மூலிகை தேடிச்செல்வோர் தம்பணா மந்திரத்தை மானசீகமாக உச்சரித்து, காணப் பெறாத மூலிகைகளையும்கண்டு அதைக் கைப்பற்றுவர்.
அமிர்தத்துக்கு இணையான ஆதிரசத்தையே இவர் கண்டறிந்தார் என்பர். அதைக் கொண்டு இரும்பைத் தங்கமாக்கலாம். ஆதிரசமோ, அமிர்தமோ தேவர்களுக்கே உரியது. அசுரர்களோ மானிடர்களோ அதை உண்டால் அதனால் உலகம் அழிந்து விடும் அபாய நிலை உருவாகும் என்று பல சித்த புருஷர்கள் அஞ்சினர்.

தங்கள் அச்சத்தை தட்சிணா மூர்த்தியாகிய சிவபிரானிடம் கூறிட, சிவபிரானும் அவர்களது கவலையை நீக்குமூலமாக போகரை அடைந்து அவர் அறிந்து எழுதிய அவ்வளவு ரகசியங்களையும் கேட்டார்.

போகர் எழுதியதை, போகர் போல ஒரு சித்தரால் அன்றி சராசரி மனிதர்களால் விளங்கிக் கொள்ள இயலாது என்பதை அதன் மூலம் அறிந்த அவர், போகரின் முயற்சியை ஆசிர்வதிக்கவேசெய்தார். அதன்பின் இவர் புகழ் பலமடங்கு பெருகியது. பலரும் இவரிடம் வந்து கற்பங்கள், குளிகைகள் பெற்றுச் சென்றனர்.

மொத்தத்தில் மனித சமூகத்தை, இம்மண்ணில் உள்ள பொருட்களைக் கொண்டே, தேவர்களுக்கும் கந்தவர்வர்களுக்கும் இணையாக ஆக்கினார்.
அண்டை நாடான சீன தேசமும், நமது நாவலந் தீவாகிய பாரத தேசமும், புவி இயலில் அனேக ஒற்றுமைகள் கொண்டிருந்தன. இதனால், மூலிகைச் செல்வங்கள் இவ்விரு தேசங்களில்தான் மிகுந்து காணப்பட்டது. எனவே வான்வழியாக அடிக்கடி சீனதேசம் சென்று வருவது போகரின் வழக்கமாகியது.

அங்கே, 'போ யாங்' என்ற ஒரு சீன யோகியின் உடம்புக்குள், கூடுவிட்டு கூடு பாயும் முறையில் புகுந்து, சீனராகவே வாழ்ந்தார் என்றும் ஒரு கதை உண்டு.
சீனர்கள், இந்தியர்களில் இருந்து உணவுப் பழக்க வழக்கங்களில் பெரிதும் வேறுபட்டவர்கள். இந்திய உணவில் எண்ணெய், கொழுப்பு சத்து, காரம்,
புளிப்பு, உவர்ப்பு என்றெல்லாம் பல சுவைகள் உண்டு. சீனர்களிடம் அப்படி இல்லை. அவர்களது உணவுமுறை ரஜோ குணத்தை தூண்டுவதாகவும்; எலும்பு, நரம்பு இவைகளை வலுவாக வைத்துக்கொள்ளத் தக்கதாகவும் இருந்தமையால், அவர்களிடம் பல வித்யாசமான பயிற்சி முறைகள் இருந்தன.அதில் 'ரஜோலி' என்னும் யோக முறையும் ஒன்று.
போகர் அதை ஆர்வத்துடன் பழகிடும்போது தலையில் அடிபட்டு அவருக்குள் அவர் பற்றிய அவ்வளவு எண்ணங்களும் மறைந்துபோன. பின்னர், அவரைத் தேடிக்கொண்டு வந்த போகரின் மாணாக்கர்களில் ஒருவரான புலிப்பாணி, போகரின் நிலை கண்டு கலங்கி, அவரைத் தன் முதுகில் சுமந்துகொண்டு இந்தியா திரும்பினார் என்றும் சொல்வர்.

அதன்பின் குருவுக்கே அவரிடம் கற்றதை உபதேசித்து, அவருக்குள் மீண்டும் பழைய எண்ணங்களை தோற்றுவித்தார். ஒரு சீடன், குருவுக்கு உபதேசிப்பது என்பது காரியப் பிழையில் முடிந்து, முடிவில் அவனையே சாபத்திற்கு ஆளாக்கிவிடும் என்பதால்,புலிப்பாணி, போகரின் தண்டத்திற்கு உபதேசிப்பது போல போகருக்கு உபதேசித்து போகரை மீண்டும் நிலை நிறுத்தினார். அதன்பின், போகர் ஒரு புத்துயிர்ப்போடு எழுந்தார்.

பலவித அனுபவங்களால் பழுத்த ஞானியாகிவிட்ட அவர், இறுதியாக வந்து சேர்ந்த இடம்தான் பழனி. அங்கேயே முக்தியும் அவருக்குக் கிட்டியது. மொத்தத்தில் போகர் என்றால் 'நவநாயகர்' என்றும் கூறலாம்.
காக புஜண்டர் தமது பெருநூல் காவியம் 144வது பாடலில் கூறியுள்ளார். 
போக சித்தருக்கு 63 சீடர்கள் இருந்தனர்.

இமயமலையில் தங்கியிருந்த பொழுது அறுபத்து மூன்று சீடர்களுக்கு இவருக்கு தெரிந்த கலைகளை கற்றுக்கொடுத்தார். இவர் சீடர்களில் இடைக்காடர், கருவூரார், சட்டைமுனி, புலிப்பாணி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர். மேரு மலையில் மறைந்து கிடைக்கும் கண்ணுக்கு புலப்பாடாத செல்வங்களை கண்டறிந்து மக்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்பது இவர் எண்ணம். இவர் சீடர்களுக்கு அணைத்து கலைகளையும் கற்றுக்கொடுத்து தேர்வு நடத்தி மதிப்பீடு செய்த பின்னர், நாடு முழுவதும் மக்களுக்கு சேவை செய்ய அனுப்பிவைத்தார்.

இவரை பற்றிய தகவல் மிக ஆச்சரியத்தை கொடுக்கும். இவரை பற்றிய ஒரு தகவலை அவர் இயற்றிய சப்தகாண்டம் என்ற நுலில் அவர் கூறிப்பிட்ட தகவலைப் படித்து ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்று விட்டேன். இதைப் பற்றி அடுத்த வீடியோவில் தெளிவாகவும் விரிவாகவும் பார்ப்போம். இப்பேர்பட்ட தமிழனை உலகம் முழுவுதும் தெரியபடுத்த வேண்டும் என்பதே என் நோக்கம். 

போகர் பெருமானார் அதிசய சித்தர் மட்டுமல்ல, அற்ப்புத சித்தரும் கூட... 
உண்மையில் முதன் முதலில்  உலகம் சுற்றிய வாலிபர் போகர் தான்  
அவன் தலைமையில் இனி திருவியர்க்கையின் ஆட்சி மலரும்! திருவருளின் சம்மதம் சித்தர்களுக்கு அருளப்பட்டு விட்டது. இனி காரியத்தை எதிர் நோக்கலாம்.